கார குழம்பு - Kara Kuzhambu - Simple & Easy kuzhambu


நிறைய Blog Readers கேட்டு கொண்ட Recipe இது. எளிதில் செய்ய கூடிய குழம்பு இது...

சமைக்க தேவைப்படும் நேரம் : 20  நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
·        வெங்காயம் – 2
·        தக்காளி – 1 பெரியது
·        பூண்டு – 10 – 15 பல்
·        கருவேப்பிலை – 5 இலை

சேர்க்க வேண்டிய தூள் வகைகள் :
·        மிளகாய் தூள் – 2 தே. கரண்டி
·        தனியா தூள் – 2 தே. கரண்டி
·        மஞ்சள் தூள் – 1/4 தே.கரண்டி
·        உப்பு – தேவையான அளவு
மிளகாய் தூள் + தனியா தூள் தனியாக சேர்க்காமல் குழம்பு மிளகாய் தூள் 1 + 1/2 மேஜை கரண்டி பயன்படுத்து கொள்ளலாம்.

தாளிக்க :
·        நல்லெண்ணெய் – 2 மேஜை கரண்டி
·        கடுகு , வெந்தயம் – தாளிக்க

கரைத்து கொள்ள :
·        தண்ணீர் – 2 கப்
·        புளி – பெரிய நெல்லிக்காய் அளவு
·        (அல்லது ) புளி பேஸ்ட் (Tamrind Paste) – 1 தே.கரண்டி

செய்முறை :
·        பூண்டினை தோல் நீக்கி கொள்ளவும். வெங்காயம் + தக்காளியினை நீட்டாக வெட்டி கொள்ளவும்.

·        கடாயில் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்துள்ள பொருட்கள் சேர்த்து தாளித்து கொள்ளவும். இத்துடன் பூண்டினை சேர்த்து நன்றாக வதக்கி கொள்ளவும்.


·        பூண்டு நன்றாக வதங்கிய பிறகு, வெங்காயம் சேர்த்து 2 – 3 நிமிடங்கள் வதக்கவும்.


·        வெங்காயம் வதங்கிய பிறகு தக்காளி சேர்த்து மேலும் 2 - 3 நிமிடங்கள் வதக்கவும்.
·        பிறகு சேர்க்க கொடுத்துள்ள தூள் வகைகள் + கருவேப்பிலை சேர்த்து கலந்து 1 நிமிடம் வதக்கவும்.
·        புளியினை  (அ) புளி பேஸ்டினை 2 – 2 ½ கப் தண்ணீரில் கரைத்து கொள்ளவும். அந்த தண்ணீரினை கடாயில் ஊற்றவும்.


·        குழம்பினை சுமார் 10 நிமிடங்கள், அதாவது குழம்பு Thick ஆகும்வரை கொதிக்கவிடவும்.


·        சுவையான காரகுழம்பு ரெடி. இதனை சாதம், அப்பளமுடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.

குறிப்பு :
நல்லெண்ணெய் சேர்த்து குழம்பு செய்வதால் மிகவும் சுவையாக இருக்கும்.

நிறைய எண்ணெய் சேர்க்க வேண்டும் என்று தேவையில்லை. கொடுத்துள்ள அளவே போதுமானது.

பூண்டு பெரிய பல் என்றாக இரண்டாக வெட்டி கொள்ளவும்.

அவரவர் காரத்திற்கு ஏற்றாற் போல தூள் வகையினை சேர்த்து கொள்ளவும்.

மிளகாய் தூள் + தனியா தூள் என்று இல்லாமல், குழம்பு தூள் கூட சேர்த்து கொள்ளலாம்.

பூண்டு + வெங்காயம் + தக்காளி ஒவ்வொன்றையும் நன்றாக வதக்கி கொள்ளவும்.


7 comments:

S.Menaga said...

சூப்பரா இருக்கு...

திண்டுக்கல் தனபாலன் said...

ஊறுகாய் மாதிரி ஜிவ்...! நன்றி...

சுபத்ரா said...

சூடான சாதத்தில் (நெய்யோடு) இந்தக் குழம்பைக் கொஞ்சமா விட்டுப் பிசைந்து அப்பளம் வைத்துச் சாப்பிட்டால் தனி ருசி தான் :-)

Kalpana Sareesh said...

idha adichikke vera edhume illa..

NI SHA said...

NICE

NI SHA said...

nice

Anonymous said...

wow!!

Related Posts Plugin for WordPress, Blogger...