கோங்குரா சட்னி - Gongura Chutney - Side Dish for Idly & Dosa


கோங்குராவில் அதிக அளவு Iron, Vitamins, Folic acid & Anti-oxidants இருக்கின்றது. இதனை அடிக்கடி உணவில் சேர்த்து கொண்டால் நல்லது.

சமைக்க தேவைப்படும் நேரம் : 15 – 20 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
·        கோங்குரா (புளிச்ச கீரை ) – 2 கப்
·        வெங்காயம் – 1 (விரும்பினால் சேர்த்து கொள்ளவும்)
·        பூண்டு – 4 பல்
·        புளி – 1 சிறிய துண்டு
·        உப்பு – தேவையான அளவு

வறுத்து கொள்ள :
·        உளுத்தம்பருப்பு – 1 மேஜை கரண்டி
·        காய்ந்த மிளகாய் – 4
·        தேங்காய் துறுவல் – 2 மேஜை கரண்டி
·        தனியா – 1 தே.கரண்டி

தாளித்து சேர்க்க :
·        எண்ணெய் – 1 மேஜை கரண்டி
·        கடுகு – தாளிக்க
செய்முறை :
·        புளிச்சகீரையினை சுத்தம் செய்து கொள்ளவும். கடாயில் 1 தே.கரண்டி எண்ணெய் ஊற்றி வறுக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து வறுத்து தனியாக வைத்து கொள்ளவும்.


·        அதே கடாயில் புளிச்சகீரையினை வதக்கி கொள்ளவும். பின்னர் நறுக்கிய வெங்காயம் + பூண்டினை சேர்த்து வதக்கி வைக்கவும்.


·        மிக்ஸியில் முதலில் வறுத்த பொருட்களுடன் சிறிது தண்ணீர் சேர்த்து மைய அரைத்து கொள்ளவும்.

·        அத்துடன் வதக்கிய பொருட்கள் சேர்த்து அரைக்கவும். கடைசியில் தாளிக்க கொடுத்துள்ள பொருட்கள் சேர்த்து தாளித்து கொள்ளவும்.

·        இட்லி, தோசை, சூடான சாதம், தயிர் சாதம் போன்றவைக்கு சூப்பர் காம்பினேஷன் இந்த சட்னி.


குறிப்பு :
புளியின் அளவினை அவரவர் விருப்பத்திற்கு ஏற்றாற் மாதிரி வைத்து கொள்ளலாம்.

காரத்திற்கு காய்ந்த மிளகாயிற்கு பதிலாக பச்சைமிளகாய் சேர்த்து கொள்ளலாம்.

பூண்டினை தவிர்க்க விரும்புவர்கள், தாளிக்கும் பொழுது கண்டிப்பாக பெருங்காயம் சேர்த்து கொள்ளவும்.


இதில் தேங்காய் துறுவல் + உளுத்தம் பருப்பு + வெங்காயத்தினை நீக்கி கூடுதலாக பூண்டு சேர்த்து துவையல் செய்தால் சுவையாக இருக்கும்.

7 comments:

Asiya Omar said...

அட என்ன அதிசயம் நானும் கோங்குரா பச்சடி தான் நேற்று செய்தேன். போஸ்டிங் இப்ப தான் போட்டேன்.கொஞ்சம் இது வித்தியாசமாக செய்திருக்கீங்க.எனக்கு மிகவும் பிடிக்கும்.

திண்டுக்கல் தனபாலன் said...

மிகவும் பிடித்தது... நன்றி சகோதரி...

srikars kitchen said...

wow.. my fav dish.. looks nice..

Priya Suresh said...

Chutney and dosa, wow both makes me drool,a prefect pair.

ஸாதிகா said...

சமையல் அறையில் கோங்குரா சட்னி..சமைத்து அசத்தலாமில் கோங்குரா பச்சடி..அசத்துங்க

Poorni raj said...

HELLO MADAM , IAM NEW TO YOUR SITE
SHALL WE HAVE THIS GONGURA CHUTNEY IN NIGHT TIME FOR DINNER

Poorni raj said...

<hello madam, shall we do the gongura chutney for dinner

Related Posts Plugin for WordPress, Blogger...