ஆந்திரா வெண்டைக்காய் பெப்பர் ப்ரை - Andhra Okra Pepper Fry - Okra Recipes


வெண்டைக்காயில் குறைந்த அளவு Caloriesயும் அதிக அளவு Vitamins, Fiber இருப்பதால் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.

இந்த வறுவலில்,வெண்டைக்காயினை முதலிலேயே வதக்கி வைத்து கொண்டால் க்ரிஸ்பியாக நன்றாக இருக்கும். வெங்காயத்துடன் சேர்த்து வதக்கினால் அவ்வளவு சுவையாக இருக்காது.கூடவே கொழகொழப்பாக வேறு இருக்கும்.

விரும்பினால் இத்துடன் தக்காளி சேர்த்து கொள்ளலாம். இதில் வெண்டைக்காயினை நீளமாக வெட்டி செய்து இருக்கின்றேன்.

அதே மாதிரி மிளகுதூளினை அரைக்கும் பொழுது அத்துடன் வறுத்த வேர்க்கடலையினையும் சேர்த்து அரைத்து கொண்டால் மிகவும் சுவையாக இருக்கும்.


சமைக்க தேவைப்படும் நேரம் : 15 நிமிடங்கள்
தேவையான பொருட்கள்:
·        வெண்டைக்காய் – 1/4 கிலோ
·        வெங்காயம் – 1 பெரியது
·        எண்ணெய் – 1 மேஜைகரண்டி + 1 தே.கரண்டி
·        கடுகு - தாளிக்க
·        பூண்டு – 3 பல்
·        கருவேப்பில்லை – சிறிதளவு

சேர்க்க வேண்டிய தூள் வகைகள் :
·        மஞ்சள் தூள் – 1/2 தே.கரண்டி
·        மிளகு தூள் – 1 தே.கரண்டி
·        உப்பு – தேவையான அளவு

செய்முறை:
·        வெண்டைக்காயினை நீளவாக்கில் நறுக்கி கொள்ளவும். வெங்காயத்தினையும் அதே மாதிரி நீளமாக நறுக்கி வைக்கவும். பூண்டினை நசுக்கி கொள்ளவும்.

·        கடாயில் 1  மேஜை கரண்டி எண்ணெய் ஊற்றி நறுக்கிய வெண்டைக்காயினை சேர்த்து நன்றாக வதக்கி கொள்ளவும்.


·        வெண்டைக்காயுடன் மஞ்சள் தூள் + உப்பு சேர்த்து நன்றாக வதங்கிய பிறகு, அதனை தனியாக எடுத்து வைத்து கொள்ளவும்.·        அதே கடாயில், மீதம் இருக்கும் எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து அத்துடன் நசுக்கிய பூண்டு + வெங்காயம் சேர்த்து வதக்கவும்.


·        வெங்காயம் சற்று வதங்கிய பிறகு, வதக்கி வைத்துள்ள வெண்டைக்காயினை சேர்த்து கலந்து கொள்ளவும்.


·        இத்துடன் கொரகொரப்பாக அரைத்த மிளகுதூளினை தூவி மேலும் 2 – 3 நிமிடங்கள் வதக்கவும்.·        கடைசியில் கருவேப்பில்லை தூவி கிளறிவிடவும். சுவையான வெண்டைக்காய் பெப்பர் ப்ரை ரெடி.


6 comments:

Premas Culinary said...

wow delicious recipe,okra is aishu's fav...sure will try this way...

Veena Theagarajan said...

different flavour.. looks yum

Savitha Ganesan said...

Rohith ku romba pidikkum indha fry.looks good.

srikars kitchen said...

wow,.. my fav bhindi.. looks tasty..

Shama Nagarajan said...

yummy and inviting

Asiya Omar said...

Nice colour, looks delicious.

Related Posts Plugin for WordPress, Blogger...