மட்டன் கடலைப்பருப்பு குழம்பு - Mutton Kadalai paruppu Kuzhambu - Spicy Mutton Gravy with Chana Dalஇந்த குழம்பு எங்க மாமியாருடைய ஸ்பெஷல் ரெஸிபி…அவங்க இங்கே வந்து இருந்த பொழுது செய்து கொடுத்தது…Thanks Amma…

இந்த குழம்பில் எல்லா பொருட்களையும் அரைத்து வைத்து கொண்டால் சீக்கிரமாக செய்துவிடலாம்...

சமைக்க தேவைப்படும் நேரம் : 25 - 30  நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
·        மட்டன் – 1/2 கிலோ
·        கடலைப்பருப்பு – 1 கப்
·        உருளைகிழங்கு – 1/4 கிலோ
·        உப்பு – தேவையான அளவு

சேர்க்க வேண்டிய தூள் வகைகள் :
·        மஞ்சள் தூள் – 1/2 தே.கரண்டி
·        மிளகாய் தூள் – 2 தே.கரண்டி
·        தனியா தூள் – 2 தே.கரண்டி

அரைத்து கொள்ள :
·        வெங்காயம் – 1 பெரியது
·        இஞ்சி – 2 பெரிய துண்டு
·        பூண்டு – 5 பல்
·        தேங்காய் – 2 துண்டு பெரியது
·        சோம்பு – 1 மேஜை கரண்டி

கவனிக்க : பூண்டினை விட இஞ்சியின் அளவு அதிகம் இருக்க வேண்டும்.

தாளிக்க :
·        எண்ணெய் – 1 தே.கரண்டி
·        பட்டை, கிராம்பு – தாளிக்க
·        தக்காளி – 2 (பொடியாக நறுக்கியது)

கடைசியில் சேர்க்க :
·        கருவேப்பிலை – 5 இலை
·        கொத்தமல்லி – சிறிதளவு

செய்முறை :
·        மட்டனை சுத்தமாக கழுவி கொள்ளவும். உருளைகிழங்கினை தோல் நீக்கி பெரிய துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.


·        பிரஸர் குக்கரில் மட்டன் + கடலைப்பருப்பு + 1 கப் தண்ணீர் சேர்த்து கொள்ளவும்.

·        இத்துடன் கொடுத்துள்ள தூள் வகைகள் அனைத்தும் சேர்த்து கலந்து கொள்ளவும்.


·        பிரஸர் குக்கர் மூடி 4 – 5 விசில் வரும் வரை வேகவிடவும்.


·        விசில் வரும் வரை, அரைக்க கொடுத்துள்ள பொருட்களை  அரைத்து கொள்ளவும். முதலில் தேங்காய் துண்டுகள் + 1 மேஜை கரண்டி சோம்பு சேர்த்து மைய அரைத்து தனியாக வைத்து கொள்ளவும்.


·        இஞ்சி + பூண்டு சேர்த்து தனியாக கொரகொரப்பாக அரைத்து வைத்து கொள்ளவும்.


·        வெங்காயத்தினை பெரிய துண்டுகளாக நறுக்கி மிக்ஸியில் போட்டு கொரகொரவென அரைத்து எடுக்கவும்.


·        கடாயில் தாளிக்க கொடுத்துள்ள பொருட்கள் போட்டு தாளித்து அத்துடன் தக்காளி சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கி வைத்து கொள்ளவும்.


·        இதன் நடுவில் பிரஸர் குக்கர் விசில் வந்துவிடும். அதனை சிறிது நேரம் ஆறவிட்டு,  பிரஸர் குக்கர் மூடியினை திறந்து கொள்ளவும். இப்பொழுது மட்டன் நன்றாக வெந்து இருக்கும்.


·        அத்துடன் வதக்கி வைத்துள்ள தக்காளியினை சேர்த்து கலந்து கொள்ளவும்.


·        உடனே இஞ்சி பூண்டு விழுதினை சேர்த்து கொள்ளவும்.


·        இத்துடன் கொரகொரப்பாக அரைத்த வெங்காயத்தினை சேர்த்து கொள்ளவும்.


·        அனைத்தும் ஒன்று சேரும்மாறு கலந்து கொள்ளவும்.

·        பிறகு, நறுக்கி வைத்துள்ள உருளைகிழங்கினை சேர்த்து கொள்ளவும்.


·        தேங்காய் விழுது + (விரும்பினால் 1/2 கப் தண்ணீர் ) + தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.


·        இப்பொழுது பிரஸர் குக்கரினை மூடி அடுப்பில் வைத்து மேலும் 1 – 2 விசில் வரும் வரை வேகவைத்து கொள்ளவும்.


·        விசில் அடங்கியதும், பிரஸர் குக்கரின் மூடியினை திறந்து அத்துடன் கருவேப்பிலை + கொத்தமல்லி தூவி கொள்ளவும்.


·        சுவையான மட்டன் கடலைப்பருப்பு குழம்பு ரெடி. இதனை சாதம், தோசை, சப்பாத்தி போன்றவையுடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.

6 comments:

Saratha said...

இந்த ரெசிபி இப்போதுதான் கேள்விப்படுகிறேன் .நாளை செய்துவிட வேண்டியதுதான் .

Savitha said...

Romba interesting recipe Geetha.Try pannitu solren

திண்டுக்கல் தனபாலன் said...

அட போங்க... உங்களால் மட்டுமே இப்படி வித்தியாசமாக செய்ய முடியும்...!

திண்டுக்கல் தனபாலன் said...

நன்றி... வாழ்த்துக்கள்...

Shanthi said...

excellent recipe. neat and clear step wise picture..i really appreciate your work...keep rocking...

Priya Suresh said...

Bookmarking this dish,mouthwatering here.

Related Posts Plugin for WordPress, Blogger...