கினோவா பிரவுன்ரைஸ் ஆனியன் தோசை - Quinoa Brown Rice Onion Dosa - Healthy Dosa Recipes


இந்த படங்கள் எடுத்து சுமார் 4 வருடங்களுக்கு மேலாக இருக்கும்…பழைய Memory Card எடுக்கும் பொழுது கிடைத்த Photos இது…

கினோவாவில் அதிக அளவு மினரல்ஸ் மற்றும் நார்சத்து இருக்கின்றது. இதனை உணவில் அடிக்கடி சேர்ப்பது மிகவும் நல்லது.

Cholesterol, BP , Diabetic உள்ளவர்கள் இதனை சாப்பிட நல்ல பயனை தரும்.

ஊறவைக்க தேவைப்படும் நேரம் : குறைந்தது 2  - 3 மணி நேரம்
சமைக்க தேவைப்படும் நேரம் : 10 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
·        கினோவா – 1 கப்
·        பிரவுன்ரைஸ் – 1 கப்
·        உளுத்தம்பருப்பு – 1/4 கப்
·        சின்ன வெங்காயம் – 1 கப் பொடியாக நறுக்கியது
·        உப்பு – தேவையான அளவு

செய்முறை :
·        கினோவா + பிரவுன்ரைஸ் சேர்த்து தண்ணீரில் சுமார் 2 – 3 மணி நேரம் ஊறவைத்து கொள்ளவும். வேறு பாத்திரத்தில் உளுத்தம்பருப்பினை சேர்த்து தனியாக ஊறவைக்கவும்.


·        ஊறவைத்த பொருட்களை நன்றாக கழுவி கொள்ளவும். முதலில் கினோவா + பிரவுன்ரைஸினை சிறிது தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் போட்டு மைய அரைத்து தனியாக வைத்து கொள்ளவும். பின்னர் உளுத்தம்பருப்பினை சேர்த்து மைய அரைத்து கொள்ளவும்.


·        அரைத்த பொருட்கள் + உப்பு + சின்ன வெங்காயம் சேர்த்து கலந்து கொள்ளவும்.

·        தோசை கல்லினை சூடுபடுத்தி தோசைகளாக ஊற்றவும். அதன் மீது சிறிது எண்ணெய் ஊற்றவும்.


·        ஒரு பக்கம் நன்றாக வெந்த பிறகு அதனை திருப்பி போட்டு வேகவிடவும்.·        சுவையான ஆனியன் தோசை ரெடி. இதனை சட்னியுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.


5 comments:

Veena Theagarajan said...

looks yum.. healthy adai

Priya Anandakumar said...

very healthy and yummy dosa...

Priya Suresh said...

Wat a nutritious dosa, love the addition of onions here.

Mahi said...

நானும் இதே போல தோசை செய்வதுண்டு, ஆனால் ப்ளெய்ன் தோசை. இந்த முறை வெங்காயதோசை செய்து பார்க்கிறேன்.

Maha Gadde said...

very healthy one..

Related Posts Plugin for WordPress, Blogger...