பயேயா - Paella - Rice Dish - Spain National Dish - One Pan Meal


பயேயா (Paella ) – ஸ்பெயின்(Spain) நாட்டின் National Dish... ரொம்ப நாளாக செய்ய வேண்டும் என்று List இருந்த உணவு…

இதனை Spainனில், ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு விதமாக செய்வாங்க…பொதுவாக,  மூன்று பிரபலாம முறையில் இதனை செய்வாங்க,
1. Valencia paella –  இதில் அரிசி, Meat , காய்கள் , பீன்ஸ் வகைகள் சேர்த்து செய்வாங்க..
2. Seafood Paella – இதில் Meatயிற்கு பதிலாக அனைத்து விதமான Seafood ( fish , prawns, squid, calamari , Mussels ) என்று அனைத்து சேர்த்து செய்வாங்க..
3. Mixed Paella – இதில் காய், Meat, Seafood என்று அனைத்தும் சேர்த்து செய்வாங்க…

இது One Pot Pan Meal…இந்த உணவில் நமக்கு தேவையான  Protein, Carbohydrate , Fat மற்றும் Vitamins & Minerals கிடைத்துவிடும்.


பயேயா சமைக்கும் பொழுது கவனிக்க வேண்டியவை,

·        Paellaவிற்கு மிகவும் Taste கொடுப்பது குங்குமபூ (Saffron) தான். அதனால் அதனை கண்டிப்பாக சேர்த்து கொள்ள வேண்டும். சிறிது குங்குமபூவினை 1 கப் சூடான தண்ணீர் அல்லது சிக்கன் ஸ்டாகில் 10 நிமிடங்கள் ஊறவைத்து கொண்டால் நல்லது.

·        இந்த உணவினை தயாரிக்க இதற்கு என்று ஒரு Special Pan – Paella Pan என்று கிடைக்கும். நான் என்னுடைய அடிகணமான அகலமான Non – stick Panயினை பயன்படுத்தி இருக்கின்றேன்.

·        Paellaவில், அரிசி + சிக்கன் ஸ்டாக் சேர்த்த பிறகு அதனை கிளறிவிட கூடாது. 

·        அதே மாதிரி இதனை தட்டு போட்டு மூடி வேகவைக்க கூடாது. அரிசி வேகும் பொழுது, முதலில் High Flameயில் சமைக்க வேண்டும். அதன் பிறகு Medium Flameயில் சமைக்க வேண்டும்.  ( விரும்பினால் அரிசி முக்கால் பதம் வெந்த பிறகு தட்டு போட்டு மூடி வேகவிடலாம்.)

·        தட்டு போட்டு மூடாமல் செய்வதால் காய்கள் நிறம்மாறாமல் Colorfulஆக இருக்கின்றது.

·        இதில் விரும்பினால் அரிசி 80% வெந்த பிறகு, Prawnயினை இதன் மீது பரவலாக வைத்து வேகவிடலாம்.  அது Seafood paella style மாதிரி இருக்கும்.

·        காரத்திற்கு Paprika பயன்படுத்த வேண்டும். அது ஒரு தனி சுவையினை கொடுக்கும். அது இல்லை என்றால், நம்முடைய மிளகாய் தூளினை பயன்படுத்தி கொள்ளவும்.

·        நான் கடையில் கிடைக்கும் தக்காளி சாஸ் சேர்க்காமல், தக்காளியினை அரைத்து சேர்த்து இருக்கின்றேன்.சமைக்க தேவைப்படும் நேரம் : 35 – 40 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
·        சிக்கன் – 1/2 கிலோ
·        அரிசி – Long Grain Rice – 2 கப்
·        சிக்கன் ஸ்டாக் – Chicken Stock – 3 கப்
·        பப்ரிக்கா (Paprika ) – 1 தே.கரண்டி
·        மிளகு தூள் – 1/2 தே.கரண்டி ( Optional)
·        குங்குமபூ – Saffron – 1 சிட்டிகை
·        உப்பு – தேவையான அளவு

தக்காளி சாஸ் :
·        தக்காளி – 2 பெரியது

சேர்க்க வேண்டிய காய்கள் :
·        குடைமிளகாய் – (பச்சை, சிவப்பு , மஞ்சள் )
·        வெங்காயம் – 1 சிறியது
·        வெங்காய தாள் – 2
·        பீன்ஸ் – 15
·        பச்சை பட்டாணி – 1 கப்
·        பூண்டு – 2 பல்

கடைசியில் சேர்க்க :
·        தக்காளி – 1
·        பார்சிலி இலை – Parsley Leaves -  சிறிதளவு

செய்முறை :
·        காய்களை Medium Size துண்டுகளாக வெட்டி கொள்ளவும். பூண்டினை பொடியாக நறுக்கி கொள்ளவும்.


·        சிக்கனை பெரிய துண்டுகளாக வெட்டி கொள்ளவும். கடாயில் 1 மேஜை கரண்டி ஆலிவ் ஆயில் ஊற்றி சிக்கனுடன் உப்பு + மிளகு தூள் சேர்த்து  வேகவைத்து கொள்ளவும்.


·        சிக்கனை 4 – 5 நிமிடங்கள் வேகவைத்து கொள்ளவும். (அதற்கு மேல் வேகவைக்க தேவையில்லை.)


·        சிக்கனை தனியாக எடுத்து வைத்து கொள்ளவும். அதே கடாயில் ஆவில் ஆயில் ஊற்றி பொடியாக நறுக்கிய பூண்டினை சேர்த்து வதக்கவும்.


·        அதன் பிறகு, அத்துடன் வெங்காயம் + வெங்காயதாள் சேர்த்து வதக்கி கொள்ளவும்.


·        பின்னர் பீன்ஸ் + பட்டாணி சேர்த்து வதக்கவும்.


·        1 நிமிடம் கழித்து அனைத்து வித குடைமிளகாயினையும் சேர்த்து கொள்ளவும்.


·        அத்துடன் Paprika powder + தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கவும்.


·        அனைத்தும் சேர்த்து  2 – 3 நிமிடங்கள் வதக்கி கொள்ளவும். இதன் மீது பாதி வெந்த சிக்கனை பரவலாக வைக்கவும்.


·        தக்காளியினை துண்டுகளாக நறுக்கி மிக்ஸியில் போட்டு மைய அரைத்து கொள்ளவும்.


·        தக்காளி சாஸினை  இதன் மீது ஊற்றிவிடவும்.


·        அரிசியினை சேர்த்து நன்றாக 1 – 2 நிமிடங்கள் கிளறிவிடவும்.


·        சிக்கனை ஸ்டாகினை சூடுபடுத்தி கொள்ளவும். சூடான சிக்கன் ஸ்டாக் + ஊறவைத்த குங்குமபூ சேர்த்து தண்ணீர் இரண்டும் சேர்த்து இதில் ஊற்றிவிடவும்.


·        மிதமான தீயில் தட்டு போடாமல் வேகவைத்து கொள்ளவும். (கவனிக்க : இதனை தண்ணீர் ஊற்றிய பிறகு கண்டிப்பாக கிளறிவிடகூடாது. பொதுவாக இதனை தட்டு போட்டு வேகவைக்க மாட்டாங்க…) நானும் இதனை தட்டு போட்டு மூடி  வேகவைக்கவில்லை. அப்படியே வேகவைத்தேன்..மிகவும் நன்றாக வந்தது. அடிக்கடி கடாயினை மட்டும் திருப்பிவிட்டு வேகவிடவும்.


·        கடைசியில் தக்காளி + Parsley இலையினை சேர்த்து கொள்ளவும்.


·        சுவையான பயேயா ரெடி. இதனை அப்படியே பறிமாறலாம். விரும்பினால் எதாவது ஒரு சாலடுடன் சாப்பிடலாம்.


·        பயேயே ரெடியானதும் , அதனை கிளறிவிட வேண்டாம். அப்படியே கரண்டியினை வைத்து ஒவ்வொருவருக்கும், பயேயாவினை எடுத்து தட்டில் வைத்து பறிமாறவும்.
6 comments:

Mahi said...

Colorful and interesting dish! Will it be good with quinoa and veggies? I mean vegetarian paella? :)

Shama Nagarajan said...

delicious

S.Menaga said...

Thxs for sharing it,will try it!!

Saratha said...

உங்கள் ரெசிபியின் பெயர் நல்ல புதுமையாக இருக்கிறது .

Priya Suresh said...

Romba pidicha Spanish dish..I'll add some prawns too.

Shanthi said...

very interesting...nice presentation..

Related Posts Plugin for WordPress, Blogger...