குடைமிளகாய் கார்ன் சால்சா - Bell Pepper Corn Salsa - Mexican Cooking


சால்சா செய்ய தேவைப்படும் நேரம் : 5 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
·        க்ரில்ட் கார்ன் – 1 கப்
·        பச்சைகுடைமிளகாய் – 1/2 கப் நறுக்கியது
·        சிவப்பு குடைமிளகாய் – 1/4 கப் நறுக்கியது
·        தக்காளி – 1/4 நறுக்கியது
·        பச்சைமிளகாய் – 1 பொடியாக நறுக்கியது
·        எலுமிச்சை சாறு – 1 மேஜை கரண்டி 
·        உப்பு – தேவையான அளவு
·        கொத்தமல்லி – சிறிதளவு

செய்முறை :
கார்னை அடுப்பில் சுட்டு எடுத்து கொள்ளவும். அதில் இருந்து கார்னினை தனியாக எடுத்து கொள்ளவும்.


அனைத்து பொருட்களையும் மிகவும் பொடியாக வெட்டி கொள்ளவும்.


ஒரு பவுலில் அனைத்து பொருட்களும் சேர்த்து கலந்து கொள்ளவும்.

சுவையான சத்தான சால்சா ரெடி. இதனை அப்படியே சாலடாக சாப்பிடலாம் அல்லது Tortilla Chipsயுடன் சாப்பிடலாம்.


குறிப்பு :

கார்னை சூடும் பொழுது அல்லது க்ரில் செய்யும் பொழுது கண்டிப்பாக எலுமிச்சை சாறு சேர்த்து செய்ய வேண்டும். அப்பொழுது தான் அதனுடைய சத்துகள் (Vitamins) சேர்த்து இருக்கும். 

3 comments:

Saratha said...

பார்ப்பதற்கு நல்ல கலர்புல்லாக இருக்கிறது

Premas Culinary said...

Very healthy recipe,yummy...

Veena Theagarajan said...

super tempting and healthy salad

Related Posts Plugin for WordPress, Blogger...