நவராத்திரி முதல் நாள் - வெண்பொங்கல் ( நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோவில்) - Navaratri Day 1 Recipes - Venpongal ( Nanganallur Anjaneyar Kovil Style)


எங்க அம்மா, சில வருடங்களுக்கு முன்பு நவராத்திரி சமயம், நவராத்திரி  எப்படி கொண்டாடுவது என்று ஒரு புத்தகத்தினை Print போட்டு அனைவருக்கும் கொடுத்தாங்க…எனக்கும் நான்கு வருடம் முன்பு, US வந்த பொழுது ஒரு Copy எடுத்து வந்தாங்க…

அதன்பிறகு, ஒவ்வொரு வருடமும் அதனை பற்றி எழுத வேண்டும் என்று எண்ணம் இருக்கும், ஆனால் எதோ காரணத்தினால் எழுத முடியவில்லை. இந்த வருடம் எழுத வேண்டும் என்று தோன்றியது. கண்டிப்பாக இது அனைவருக்கும் பயன்படும் என்று நினைக்கின்றேன்.

சரி, முதல் நாள் செய்ய வேண்டியவை பற்றி பார்ப்போம்….

முதல் நாள் – பாலா மஹேஸ்வரி

அரிசி மாவால் பொட்டு வைத்து கோலம் போட்டு அம்பாளை இரண்டு வயது குழந்தையாக கருதி வாசனை தைலம் பூசி நீராட்டி, ஆடை அணிவித்து பால குமாரி என அழைத்து சந்தனம், குங்குமம் என விளையாட்டு பொருட்கள் வைத்து வணங்க வேண்டும்.

முதல் நாள் பூஜிக்க வேண்டிய மலர்கள் – மல்லிகை, வில்வம்.
நிவேதனம் – வெண் பொங்கல்
விநியோகம் – சுண்டல், பழம்.
ராகம் – தோடி

ஸ்லோகம் :
குமாரஸ்ய  ச தத்வாநி  யாஸ்ருஜத்யபி    லீலயா |
காதீ நபிச தேவாந் தாந் குமாரிம் பூஜயாம் யஹம் ||நங்கநல்லூர் ஆஞ்சிநேயர் கோவில் ஸ்டைல் வெண்பொங்கல்

எப்பொழுதும் எங்க வீட்டில் அம்மா, பொங்கல் செய்யும் பொழுது மிளகினை பொடித்து தான் சேர்ப்பாங்க… நாங்கள் மிளகினை தூக்கி போட்ட மாட்டோம் என்று அப்படி செய்வாங்க…

நங்கநல்லூர் ஆஞ்சிநேயர் கோவில் பொங்கலின் ஸ்பெஷலே இதில் சீரகம் + மிளகினை பொடித்து சேர்ப்பது தான். நன்றி ப்ரேமா

சமைக்க தேவைப்படும் நேரம் : 25 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
·        பச்சரிசி – 1 கப்
·        பாசிப்பருப்பு – 1/2 கப்
·        இஞ்சி – சிறிய துண்டு
·        உப்பு – தேவையான அளவு

தாளித்து சேர்க்க :
·        பொடித்த சீரகம் – 1 தே.கரண்டி
·        பொடித்த மிளகு தூள் – 1 தே.கரண்டி
·        முந்திரி – சிறிதளவு
·        கருவேப்பில்லை – 5 இலை

செய்முறை :
·        அரிசி + பாசிப்பருப்பினை தண்ணீரில் கழுவி அத்துடன் தேவையான அளவு தண்ணீர் ( சுமார் 4 – 5 கப் தண்ணீர் )  + நறுக்கிய இஞ்சி + தேவையான அளவு உப்பு சேர்த்து 5 – 6 விசில் வரும் வரை வேகவிடவும்.


·        சீரகம் + மிளகினை ஒன்றும்பாதியுமாக பொடித்து கொள்ளவும்.

·        தாளிக்க கொடுத்துள்ள பொருட்கள் சேர்த்து தாளித்து கொள்ளவும்.


·        தாளித்த பொருட்களை பொங்கலுடன் சேர்த்து கலந்து கொள்ளவும்.

·        சுவையான சத்தான பொங்கல் ரெடி. இதனை சாம்பார், சட்னியுடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.


வேர்க்கடலை சுண்டல் - நவராத்திரி ஸ்பெஷல் - Verkadalai Sundal / Peanut Sundal - Navaratri Recipes


வேர்க்கடலை ஊறவைக்க : குறைந்ததது 3 – 4 மணி நேரம்
சமைக்க தேவைப்படும் நேரம் : 20 – 25 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
·        வேர்க்கடலை – 2 கப்
·        உப்பு – தேவையான அளவு

தாளிக்க :
·        எண்ணெய் – 1 தே.கரண்டி
·        கடுகு, உளுத்தமபருப்பு – தாளிக்க
·        கருவேப்பில்லை – 5 இலை
·        காய்ந்த மிளகாய் – 2

செய்முறை :
·        வேர்க்கடலையினை தேவையான தண்ணீரில் குறைந்தது 3 – 4 மணி நேரம் ஊறவைத்து கொள்ளவும்.

·        ஊறவைத்த வேர்க்கடலையினை பிரஸர் குக்கரில் தேவையான அளவு தண்ணீர் + உப்பு சேர்த்து 3 – 4 விசில் வரும் வரை வேகவைத்து கொள்ளவும்.


·        தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளித்து வேர்க்கடலையுடன் சேர்த்து கொள்ளவும்.


·        சுவையான சத்தான வேர்க்கடலை சுண்டல் ரெடி.

குறிப்பு :

விரும்பினால் இத்துடன் தேங்காய் துறுவல் சேர்த்து கொள்ளலாம்.சிக்கன் கீமா பிரியாணி - Chicken Keema Biryani - Biryani Varieties


சமைக்க தேவைப்படும் நேரம் : 30 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
·        சிக்கன் ( Boneless Skinless Chicken ) – 1/4 கிலோ
·        பாஸ்மதி அரிசி – 2 கப்
·        வெங்காயம் – 1 பெரியது
·        தக்காளி – 2
·        புதினா, கொத்தமல்லி – 1 கைபிடி அளவு
·        தயிர் – 1/2 கப்

சிக்கனுடன் சேர்த்து அரைக்க :
·        பூண்டு – 4 பல்
·        இஞ்சி – 1 பெரிய துண்டு
·        பச்சைமிளகாய் – 3 (காரத்திற்கு ஏற்றாற் போல)

சேர்க்க வேண்டிய தூள் வகைகள் :
·        மஞ்சள் தூள் – 1/2 தே.கரண்டி
·        மிளகாய் தூள் – 1/2 தே.கரண்டி
·        கரம் மசாலா தூள் – 1/4 தே.கரண்டி (விரும்பினால்)
·        உப்பு – தேவையான அளவு

தாளிக்க :
·        எண்ணெய் – 1 மேஜை கரண்டி
·        பட்டை – 1, கிராம்பு – 2, ஏலக்காய் – 2செய்முறை :
·        சிக்கனை சுத்தம் செய்து கொள்ளவும். சிக்கனுடன் அரைக்க கொடுத்துள்ள பொருட்கள் (இஞ்சி,பூண்டு, பச்சைமிளகாய் ) சேர்த்து மைய அரைத்து கொள்ளவும்.


·        அரிசியினை 10 – 15 நிமிடங்கள் தண்ணீரில் ஊறவைத்து கொள்ளவும். வெங்காயம் + தக்காளியினை நீளமாக வெட்டி வைக்கவும்.

·        பிரஸர் குக்கரில் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்துள்ள பொருட்கள் சேர்த்து தாளித்து கொள்ளவும். அத்துடன் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

·        வெங்காயம் வதங்கிய பிறகு தக்காளி சேர்த்து வதக்கவும்.


·        தக்காளி வதங்கிய பிறகு புதினா, கொத்தமல்லி + அரைத்த சிக்கன் சேர்த்து வதக்கவும்.

·        இத்துடன் சேர்க்க கொடுத்துள்ள தூள் வகைகள் சேர்த்து கலந்து கொள்ளவும்.


·        சிக்கனுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொள்ளவும். ( 1 கப் அரிசிக்கு 1 கப் + 1/2 கப் தண்ணீர் )

·        தண்ணீர் கொதிக்கும் பொழுது, ஊறவைத்த அரிசியினை கழுவி, சிக்கனுடன் சேர்த்து கலந்து கொள்ளவும்.

·        அரிசி சேர்த்த பிறகு, தயிர் சேர்த்து கலந்து கொள்ளவும்.


·        பிரஸர் குக்கரினை மூடி 1 விசில் வரும் வரை வேகவிடவும். விசில் அடங்கியதும், அதில் எலுமிச்சை பழம் பிழிந்து கிளறிவிடவும்.


·        சுவையான எளிதில் செய்ய கூடிய சிக்கன் கீமா பிரியாணி ரெடி. இத்துடன் ரய்தா, சிக்கன் ப்ரை அல்லது கிரேவியுடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.


குறிப்பு :
சிக்கன் அரைத்த செய்வதால் மிகவும் சுவையாக இருக்கும். குழந்தைகளும் மிகவும் விரும்பி சாப்படுவாங்க..


சிக்கனை அரைக்காமல், Minced chickenயே வாங்கி கொள்ளலாம்.

கோங்குரா சட்னி - Gongura Chutney - Side Dish for Idly & Dosa


கோங்குராவில் அதிக அளவு Iron, Vitamins, Folic acid & Anti-oxidants இருக்கின்றது. இதனை அடிக்கடி உணவில் சேர்த்து கொண்டால் நல்லது.

சமைக்க தேவைப்படும் நேரம் : 15 – 20 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
·        கோங்குரா (புளிச்ச கீரை ) – 2 கப்
·        வெங்காயம் – 1 (விரும்பினால் சேர்த்து கொள்ளவும்)
·        பூண்டு – 4 பல்
·        புளி – 1 சிறிய துண்டு
·        உப்பு – தேவையான அளவு

வறுத்து கொள்ள :
·        உளுத்தம்பருப்பு – 1 மேஜை கரண்டி
·        காய்ந்த மிளகாய் – 4
·        தேங்காய் துறுவல் – 2 மேஜை கரண்டி
·        தனியா – 1 தே.கரண்டி

தாளித்து சேர்க்க :
·        எண்ணெய் – 1 மேஜை கரண்டி
·        கடுகு – தாளிக்க
செய்முறை :
·        புளிச்சகீரையினை சுத்தம் செய்து கொள்ளவும். கடாயில் 1 தே.கரண்டி எண்ணெய் ஊற்றி வறுக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து வறுத்து தனியாக வைத்து கொள்ளவும்.


·        அதே கடாயில் புளிச்சகீரையினை வதக்கி கொள்ளவும். பின்னர் நறுக்கிய வெங்காயம் + பூண்டினை சேர்த்து வதக்கி வைக்கவும்.


·        மிக்ஸியில் முதலில் வறுத்த பொருட்களுடன் சிறிது தண்ணீர் சேர்த்து மைய அரைத்து கொள்ளவும்.

·        அத்துடன் வதக்கிய பொருட்கள் சேர்த்து அரைக்கவும். கடைசியில் தாளிக்க கொடுத்துள்ள பொருட்கள் சேர்த்து தாளித்து கொள்ளவும்.

·        இட்லி, தோசை, சூடான சாதம், தயிர் சாதம் போன்றவைக்கு சூப்பர் காம்பினேஷன் இந்த சட்னி.


குறிப்பு :
புளியின் அளவினை அவரவர் விருப்பத்திற்கு ஏற்றாற் மாதிரி வைத்து கொள்ளலாம்.

காரத்திற்கு காய்ந்த மிளகாயிற்கு பதிலாக பச்சைமிளகாய் சேர்த்து கொள்ளலாம்.

பூண்டினை தவிர்க்க விரும்புவர்கள், தாளிக்கும் பொழுது கண்டிப்பாக பெருங்காயம் சேர்த்து கொள்ளவும்.


இதில் தேங்காய் துறுவல் + உளுத்தம் பருப்பு + வெங்காயத்தினை நீக்கி கூடுதலாக பூண்டு சேர்த்து துவையல் செய்தால் சுவையாக இருக்கும்.

ப்ரோக்கோலி & சீஸ் ஸ்டஃப்டு சிக்கன் - Stuffed Chicken with Cheese & Broccoli - Healthy Chicken recipes


இந்த மாதிரி Stuffing  செய்யும் பொழுது சிக்கன்  மிகவும் மெல்லியதாக அடித்து கொண்டால் , stuffing வைத்த பிறகு மடிக்க easyயாக இருக்கும்.

அவரவர் விருப்பம் போல Stuffing  சேர்த்து கொள்ளலாம்.

துறுவிய Cheeseயிற்கு பதிலாக Cube Cheese சேர்த்தால் ரொம்ப நல்லா இருக்கும்.

இதே மாதிரி Panயிலும் செய்யலாம். ஆனால் அதில் செய்யும் பொழுது சிக்கனில் இருந்து Stuffing சில சமயம் வெளியே வந்துவிடும். அதனால் பார்த்து திருப்பிவிடவும்.

இரண்டு துண்டு Bread Slicesயினை மிக்ஸியில் போட்டு அடித்தால் உடனடியாக Breadcrumbs ரெடி.

சமைக்க தேவைப்படும் நேரம் : 30 – 40 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
·        சிக்கன் (Boneless Skinless Chicken Breast ) – 2
·        ப்ரோக்கோலி – 1 கப்
·        பூண்டு – 2 பல் நசுக்கியது
·        சீஸ் – சிறிதளவு
·        உப்பு, மிளகுதூள் – தேவைக்கு
·        Breadcrumbs – 1 கப்
·        எண்ணெய் – சிறிதளவு

செய்முறை :
·        சிக்கனை சுத்தம் செய்து கழுவி கொள்ளவும். சிக்கனை மீது Plastic wrap மூடி அதனை அடிஅகலமான கடாய் அல்லது பாத்திரம் வைத்து அடிக்கவும். சிக்கன் இப்பொழுது கொஞ்சம் Thin ஆக இருக்கும். இது Stuffing செய்ய கரக்டாக இருக்கும்.


·        சிக்கன் மீது தேவையான அளவு உப்பு + மிளகு தூள் சேர்த்து 5 நிமிடங்கள் ஊறவைக்கவும்.

·        ஒரு கடாயில் 1 தே.கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், நசுக்கிய பூண்டு + நறுக்கிய ப்ரோக்கோலி துண்டுகளை சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கி கொள்ளவும். இதனை சிறிது நேரம் ஆறவைத்து கொள்ளவும்.


·        அவனை 400Fயில் மூற்சூடு செய்து கொள்ளவும். சிக்கன் மீது ப்ரோக்கோலி + சீஸ் துண்டுகள் சேர்த்து ஒரே Lineயில் வைக்கவும்.

·        இப்பொழுது சிக்கனை சூருட்டிவிடவும். Stuffing வெளியில் வராமல் இருக்க அதன் மீது Tooth Picksயினை வைத்து Pack செய்துவிடவும்.


·        இந்த சிக்கனை BreadCrumbsயில் பிரட்டி எடுக்கவும். இதனை அவனில் வைக்கும் ட்ரேயில் வைக்கவும். சிக்கன் மீது சிறிது Oil Spray செய்து கொள்ளவும்.

·        மூற்சூடு செய்த அவனில், இந்த சிக்கனை வைத்து 400Fயில் சுமார் 20 – 25 நிமிடங்கள் வேகவிடவும்.·        சுவையான stuffed Chicken ரெடி. இத்துடன் சாலட் சேர்த்து சாப்பிடலாம்.


லெண்டில் பார்லி சூப் - Barley Lentils Soups with Veggies - Healthy Soup Varieties


சமைக்க தேவைப்படும் நேரம் : 30 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
·        லெண்டில்ஸ் – 1 கப்
·        பார்லி – 1/2 கப்
·        Thyme / Rosemary Leaves – சிறிது (Optional)

சேர்க்க வேண்டிய காய்கள் :
·        வெங்காயம் – 1 பெரியது
·        தக்காளி – 1
·        செலரி (celery) – 4 Sticks
·        காரட் – 1
·        பூண்டு – 4 பல் நசுக்கியது

கடைசியில் சேர்க்க :
·        உப்பு, மிளகு தூள் – தேவையான அளவு
·        சீஸ் – விரும்பினால்

செய்முறை :
·        கொடுத்துள்ள காய்களை சிறிய துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.

·        பிரஸர் குக்கரில் 1 தே.கரண்டி எண்ணெய் ஊற்றி நசுக்கிய பூண்டினை சேர்த்து வதக்கிய பிறகு வெங்காயம் சேர்த்து கொள்ளவும்.

·        இத்துடன் தக்காளி சேர்த்து வதக்கவும்.


·        பிறகு, நறுக்கிய Celery + Carrotsயினை இத்துடன் சேர்க்கவும்.

·        பார்லி + Lentilsயினை சேர்த்து கொள்ளவும்.


·        தேவையான அளவு தண்ணீர் (சுமார் 4 – 5 கப் ) + Thyme /Rosemary / Oregano Leaves சேர்த்து கொள்ளவும்.

·        இதனை பிரஸர் குக்கரில் 4 – 5 விசில் வரும் வரை வேகவிடவும்.


·        இத்துடன் தேவையான அளவு உப்பு + மிளகுதூள் சேர்த்து கலந்து கொள்ளவும்.

·        சுவையான சத்தான சூப் ரெடி. பறிமாறும் பொழுது விரும்பினால் சீஸ் சேர்த்து கொள்ளலாம்.குறிப்பு :
இதில் எதையும் வதக்க தேவையில்லை. அப்படியே சேர்த்து வேகவிடலாம்.

தண்ணீருக்கு பதிலாக vegetable Stock சேர்த்து கொள்ளலாம்.

Pressure Cookerயில் செய்வதற்கு பதிலாக Slow Cookerயில் செய்யலாம்.
Related Posts Plugin for WordPress, Blogger...