ஃபலாஃபில் - Falafel - Traditional Arab Food - Healthy Snack Ideas


ஃபலாஃபில் பரம்பரியமான அரபிய உணவு (Traditional Arab Food). இதனை Pitaவில் வைத்து சாப்பிடுவாங்க…பொதுவாக இதனை எண்ணெயில் பொரித்து எடுப்பாங்க…

நான் இதனை எண்ணெயில் பொரிக்காமல் குழிபாணியார சட்டியில் வறுத்து எடுத்து இருக்கின்றேன். இது கொண்டைக்கடலை வடை மாதிரி இருக்கும்.

கொண்டைக்கடலை ஊறவைக்க : குறைந்தது 3 – 4 மணி நேரம்
சமைக்க தேவைப்படும் நேரம் : 15 – 20 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
·        ஊறவைத்த கொண்டைக்கடலை – 2 கப்
·        கொத்தமல்லி இலை – 1/4 கப்
·        பார்சலி இலை – 1/4 கப்
·        பச்சைமிளகாய் – 3
·        சீரகம் – 1 தே.கரண்டி
·        தனியா – 1 தே.கரண்டி
·        பூண்டு – 3 பல்
·        வெங்காய தாள் – 2
·        உப்பு – சிறிதளவு
·        எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை :
·        கொண்டைக்கடலையினை தண்ணீர் ஊற்றி சுமார் 3 – 4 மணி நேரம் ஊறவைத்து கொள்ளவும்.

·        உப்பு, எண்ணெயினை தவிர அனைத்து பொருட்களையும் சேர்த்து கொரகொரவென அரைத்து கொள்ளவும்.·        அரைத்து வைத்துள்ள பொருட்களை + உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும். அதனை சிறிய சிறிய உருண்டைகளாக உருட்டி கொள்ளவும்.

·        குழிபணியார கடாயினை சிறிது எண்ணெய் ஊற்றி உருண்டைகளை போட்டி வேகவிடவும்.


·        ஒரு பக்கம் நன்றாக வெந்த பிறகு, அதனை திருப்பி போட்டு வேகவிடவும்.


·        சுவையான சத்தான ஃபலாஃபில் ரெடி. இதனை அப்படியே சாப்பிடலாம்.


குறிப்பு :
கொண்டைக்கடலை நன்றாக ஊறவைத்து கொள்ளவும்.

விரும்பினால் Canned Chickpeas பயன்படுத்து கொள்ளலாம்.


இதனை குழிபணியார சட்டியில் செய்யாமல், எண்ணெயில் பொரித்து எடுக்கலாம் அல்லது Ovenயில் வைத்து Bake செய்யலாம்.

15 comments:

Mahi said...

சமீபத்தில்தான் என் கணவர் ஃபலாஃபல் செய்யலாமே என கேட்டார்! பணியாரக்கல் ஐடியா நல்லா இருக்கு, செய்து பார்க்கிறேன்!

Priya Suresh said...

Thats a brilliant idea to use appam pan for cooking, delicious and guilt free falafel.

Priya Anandakumar said...

I love falafels Geetha, Lovely that u made in kuzhipaniyara chatti, great idea and very healthy

Savitha Ganesan said...

Healthy version of falafel looks so yumm.

Kalpana Sareesh said...

healthy falafels..

CHITRA said...

health aa senjiteenga. naan try panren :)

Veena Theagarajan said...

yummy and healthy one.. nicely done

Vimitha Anand said...

Nice healthy way to prepare falafel

Saratha said...

நல்ல ஹெல்த்தியான ரெசிபி.கண்டிப்பாக ட்ரை பண்ணுகிறேன்.

ஹுஸைனம்மா said...

கொண்டைக்கடலை குழிப்பணியாரச் சட்டியில் வெந்துவிடுமாப்பா? குக்கரில் வைத்தாலே 15-20 நிமிடம் ஆகுமே?

GEETHA ACHAL said...

கண்டிப்பாக செய்து பாருங்க மகி...ரொம்ப சூப்பராக இருக்கும்.

GEETHA ACHAL said...

நன்றி ப்ரியா...

நன்றி ப்ரியா ஆனந்தகுமார்...

நன்றி சவி...

GEETHA ACHAL said...

நன்றி கல்பனா..

நன்றி சித்ரா..கண்டிப்பாக செய்து பாருங்க..ரொம்ப நன்றாக வரும்..

GEETHA ACHAL said...

நன்றி வீணா..

நன்றி விமிதா...

நன்றி சாரதா..

GEETHA ACHAL said...

நன்றி ஹுஸைனம்மா...
கவலையே வேண்டாம்...நான் நிறை
ய் முறை செய்து இருக்கின்றேன்...
ரொம்ப நன்றாக வந்து இருக்கின்றது.
நீங்களும் செய்து பார்த்துவிட்டு
சொல்லுங்க...

Related Posts Plugin for WordPress, Blogger...