கறிவேப்பில்லை சிக்கன் மசாலா - Karuveppilai Chicken Masala - Curry Leaves Chicken Masala


கருவேப்பிலை சேர்த்து செய்வதால் இது கொஞ்சம் கரும்பச்சைநிறத்தில் இருக்கும்.

அரைக்க கொடுத்துள்ள பொருட்களில் சின்ன வெங்காயத்திற்கு பதிலாக Ordinary வெங்காயம் சேர்த்து கொள்ளலாம். ஆனால் சுவையில் சிறிது வித்தியாசம் இருக்கும்.

கண்டிப்பாக அரைக்க கொடுத்துள்ள பொருட்களை கொரகொரப்பாக் அரைத்தால் போதும். இதற்கு நல்லெண்ணெய் பயன்படுத்தினால் கூடுதல் சுவையுடன் இருக்கும்.

இதனை கடாயில் செய்யாமல், பிரஸர் குக்கரிலும் செய்யலாம். (பிரஸர் குக்கரில் செய்யும் பொழுது அரை கப் தண்ணீர் சேர்த்து கலந்து கொள்ளவும். )

இதில் சோம்பு தவிர பட்டை, கிராம்பு, ஏலக்காய் என்று எதுவும் பயன்படுத்த வேண்டாம்.


சமைக்க தேவைப்படும் நேரம் : 20 - 25 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
·        சிக்கன் – 1/2 கிலோ
·        வெங்காயம் - 1
·        எண்ணெய் – 1 மேஜை கரண்டி

அரைத்து கொள்ள :
·        சின்ன வெங்காயம் – 4
·        கருவேப்பிலை – 20 – 25 இலைகள்
·        சோம்பு – 1 தே.கரண்டி
·        மிளகு – 1 தே.கரண்டி
·        தனியா – 1 மேஜை கரண்டி
·        இஞ்சி – 1 சிறிய துண்டு
·        பூண்டு – 5 பல்

சேர்க்க வேண்டிய தூள் வகைகள் :
·        மஞ்சள் தூள் – 1/2 தே.கரண்டி
·        மிளகாய் தூள் – 1 தே.கரண்டி
·        உப்பு – தேவையான அளவு

கடைசியில் தாளித்து சேர்க்க :
·        எண்ணெய் – 1 தே.கரண்டி
·        சோம்பு தூள் – 1/4 தே.கரண்டி
·        மிளகு தூள் – 1/2 தே.கரண்டி (கொரகொரப்பாக அரைத்தது)
·        கருவேப்பிலை – 10 – 15 இலை

செய்முறை :
·        அரைக்க கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.·        சிக்கனை சுத்தம் செய்து கொள்ளவும். வெங்காயத்தினை பொடியாக நறுக்கி வைக்கவும். சிக்கனுடன் அரைத்த விழுது + தூள் வகைகள் சேர்த்து கலந்து 5 நிமிடங்கள் ஊறவைத்து கொள்ளவும்.·        கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் சேர்த்து வதக்கி கொள்ளவும்.·        வெங்காயம் நன்றாக வதங்கிய பிறகு, Marinate செய்து வைத்துள்ள சிக்கனை சேர்த்து வதக்கவும்.


·        சுமார் 10 - 12 நிமிடங்கள் சிக்கன் நன்றாக வெந்து இருக்கும். தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து , இத்துடன் சேர்த்து கிளறவும்.


·        சுவையான கருவேப்பிலை சிக்கன் மசாலா ரெடி. சுடான சாதம், ரசத்துடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.4 comments:

ஸாதிகா said...

வித்தியாசமாக செய்து காட்டி இருக்கீங்க.

Niloufer Riyaz said...

lovely chicken curry!!

Saratha said...

சிக்கன் ரெசிபி வித்தியாசமான ரெசிபி.

Vimitha Anand said...

Paakave colorful a super a irukku Geeta

Related Posts Plugin for WordPress, Blogger...