கப்ஸா ரைஸ் - அரேபியன் உணவு - Kabsa Rice - Traditional Arabic Rice - Guest Post by Manjula Nagarajan


கப்ஸா ரைஸ் மிகவும் பிரபலமான அரேபியன் உணவு(Arabian Food). மிகவும் Spciyயாக இல்லாமல் மிகவும் சுவையாக Chicken Flavorயுடன் இருக்கும்.

இந்த கப்ஸா ரைஸ்யினை என்னுடைய தோழி திருமதி. மஞ்சுளா நாகராஜன் , Guest postஆக செய்து கொடுத்தாங்க… அவங்களுடைய கப்ஸா ரைஸ் மிகவும் சூப்பராக இருக்கும்.

இந்த ரைஸ் செய்யும் பொழுது, தண்ணீர் அதிகம் சேர்க்காமல் அதற்கு பதிலாக கண்டிப்பாக சிக்கன் ஸ்டாக் சேர்த்து கொள்ளவும்.

உப்பின அளவினை பார்த்து கொள்ளவும். Chicken Stock + Chicken Cubeயிலேயே உப்பு இருப்பதால் உப்பின் அளவினை பார்த்து கொள்ளவும்.

இதில் வேகவைத்த சிக்கன் அவ்வளவு Spicyயாக இருக்காது. அதனால் அதனை விரும்பினால் மேலும் சிறிது பொடி சேர்த்து வறுத்து கொள்ளலாம்.

கண்டிப்பாக Dry Lemon சேர்த்து கொள்ளவும். அது இல்லை என்றால், எலுமிச்சை சாறு சேர்த்து கொள்ளலாம். ஆனால் சுவையில் சிறிது வித்தியாசம் தெரியும்.

Dry Lemonயில் 1 – 2 ஒட்டையினை கத்தியால் குத்தி கொள்ளலாம்.


சமைக்க தேவைப்படும் நேரம் : 40 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
·        சிக்கன் – 1/2 கிலோ
·        பாஸ்மதி அரிசி – 2 கப்
·        காரட் – 1/4 கப் துறுவியது
·        வெங்காயம் – 1
·        இஞ்சி பூண்டு – 1 தே.கரண்டி பொடியாக நறுக்கியது ( விரும்பினால்)
·        கருப்பு திரட்சை – 2 மேஜை கரண்டி
·        எண்ணெய் - தேவைக்கு


·        காய்ந்த எலுமிச்சை ( Dry Lemon ) – 1
·        தக்காளி பேஸ்ட் (Tomato Paste ) – 1 மேஜை கரண்டி
·        Chicken Broth – 3 கப்
·        Chicken Cube – 2
·        குங்குமபூ (saffron ) – 1 சிட்டிகை ( விரும்பினால் சேர்த்து கொள்ளவும்.)

அரைத்து கொள்ள :
·        தனியா (Coriander seeds ) – 2 மேஜை கரண்டி
·        மிளகு – 20 - 25
·        பட்டை – 1 பெரிய துண்டு
·        கிராம்பு – 4
·        ஏலக்காய் – 2
·        சீரகம் – 1  மேஜை கரண்டி

செய்முறை :
·        வெங்காயத்தினை நீளமாக வெட்டி கொள்ளவும். அரைக்க கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸியில் போட்டு மைய அரைத்து கொள்ளவும். அரிசியினை சுமார் 10 நிமிடங்கள் ஊறவைத்து கொள்ளவும்.


·        1 மேஜை கரண்டி எண்ணெய் ஊற்றி காரட் 2 மேஜை கரண்டி + காய்ந்த திரட்சையினை தனி தனியாக வறுத்து கொள்ளவும். (கடைசியில் அலங்கரிக்க )·        பாத்திரத்தில் 2 மேஜை கரண்டி எண்ணெய் ஊற்றி வெங்காயம் வதக்கி கொள்ளவும்.


·        2 நிமிடங்கள் கழித்து பொடியாக நறுக்கிய இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கி கொள்ளவும்.


·        3 நிமிடங்கள் கழித்து சிக்கன் துண்டுகளை சேர்த்து கொள்ளவும்.


·        அதன் மீது , மீதம் உள்ள காரட் + Dry Lemon + 2 மேஜை கரண்டி அரைத்த பொடி + Tomato Paste + saffron + 1/2  தே.கரண்டி உப்பு சேர்த்து கொள்ளவும்.


·        சுமார் 5 – 6 நிமிடங்கள் வேகவிடவும். (அதில் இருந்து எண்ணெய் வெளியியே வந்துவிடும்.)


·        அதன்பிறகு, 3 கப் சிக்கன் ஸ்டாக் + 1 கப் தண்ணீர் + Chicken Cube சேர்த்து கொதிக்கவிடவும்.


·        தண்ணீர் கொதிக்கும் பொழுது சிக்கன் துண்டுகளை வெளியே எடுத்துவிடவும். பிறகு அதில் ஊறவைத்த அரிசியினை சேர்க்கவும்.·        சுமார் 10 நிமிடங்கள் குறைந்த தீயில் தட்டு போட்டு மூடி அரிசியினை வேகவிடவும்.


·        அரிசி வேகும் நேரத்தில், சிக்கனுடன் மேலும் 1 மேஜை கரண்டி அரைத்த பொடியினை சேர்த்து ஒரு panயில் 1 மேஜை கரண்டி எண்ணெய் ஊற்றி வறுத்து கொள்ளவும். ( இந்த Step Optional ) .

·        இந்த 10 நிமிடங்களில், அரிசி இப்பொழுது 90 % வெந்து இருக்கும் . அதில் இந்த வறுத்த சிக்கனை சேர்த்து தட்டு போட்டு மூட்டி குறைந்த தீயில் மேலும் வேகவிடவும்.


·        சுவையான கப்ஸா ரைஸ் ரெடி. இதன் மீது வறுத்த காரட் + காய்ந்த திரட்சை சேர்த்து அலங்கரித்து பறிமாறவும்.  இதனை தயிர் பச்சடியுடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.


3 comments:

Priya Suresh said...

Heard lot about this rice but never had a chance to make them at home, now i have a recipe to refer, thanks to Manjula for sharing this fabulous rice.

Vimitha Anand said...

Paakave saapdanum pola irukku

Saratha said...

செய்முறை விளக்கம் அருமையாக இருக்கிறது

Related Posts Plugin for WordPress, Blogger...