நண்டு மசாலா வறுவல் - Crab Masala Fry


சமைக்க தேவைப்படும் நேரம் : 30 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
·        நண்டு – 6
·        வெங்காயம் – 4 பெரியது
·        சோம்பு தூள் – 1 மேஜை கரண்டி
·        கருவேப்பில்லை – சிறிதளவு
·        எண்ணெய் – 2 மேஜைகரண்டி

சேர்க்க வேண்டிய தூள் வகைகள் :
·        மஞ்சள் தூள் – 1/2 தே.கரண்டி
·        மிளகாய் தூள் – 2 தே.கரண்டி
·        உப்பு – தேவையான அளவு

அரைத்து கொள்ள :
·        தேங்காய் – 2 துண்டுகள்

செய்முறை :
·        நண்டுயினை சுத்தம் செய்து கொள்ளவும். வெங்காயத்தினை மிகவும் பொடியாக நறுக்கி கொள்ளவும். தேங்காய் துண்டுகளை மிக்ஸியில் போட்டு மைய அரைத்து கொள்ளவும்.


·        கடாயில் எண்ணெய் ஊற்றி சோம்புதூள் சேர்த்து தாளித்து கொள்ளவும்.


·        இத்துடன் பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தினை சேர்த்து வதக்கவும்.


·        பிறகு சேர்க்க கொடுத்துள்ள தூள் வகைகள் சேர்த்து கலந்து வதக்கவும்.


·        சுமார் 6 -7 நிமிடங்கள் கழித்து தேங்காய் விழுதினை சேர்த்து மேலும் 2 – 3 நிமிடங்கள் வதக்கவும்.·        இதன் பிறகு, நண்டு துண்டுகளை சேர்த்து மசாலா நன்றாக படும்மாறு கலந்து வேகவிடவும்.


·        சுமார் 7 - 8 நிமிடங்கள் கழித்து கருவேப்பில்லை சேர்த்து கிளறிவிடவும். 


சுவையான எளிதில் செய்ய கூடிய வறுவல் ரெடி.
4 comments:

Vimitha Anand said...

Ah veetuku varava.. super akka

Savitha Ganesan said...

Romba nalla irukku nandu fry.loved it.

Priya Anandakumar said...

Super geetha very lovely, wish I was ur neighbour...

Shanthi said...

yummy..i love crab...

Related Posts Plugin for WordPress, Blogger...