காரட் அல்வா - Carrot Halwa - Guest Post by Pratheepa


ரொம்ப நாளாகவே இந்த காரட் அல்வா Post போட வேண்டும் என்ற எண்ணத்திலேயே இருந்தேன்…அப்பறம், தான் தெரியும் Pratheepa இந்த அல்வா செய்வதில் மிகவும் ஸ்பெஷலிஸ்ட்….அதன் பிறகு, pratheepaவையே இதனை Guest Post போட கேட்டு கொண்டேன்…அவங்க சரி சொன்னதும் எனக்கு மிகவும் சந்தோசம்…

இந்த அல்வாவினை கொடுத்துள்ள அளவு , செய்முறை படி செய்தால் மிகவும் சுவையாகவும் , கண்டிப்பாக திகட்டாமலும் இருக்கும். Thanks Pratheepa….

நீங்கள் செய்து பார்த்து உங்கள் கருத்தினை தெரிவிக்கவும்.


சமைக்க தேவைப்படும் நேரம் : 40 – 45 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
·        காரட் – 4 கப் துறுவியது
·        சக்கரை – 3/4 கப்
·        பால் – 2 கப்
·        முந்திரி – 1/4 கப்
·        திரட்சை – 3 மேஜை கரண்டி
·        பட்டர் – 1 Stick (விரும்பினால் கூடுதலாக சேர்த்து கொள்ளலாம்)
·        ஏலக்காய் - 2

செய்முறை :
·        காரட்டினை தோல் சீவி துறுவி கொள்ளவும். 


·        வெண்ணெயினை கடாயில் போட்டு காயவிடவும்.  

·        பட்டர் சிறிது உருகியதும், துறுவிய காரடினை போட்டு 3 - 4 நிமிடங்கள் வதக்கவும்.


·        காரட் சிறிது வதங்கியதும், அத்துடன் முந்திரி  சேர்த்து தண்ணீர் வற்றும் வரை மேலும் வதக்கவும்.
·        நன்றாக வதங்கிய பிறகு, பால் சேர்த்து வேகவிடவும்.


·        ஏலக்காயினை தட்டி கொள்ளவும். வேகவைக்கும் காரட்டுடன் ஏலக்காய் + திரட்சை சேர்த்து தட்டு போட்டு மூடி பால் வற்றும் வரை (அதாவது சுமார் 6 – 8 நிமிடங்கள் ) நன்றாக வேகவிடவும்.·        இதன் பிறகு, தேவையான அளவு சக்கரை சேர்த்து கொள்ளவும்.


·        சக்கரை சேர்த்து பிறகு, சுமார் 5 – 6 நிமிடங்கள் வேகவிடவும்.·        சுவையான ரிச்சான காரட் அல்வா ரெடி. இதனை சூடாகவோ அல்லது chill செய்து சாப்பிடவோ சுவையாக இருக்கும்.குறிப்பு :
காரட் கண்டிப்பாக துறுவி கொள்ளவும்.  இதனை Cheese Graterயில் துறுவினால் மிகவும் நன்றாக இருக்கும்.

நெய் சேர்ப்பதற்கு பதிலாக வெண்ணெய் சேர்த்து செய்தால் அல்வா, எவ்வளவு சாப்பிட்டாலும் திகட்டாமல் இருக்கும்.


முந்திரி + திரட்சையினை காரட் வதக்கும் பொழுதே சேர்த்தால் சுவை சூப்பராக இருக்கும்.

5 comments:

Saratha said...

பார்க்கும் போதே சாப்பிட வேண்டும் போல் இருக்கிறது .

சுபத்ரா said...

wowwwwwwwwww!!!!!!!!!!!!!!!!!!!!

பார்வதி இராமச்சந்திரன். said...

செய்முறை, தெளிவாக இருக்கிறது. கட்டாயம் செய்து பார்த்து விடுகிறேன். படங்களும் சூப்பர்!!. ஒரு சின்ன சந்தேகம். இதில் மில்க் மெய்ட் சேர்க்கலாமா?. அப்படி சேர்த்தால், பாலின் அளவை, கம்மி செய்ய வேண்டுமா?. மிக்க நன்றி.

Priya Anandakumar said...

One very yummy and delicious halwa....

Priya Suresh said...

Yaruku than pidikathu intha halwa, supera irruku Geetha, pratheepavoda guest post Kalakals.

Related Posts Plugin for WordPress, Blogger...