பீன்ஸ் காரட் கோஸ் தோரன் - ஓணம் ஸ்பெஷல் - Beans Carrot Cabbage Thoran - Kerala Special - Onam Recipes


தோரன் என்பது கேரளா ஸ்பெஷல் உணவு. ஓணம் பண்டிகையின்பொழுது கண்டிப்பாக இலையில் இடம்பெறும் மெனு இது. அவரவர் விரும்பிய காய்கள் சேர்த்து செய்வாங்க…

இது பார்ப்பதற்கு பொரியல் மாதிரி தான் இருக்கும். ஆனால் இதன் செய்முறை சிறிது வித்தியாசம்.

இதில் வெங்காயம் + பச்சைமிளகாய் + விரும்பிய காய் + மஞ்சள் தூள் எல்லாம் சேர்த்து முதலில் கலந்துவைத்து கொள்ள வேண்டும். பிறகு,தேங்காய் எண்ணெய் சேர்த்து தாளித்து கலந்து பொருட்கள் சேர்த்து வேகவிட வேண்டும்.

தேங்காய் எண்ணெயில் தாளித்தால் கூடுதல் சுவையுடன் இருக்கும்.

சமைக்க தேவைப்படும் நேரம் : 20 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
·        பீன்ஸ் – 1 கப் பொடியாக நறுக்கியது
·        காரட் – 1 கப் பொடியாக நறுக்கியது
·        முட்டைகோஸ் – 1 கப் பொடியாக நறுக்கியது
·        சின்ன வெங்காயம் – 4
·        பச்சைமிளகாய் – 2
·        மஞ்சள் தூள் – 1/2 தே.கரண்டி
·        உப்பு – தேவையான அளவு

முதலில் தாளிக்க:
·        தேங்காய் எண்ணெய் – 1 மேஜை கரண்டி
·        கடுகு – தாளிக்க
·        கருவேப்பில்லை – 10 இலை

அரைத்து கொள்ள :
·        தேங்காய் – 2 பெரிய துண்டுகள்
·        சீரகம் – 1 தே.கரண்டி

செய்முறை :
·        சின்ன வெங்காயம் + பச்சைமிளகாயினை நறுக்கி கொள்ளவும். பீன்ஸ் + காரட் + முட்டைகோஸினை பொடியாக நறுக்கி வைக்கவும். தேங்காய் + சீரகம் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.


·        மூன்று காய்கள் + சின்ன வெங்காயம் + பச்சைமிளகாய் + மஞ்சள் தூள் + உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.

·        கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு + கருவேப்பில்லை தாளித்து கொள்ளவும்.

·        இத்துடன் கலந்து வைத்து இருக்கும் காய்களை சேர்த்து 5  - 6 நிமிடங்கள் வேகவிடவும்  .

·        பிறகு, அரைத்த தேங்காயினை சேர்த்து மேலும் 2 – 3 நிமிடங்கள் வேகவிடவும்.


·        சுவையான தோரன் ரெடி. இதனை கலந்த சாதம், சாம்பார், குழம்பு போன்றவையுடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.


5 comments:

இமா said...

பார்க்க கலர்ஃபுல்லா இருக்கு.
இது ஓணம் ஸ்பெஷல். வேற ஸ்பெஷலுக்கு ஸ்வீட் எதுவும் இல்லையா? ;-)
அனைத்திற்கும் என் அன்பு வாழ்த்துக்கள் கீதா.

Veena Theagarajan said...

healthy and perfect thoran

srividhya Ravikumar said...

wow...colourful...

Saratha said...

நீங்கள் பொரியல் பண்ணி முடித்தவுடன் எனக்கும் ஒரு பார்சல் அனுப்பி இருக்கலாம்.

Vijayalakshmi Dharmaraj said...

Yummy and healthy thoran...

Related Posts Plugin for WordPress, Blogger...