மாங்காய் சாதம் - Raw Mango Rice / Mangai Sadam - Rice Varieties


சமைக்க தேவைப்படும் நேரம் : 15 நிமிடங்கள்
தேவையான பொருட்கள்:
·        மாங்காய் துறுவியது – 1/2 கப் துறுவியது
·        வேகவைத்த சாதம் – 2 கப்
·        மஞ்சள் தூள் – 1/2 தே.கரண்டி
·        உப்பு – தேவையான அளவு

தாளித்து சேர்க்க:
·        எண்ணெய் – 1 மேஜை கரண்டி
·        கடுகு + கடலைப்பருப்பு – தாளிக்க
·        காய்ந்தமிளகாய் – 2
·        கருவேப்பிலை – சிறிதளவு
·        வேர்க்கடலை – 2 மேஜை கரண்டி

செய்முறை :
·        கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு + கடலைப்பருப்பு தாளித்து அத்துடன் காய்ந்த மிளகாய் + கருவேப்பிலை + வேர்க்கடலை சேர்த்து வதக்கவும்.

·        இத்துடன் துறுவிய மாங்காய் சேர்த்து 1 நிமிடம் வதக்கவும்.·        பிறகு, மஞ்சள் தூள் + உப்பு சேர்த்து 1 – 2 நிமிடங்கள் வதக்கவும்.

·        வேகவைத்த சாதத்தினை இத்துடன் சேர்த்து கிளறவும்.


·        சுவையான மாங்காய் சாதம் ரெடி. இத்துடன் எதாவது வறுவல், சிப்ஸ் போன்றவையுடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.


குறிப்பு:
இத்துடன் விரும்பினால் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து கொள்ளவும்.

காய்ந்த மிளகாய் சேர்ப்பதற்கு பதிலாக பச்சைமிளகாய் சேர்த்து கொள்ளலாம்.
8 comments:

Parvathy Chandrasekaran said...

my husband's fav one... never tried it ...

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை... செய்முறைக்கு நன்றி...

ஸாதிகா said...

சூப்பர் சாதம்.

Magees kitchen said...

Delicious, mouth watering recipe I love it...

இமா said...

சுவையாகத் தெரிகிறது.

Saratha said...

mathyam 2 manikku parthan.appidayiay sapidavendum pola irunthathu.

Niloufer Riyaz said...

naavin rusiyai thoondum migavum arusuvaiyana thoguppu

Priya Anandakumar said...

Lovely Geetha, my fav...

Related Posts Plugin for WordPress, Blogger...