முருங்கைகாய் சட்னி - Drumstick Chutney - Murungakkai Chutney - Side Dish for Idly / Dosai Recipe


முருங்கைகாயில் எப்பொழுதும் சாம்பார், குழம்பு, சூப் என்று செய்யாமல் மாறுதலாக இந்த சட்னியினை செய்து பாருங்க….ரொம்ப சூப்பராக இருக்கும்…

சமைக்க தேவைப்படும் நேரம் : 20 - 25 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
·        முருங்கைக்காய் – 3
·        வெங்காயம் – 2
·        தக்காளி – 1
·        கருவேப்பிலை – 5 இலை

சேர்க்க வேண்டிய தூள் வகைகள் :
·        மஞ்சள் தூள் – 1/4 தே.கரண்டி
·        மிளகாய் தூள் – 1 தே.கரண்டி
·        உப்பு – தேவையான அளவு

தாளிக்க :
·        எண்ணெய் – 1 மேஜை கரண்டி
·        கடுகு, உளுத்தம்பருப்பு – தாளிக்க

செய்முறை :
·        முருங்கைக்காயினை பெரிய பெரிய துண்டுகளாக வெட்டி கொள்ளவும். வெங்காயம் + தக்காளியினை பொடியாக நறுக்கி கொள்ளவும்.


·        ஒரு பாத்திரத்தில் முருங்கைகாய் முழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி அதனை வேகவிடவும்.


·        முருங்கைகாய் நன்றாக வெந்த பிறகு அதனை தண்ணீரில் இருந்து எடுத்து சிறிது நேரம் ஆறவைத்து கொள்ளவும்.

·        ஆறவைத்த முருங்கையின் சதை பகுதியினை மட்டும் ஒரு Spoon வைத்து தனியாக எடுத்து கொள்ளவும்.


·        கடாயில் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்துள்ள பொருட்கள் சேர்த்து தாளித்து கொள்ளவும். அத்துடன் பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயம் + கருவேப்பில்லை சேர்த்து வதக்கி கொள்ளவும்.


·        வெங்காயம் சிறிது வதங்கிய பிறகு அத்துடன் தக்காளி + சேர்க்க கொடுத்துள்ள தூள் வகைகள் சேர்த்து வதக்கவும்.


·        இத்துடன் முருங்கைகாய் வேகவைத்த தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.


·        சிறிது கொதித்த பிறகு, அத்துடன் எடுத்து வைத்துள்ள முருங்கைகாய் சதை பகுதியினை சேர்த்து 3 – 4 நிமிடங்கள் வேகவிடவும்.


·        கடைசியில் கொத்தமல்லி தூவி பறிமாறவும். இந்த சட்னி இட்லி, தோசை, சப்பாத்தி போன்றவையுடன் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.


கவனிக்க :

இதனை தண்ணியாக இல்லாமல் தொக்கு மாதிரியும் செய்யலாம்.

11 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

இதுவரை செய்ததில்லை... செய்முறை விளக்கத்திற்கு நன்றி...

Subha Subramanian said...

Different chutney.........Like it

சாருஸ்ரீராஜ் said...

mouth watering geetha

Mahi said...

It's 6.35am here, your post makes me hungry! :) nice twist to usual chutney-sambar Geetha!

Priya Anandakumar said...

very healthy and delicious looking chutney Geetha...

Manickam sattanathan said...

வித விதமாக நீங்கள் அனைவரும் எழுத்தும் சமையல் குறிப்புகள் படிப்பதற்கே அலாதியான ஒரு சுவையாக இருக்கும். அனைவரும் படங்களை போட்டு அசத்துவது சிறப்பு.

Bharathy said...

I like this recipe!!

Priya Suresh said...

Wow, my grandma do thokku with drumsticks, ur chutney looks fabulous and healthy as well Geetha.

Saratha said...

வித்தியாசமான ரெசிபி . செய்து பார்க்கிறேன் .

Saratha said...

வித்தியாசமான ரெசிபி .செய்து பார்க்கிறேன் .

Saratha said...

வித்தியாசமான ரெசிபி . செய்து பார்க்கிறேன் .

Related Posts Plugin for WordPress, Blogger...