மெட்ராஸ் மட்டன் பிரியாணி - Madras Mutton Biryani - Guest post by Menaga Sathia-- Biryani Varieties - Mutton Recipes


இந்த பிரியாணியின்,  Main Specialயே சின்ன வெங்காயம் ,  கசாகசா சேர்த்து அரைப்பது தான்.

இதில் பச்சைமிளகாய் அதிகம் சேர்த்து அரைப்பதால் கூடுதல் சுவையுடன் இருக்கும். (அவரவர் காரத்திற்கு ஏற்றாற் போல சேர்த்து கொள்ளவும். )

புதினாவினை கடைசியில் சேர்ப்பதினால் நல்லா மணமாக இருக்கும்.

இந்த போஸ்டினை திருமதி. மேனகா சத்யா அவர்கள் எனக்காக Guest Post கொடுத்தாங்க… நானும் மேனகாவும் 6 வருடங்களுக்கும் மேலாக நல்ல தோழிகளாக இருக்கின்றோம்..கண்டிப்பாக நானும் மேனகாவும் வாரத்திற்கு ஒரு முறையாவது பேசிவிடுவோம்…

நான் முதன்முதலில் அறுசுவையில் தான் எழுத தொடங்கினேன். அதில் 300க்கும் மேலான என்னுடைய குறிப்புகள் இருக்கின்றங்க…

அப்பொழுது தான் மேனகா என்னை தனியாக ப்ளாக் எழுத சொன்னாங்க…இந்த ப்ளாக் எழுத காரணமே மேனகா தான்… இந்த ப்ளாகும் இப்பொழுது ஆரம்பித்து 5 வருடம் முடியபோகின்றது. நன்றி மேனகா…

நான் Guest Post மட்டன் வைத்து தான் வேண்டும் என்று சொன்ன உடனே எனக்காக, Step by Step pictures எடுத்து அடுத்த வாரமே மெயிலில் அனுப்பிவிடாங்க..நான் தான் அதனை Post போட நேரம் எடுத்து கொண்டேன்.. நீங்களும் இந்த பிரியாணியினை செய்து பார்த்து உங்கள் அன்பான கருத்தினை தெரிவிக்கவும்…


சமைக்க தேவைப்படும் நேரம் : 1 மணி நேரம்
தேவையான பொருட்கள் :
·        மட்டன் – 1 கிலோ
·        அரிசி – 4 கப்
·        தயிர் – 1 கப்
·        எண்ணெய் – சிறிதளவு
·        நெய் – 2 மேஜை கரண்டி

அரைத்து கொள்ள :
·        கசாகசா – 1 மேஜை கரண்டி
·        சின்ன வெங்காயம் – 10
·        இஞ்சி பூண்டு விழுது – 2 மேஜை கரண்டி
·        பச்சைமிளகாய் – 4
·        கொத்தமல்லி – 1 கைபிடி அளவு

நறுக்கி கொள்ள :
·        வெங்காயம் – 2 பெரியது
·        தக்காளி – 3
·        புதினா – 1 கைபிடி அளவு
·        பச்சைமிளகாய் – 3 இரண்டாக அரிந்து கொள்ளவும்

சேர்க்க வேண்டிய தூள் வகைகள் :
·        மஞ்சள் தூள் – 1 தே.கரண்டி
·        மிளகாய் தூள் – 1 தே.கரண்டி
·        தனியா தூள் – 1 தே.கரண்டி
·        உப்பு – தேவையான அளவு

பொடித்து கொள்ள :
·        பட்டை – 2, கிராம்பு – 3, ஏலக்காய் – 3
(குறிப்பு : இதற்கு பதில் கரம்மசாலா தூள் 1/2 தே.கரண்டி பயன்படுத்து கொள்ளலாம்.)

முதலில் தாளிக்க :
·        எண்ணெய் – சிறிதளவு
·        பட்டை – 1, கிராம்பு – 3, ஏலக்காய் – 3 , பிரியாணி இலை – 2

செய்முறை :
·        மட்டனை சுத்தம் செய்து கொள்ளவும். பிரஸர் குகக்ரில் மட்டன் + மஞ்சள் தூள் + 1 தே.கரண்டி உப்பு + 1 கப் தண்ணீர் சேர்த்து 5 – 6 விசில் வரும் வரை வேகவைத்து கொள்ளவும்.

·        பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து பொடித்து கொள்ளவும்.         வெங்காயம் + தக்காளியினை நீளமாக நறுக்கி வைக்கவும். கசாகாசாவினை சூடான தண்ணீரில் சுமார் 10 நிமிடங்கள் ஊறவைத்து அதனை மிக்ஸியில் போட்டு மைய அரைத்து கொள்ளவும்.


·        இத்துடன் சின்ன வெங்காயம் + பச்சைமிளகாய் + இஞ்சி பூண்டு விழுது சேர்த்து கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.

·        பிறகு இத்துடன் கொத்தமல்லி  சேர்த்து அரைத்து கொள்ளவும்.


·        அரிசியினை சுமார் 10 – 15 நிமிடங்கள் தண்ணீரில் ஊறவைத்து பிறகு அதனை தனியாக எடுத்து கொள்ளவும். பாத்திரத்தில் 1 மேஜைகரண்டி நெய் ஊற்றி அரிசியினை போட்டு 2 – 3 நிமிடங்கள் வதக்கி தனியாக தட்டில் எடுத்து வைத்து கொள்ளவும்.

·        அதே பாத்திரத்தில் சிறிது எண்ணெய் + 1 தே.கரண்டி நெய் ஊற்றி தாளிக்க கொடுத்துள்ள பொருட்கள் சேர்த்து தாளித்து கொள்ளவும்.


·        இத்துடன் வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும்.

·        வெங்காயம் வதங்கிய பிறகு, அரைத்த விழுது + பச்சைமிளகாய் சேர்த்து மேலும் 2 – 3 நிமிடங்கள் வதக்கவும்.


·        பிறகு , தக்காளி சேர்த்து வதக்கவும்.

·        தக்காளி கரைந்த பிறகு, வேகவைத்த மட்டன் + மிளகாய் தூள் + தனியா தூள் + பொடித்த தூள் + தேவையான அளவு உப்பு சேர்த்து கொள்ளவும். ( மட்டன் வெந்த தண்ணீரினை தனியாக வைத்து கொள்ளவும்.)


·        அனைத்து நன்றாக கலந்த பிறகு, இத்துடன் தயிர் சேர்த்து கலந்து கொள்ளவும்.

·        பிறகு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.( குறிப்பு : 1 கப் அரிசிக்கு சுமார் 2 கப் தண்ணீர் என்ற Ratioவில் வைத்து கொள்ளவும். மட்டன் வேகவைத்த தண்ணீரியையும் அளந்து சேர்த்து கொள்ளவும்.)


·        தண்ணீர் நன்றாக கொதிக்கும் பொழுது வதக்கி வைத்துள்ள அரிசியினை சேர்த்து வேகவிடவும்.

·        சாதம் 80 – 90 % வெந்த பிறகு, அதன் மீது புதினா இலை சேர்த்து தட்டு போட்டு மூடி தம்மில் வைத்து வேகவிடவும்.


·        சுவையான மெட்ராஸ் மட்டன் பிரியாணி ரெடி.
7 comments:

Saraswathi Tharagaram said...

I hopw you have another name as Briyani Queen..I can see lots of Briyani variety in your blog:))
Bookmarking it..

திண்டுக்கல் தனபாலன் said...

http://sashiga.blogspot.in/2013/10/madras-mutton-biryani-guest-post-for.html - தளத்திலும் உங்களின் பதிவை பகிர்ந்துள்ளார்...

வரும் ஞாயிறு அன்று செய்து பார்க்கிறோம்... நன்றி...

Asiya Omar said...

சூப்பர்.இரண்டு பேரும் சமையலில் கலக்குறீங்க.தொடர்ந்து அசத்துங்க.நல்வாழ்த்துக்கள் மேனகா & கீதா ஆச்சல்.

சே. குமார் said...

படங்களுடன் விளக்கம் அருமை...
இருவருக்கும் வாழ்த்துக்கள்.

Priya Suresh said...

Omg, super flavourful biryani, Menaga rocks..

Priya Anandakumar said...

Superb biryani Menaga, lovely... u ladies rock. wonderful guest post Menaga...

Saratha said...

மட்டன் பிரியாணி பகிர்வை புக்மார்க்கில் பதிவு செய்து விட்டேன்.

Related Posts Plugin for WordPress, Blogger...