ஷார்ட் ப்ரெட் குக்கீஸ் - Shortbread Cookies - Christmas Recipes - Simple Cookies Recipes


இந்த ஷார்ட் ப்ரெட் குக்கீஸ் மிகவும் சுவையாக அருமையாக இருக்கும் . இதனை குறைந்த Temperatureயில் அதாவது சுமார் 325 F யில் 12 – 15 நிமிடங்கள் வேகவிட  வேண்டும்.

பொதுவாக இந்த குக்கீஸிற்கு 1 Part Sugar + 2 parts Butter + 3 Parts Flour by Weight (1 : 2 : 3 Ratio) என்று விதத்தில் எடுத்து கொண்டு செய்வாங்க. Weighing Machine இல்லாதவர்களுக்கு கப் அளவில் செய்ய அளவு கொடுத்து இருக்கின்றேன்.

1 cup Butter – 225 gm
1 cup Sugar powder – 125 gm
1 cup All Purpose Flour – 125 gm

1 cup Powdered Sugar + 1 Cup Butter + 3 Cup Flour by Cup Measurement 
        -----------------------------------------------------------------------------------------------
1 Part Powdered Sugar + 2 parts Butter + 3 Parts Flour by Weight Measurement

நீங்களும் செய்து பார்த்து தங்களுடைய அன்பான கருத்தினை தெரிவிக்கவும்.


சமைக்க தேவைப்படும் நேரம் : 25 - 30  நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
·        All Purpose Flour – 3 கப்
·        வெண்னெய் – 1 கப்
·        பொடித்த சக்கரை – 1 கப்
·        உப்பு – 1/4 தே.கரண்டி

செய்முறை :
·        ஒரு பவுலில் பொடித்த சக்கரை + உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும் .


·        இத்துடன் Room Temperature Butter சேர்த்து கொள்ளவும் .


·        பிறகு மாவினை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும் .·        Parchment Paper மீது கலந்த மாவினை வைத்து அதன் மீது இன்னொரு parchment paperயினை வைத்து மாவினை சாப்பாத்தி மாவினை போல் உருட்டி கொள்ளவும். (அப்படியே Roll செய்தால் மாவு கட்டையில் ஒட்டி கொள்ளும் அதனால் தான் parchment paperயினை பயன்படுத்து கொள்ளவும்.)


·        இதனை அவரவர் விருப்பத்திற்கு ஏற்ற வடிவத்தில் வெட்டி கொள்ளவும்


·        அவனை 325Fயில் மூற்சூடு செய்து கொள்ளவும் .அவனில் வைக்கும் ட்ரேயில் Parchment paperயினை வைக்கும் . அதன் மீது வெட்டி வைத்துள்ள துண்டுகளை சிறிது இடைவெளி வைத்து வைக்கவும்.


·        மூற்சூடு செய்த அவனில், ட்ரேயினை வைத்து 325Fயில் சுமார் 12 – 15 நிமிடங்கள் வேகவிடவும் (நான் குக்கிஸிக்கு அதிக இடைவெளி விட்டு வைக்கவில்லை என்பதால் இப்படி இருக்கின்றெது. அதனை கட் செய்து கொண்டேன் )(விரும்பினால் கூடுதலாக 1 அல்லது 2 நிமிடங்கள் அவனில் வைத்து கொள்ளவும்)
·        இது வெளியெ எடுக்கும் பொழுது மிகவும் க்ரிஸிபியாக இருக்காது . ஆனால் சிறிது நேரம் கழித்து பார்த்தால், வெளியே crispyயாகவும், உள்ளே softஆகவும் இருக்கும்.


·        சுவையான எளிதில் செய்ய கூடிய குக்கீஸ் ரெடி.


6 comments:

Savitha said...

Super a irukku pa cookies. love to have it with tea.

Snow White said...

wow akka ... romba alaga irukku... kandippa taste ah irukkumnu ninakaren ... seithu parthuttu solren ..

Kalpana Sareesh said...

wow yumm preperation..

Saratha said...

செய்முறை விளக்கம்,போடோஸ் எல்லாமே சூப்பர்!!!

Snow White said...

akka i tried this recipe .. taste was awesome .
www.snowwhitesona.blogspot.in

Saratha said...

வாவ் ஷேப் அழகா இருக்கு!!

Related Posts Plugin for WordPress, Blogger...