பலாகொட்டை பிரதமன் - JackFruit Seeds Pradhaman - Onam Special Kerala Recipes


கேரளா சமையலில், சதய உணவில் கண்டிப்பாக இடம்பெறும் ஸ்வீட் இது.

பாயாசம் மாதிரி இருக்கும். இதனை பலாகொட்டையினை வைத்து செய்து இருக்கின்றேன். ரொம்ப அருமையான சுவையுடன் இருந்தது…

இதில் பலாகொட்டையினை வேகவைத்து பிறகு மிக்ஸியில் அரைத்து செய்தேன்…பலாகொட்டையினை மைய அரைத்தால் பருப்பு பாயசம் மாதிரி இருக்கும்.

எனக்கு கொரகொரப்பாக அரைப்பது தான் பிடித்தது. விரும்பினால் மிக்ஸியில் அரைப்பதற்கு பதிலாக, பொடியாக நறுக்கி கொள்ளலாம்.

தேங்காய் பால் எடுப்பதற்கு பதிலாக Tin Coconut Milk கூட பயன்படுத்தலாம்.

சமைக்க தேவைப்படும் நேரம் : 30 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
·        பலாகொட்டை – 20 - 25
·        தேங்காய் – 1 பெரிய துண்டு
·        வெல்லம் – 1/2 கப்
·        ஏலக்காய் பொடி – 1/4 தே.கரண்டி
·        முந்திரி – சிறிதளவு

செய்முறை :
·        பலாகொட்டையினை சுத்தமாக தண்ணீரில் கழுவி கொள்ளவும். இதனை பிரஸர் குக்கரில் போட்டு அத்துடன் தேவையான அளவு தண்ணீரி சேர்த்து 2 – 3 விசில் வரும் வரை வேகவிடவும்.
( குறிப்பு : பிரஸர் குக்கருக்கு பதிலாக அப்படியே தண்ணீரில் வேகவிடலாம்…என்ன கொஞ்சம் நேரம் அதிகம் எடுக்கும்…)


·        பிறகு,குக்கரில் இருக்கும் பிரஸர் இறங்கியதும், அதனை திறந்து சிறிது நேரம் ஆறவைத்து கொள்ளவும்.


·        இதில் இருக்கும் மேல்புற தோலினை நீக்கி கொள்ளவும். இப்பொழுது பலாகொட்டை ரெடி.


·        வெல்லம் + 2 கப் தண்ணீர் சேர்த்து  அடுப்பில் வைக்கவும். வெல்லம் கரைந்து வாசனை போகும் வரை வைக்கவும்.


·        பலாகொட்டையினை மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.


·        இத்துடன் அரைத்த விழுதினை சேர்த்து கொதிக்கவிடவும்.


·        தேங்காயினை 1/4 கப் தண்ணீர் சேர்த்து மைய அரைத்து கொள்ளவும். இதில் இருந்து தண்ணீரினை மட்டும் வடித்து கொள்ளவும். தேங்காய் பால் ரெடி.


·        ஏலக்காய் பொடி + தேங்காய் பாலினை இத்துடன் சேர்த்து கொண்டு 1 நிமிடம் கொதிக்கவிடவும். கடைசியில் முந்திரியினை நெயில் வறுத்து இதில் சேர்க்கவும்.·        சுவையான பலாகொட்டை பிரதமன் ரெடி. 


9 comments:

Veena Theagarajan said...

looks yum!

Raks anand said...

So new to me Geetha, sure must be tasty!

Shama Nagarajan said...

delicious and inviting dear

Vimitha Anand said...

Never tried this way. looks nice

Priya Suresh said...

Attagasama irruku intha pradhaman.

இமா said...

ஆஹா! இப்படியெல்லாம் கூட சமைக்கலாமா? சூப்பரா இருக்கே.
ம்.. எங்கள் வீட்டில் அவித்தால் மீதி வேலை முடியும்வரை விட்டு வைக்க மாட்டார்கள். ;) அவித்ததன் பின் உரித்து எடுப்பது சிரமமாச்சே.

ஊருக்குப் போகும் சமயம்தான் பலக்கொட்டை இனிக் காணக் கிடைக்கும். ஆனால் சமைத்துப் பார்க்க எனக்கென்று ஒரு சமையலறை இராது. ;( பார்த்து ரசித்துவிட்டுப் போகிறேன்.

உங்கள் சேலை போல ஒன்று தேடுகிறேன். அதை எனக்கு அனுப்பிருங்க கீதா.

இனிப்புக்கு நன்றி. :-)

GEETHA ACHAL said...

நன்றி வீணா...

நன்றி ராஜி...ஆமாம் ரொம்ப சூப்பராக இருந்தது...

நன்றி ஷாமா...

நன்றி விமிதா...பலாகொட்டை கிடைத்தால் செய்து பாருங்க...ரொம்ப நன்றாக இருந்தது...

GEETHA ACHAL said...

நன்றி இமா ஆண்டி...ரொம்ப நல்லா இருந்தது...இப்ப பலாகொட்டை எல்லா இடத்திலும் Frozen Sectionயிலும் கிடைக்குது...

அந்த சேலையினை Chennaiயில் RMKVயில் எடுத்தேன்...ரொம்ப நன்றி...

Asiya Omar said...

ithu puthusa irukku.super.

Related Posts Plugin for WordPress, Blogger...