Basbousa - Eggless Rava Cake - Easy Mediterranean Dessert - Thanksgiving Special


இது மிகவும் பிரபலமான Mediterranean Dessert. எதில் செய்ய கூடிய FailProof Cake இது .

கண்டிப்பாக செய்து பார்த்து தங்களுடைய கருத்தினை தெரிவிக்கவும்….

இதனை Egglessஆக செய்து இருக்கின்றேன். முட்டை சேர்ப்பதாக இருந்தால், தயிருக்கு பதிலாக 2 முட்டை சேர்த்து கொள்ளவும். அப்படி சேர்க்கும் பொழுது விரும்பினால் சிறிது Vanilla Essence சேர்த்து கொள்ளலாம்.

நன்றி ஷோபனா , நன்றி சவிதா…

சமைக்க தேவைப்படும் நேரம் : 30 – 40 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
·        ரவை – 1 கப் + 1/4 கப் (250 கிராம்)
·        சக்கரை – 3/4 கப் (150 கிராம்)
·        வெண்ணெய் – 3/4 கப் (150 கிராம்)
·        தேங்காய் துறுவல் (Unsweetened Coconut) – 1/2 கப்
·        தயிர் – 1/2 கப்

சக்கரை சிரப் செய்ய :
·        சக்கரை – 3/4 கப்
·        தண்ணீர் – 3/4 கப்


செய்முறை :
·        Room Temperature Butter /வெண்ணெயினை Microwaveயில் 30 Seconds வைத்து உறிக்கிகொள்ளவும்


·        இதில் ரவையினை சேர்த்து கலந்து கொள்ளவும்


·        இத்துடன் சக்கரை + தேங்காய் துறுவல் + தயிர் சேர்த்து கரண்டியினால் கலந்து கொள்ளவும்.



·        அவனை 350Fயினை மூற்சூடு செய்து கொள்ளவும். அகலமான ட்ரேயில் 1 மேஜை கரண்டி Butterயினை தடவி அதில் கலந்து வைத்துள்ள கலவையினை கொட்டி சமப்படுத்தவும்.


·        ட்ரேயினை சிறிது தட்டி கொள்ளவும். இதனால் உள்ளே இருக்கும் Air எல்லாம் நீக்கிவிடும்.

·        கலவையில் அவரவர் விருப்பதிற்கு ஏற்றாற் போல cut செய்து கொள்ளவும்.


·        ட்ரேயினை அவனில் வைத்து 350Fயில் 20 – 22 நிமிடங்கள் Bake செய்யவும்.


·        இதன் நடுவில் சக்கரை சிரபினை தயார் செய்து கொள்ளவும். பாத்திரத்தில் சக்கரை + தண்ணீர் சேர்த்து 5 – 6 நிமிடங்கள் கொதிக்கவிடவும். (கவனிக்க : சக்கரை நன்றாக கரைந்தால் போதும். பாகு வரும் வரை கொதிக்கவிட வேண்டாம்.)


·        அவனில் இருந்து ட்ரேயினை வெளியில் எடுத்து அதில் இந்த Sugar Syrupயினை ஊற்றிவிடவும்.


·        திரும்பவும் ட்ரேயினை அவனில் வைத்து மேலும் 8 – 10 நிமிடங்கள் Bake செய்யவும்.


·        ட்ரேயினை வெளியில் வைத்து சிறிது நேரம் ஆறவைத்து அதனை பறிமாறவும்.


·        சுவையான Basbousa ரெடி. 


4 comments:

Savitha Ramesh said...

Thanks for trying basbousa geetha. Its my fav dessert , which I make often. Ishould thank Shobana for introducing this recipe.

Veena Theagarajan said...

looks yum.. perfectly done

Snow White said...

arumaiya seithu irukinga... kandipa try seiya poren...thanks for this recipe...

Snow White said...

I tried ur recipe ..comes out well...thanks for sharing ... if u free ,visit this http://snowwhitesona.blogspot.in/2013/11/basbousa-eggless-rava-cake.html?m=0

Related Posts Plugin for WordPress, Blogger...