சிம்பிள் ஸ்வீட் கார்ன் சூப் - Simple Sweet Corn Soup - Healthy Soup Varietiesஎளிதில் செய்ய கூடிய சத்தான சூப்..

சமைக்க தேவைப்படும் நேரம் : 15 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
·        கார்ன் – 1 கப்
·        Vegetable Stock -  1 கப்
·        Heavy Cream – 1/4 கப் (விரும்பினால்)
·        உப்பு – சிறிதளவு
·        பெப்பர்/ மிளகு தூள் – 1/4 தே.கரண்டி

செய்முறை :
·        கார்ன்  + வெஜிடேபுள் ஸ்டாக் + 2 கப் தண்ணீர் சேர்த்து சுமார் 8 – 10 நிமிடங்கள் வேகவைத்து கொள்ளவும்.


·        வேகவைத்த கார்னினை அப்படியே மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்து கொள்ளவும்.·        திரும்பவும் அதே பாத்திரத்தில் அரைத்த விழுது + Heavy Cream சேர்த்து 2 – 3 நிமிடங்கள் வேகவிடவும்.


·        பறிமாறும் பொழுது உப்பு + மிளகு தூள் சேர்த்து கொள்ளவும். சுவையான சத்தான சூப் ரெடி.


கவனிக்க:
இதில் நான் Vegetable stock சேர்த்து இருக்கின்றேன். அதற்கு பதிலாக வெரும் தண்ணீர் மட்டுமே சேர்த்து வேகவிடலாம்.

நான் அரைத்த விழுதினை அப்படியே சேர்த்து இருக்கின்றேன். வேண்டும் என்றால், அரைத்த விழுதினை வடிகட்டி கொள்ளலாம். அப்படி இருக்கும் பொழுது தோல் எல்லாம் நீக்கிவிட்டு வெரும் தண்ணீர் மட்டும் கிடைக்கும்.

Heavy Creamயிற்கு பதிலாக வெரும் பால் சேர்த்து கொள்ளலாம்.

இது மாதிரி செய்யும் சூப்களில் கடைசியில் உப்பு சேர்த்தால் கூடுதல் சுவையுடன் இருக்கும்.

நான் Frozen Cornயினை பயன்படுத்து இருக்கின்றேன். Fresh கார்னில் தோல் நீக்கி எடுத்து கொண்டு செய்யலாம்.


டூனா பைட்ஸ் - Tuna Bites - Healthy Evening Snackமிகவும் எளிதில் செய்ய கூடிய சத்தான மாலை நேர ஸ்நாக்…இதனை எங்களுடைய ப்ரெண்ட் Lovlyn Jason அவர்கள் வீட்டில் தான் முதன்முறையாக சாப்பிட்டோம்…மிகவும் சுவையாக இருந்ததது…அப்பொழுது இருந்து இதனை அடிக்கடி செய்து விடுகிறேன்..

இதில் Canned Tuna Chunks in Water (Clover Leaf Brand) பயன்படுத்து இருக்கின்றேன்.  Tuna Flakes வாங்கினால் அதில் இருந்து தண்ணீர் நன்றாக வடிக்க முடியவில்லை. அதனால் கொஞ்சம் தண்ணியாகவே இருக்கும்.

Endivesயிற்கு பதிலாக Multigrain Biscuits மீது வைத்தும் பறிமாறலாம்.

ஸ்நாக் செய்ய தேவையான நேரம் : 5 நிமிடங்கள்
 தேவையான பொருட்கள்  :
·        Tuna Chunks in Water – 1 டின்
·        Ranch – 2 மேஜை கரண்டி
·        வெங்காய தாள் – 2 மேஜை கரண்டி (பொடியாக நறுக்கியது)
·        Belgian Endives – 10 இலை

செய்முறை :
·        Tunaவினை தண்ணீர் வடித்து எடுத்து கொள்ளவும். Forkயினை வைத்து உதிர்த்து கொள்ளவும்.


·        இத்துடன் Ranch + வெங்காய தாள் சேர்த்து கலந்து கொள்ளவும்.


·        இப்பொழுது டூனா ரெடி.


·        இதனை Endives மீது வைத்து பறிமாறவும். சுவையான எளிய ஸ்நாக் ரெடி.


25 விதமான சத்தான பார்லி உணவுகள் - 25 Different Varieties of Barley Indian Style Cooking


பார்லியில் எப்பொழுதும் கஞ்சி தான் செய்யலாம் என்று நினைத்துவிட வேண்டாம். பார்லியினை Main Ingredient ஆக வைத்து செய்த சத்தான உணவினை நீங்களும் செய்து பார்த்துவிட்டு உங்கள் அன்பான கருத்தினை தெரிவிக்கவும்.


1.பார்லி இனிப்பு கொழுக்கட்டை – Barley Sweet Kozhukattai   
எப்பொழுதும் அரிசி மாவில் கொழுக்கட்டை செய்யாமல் ஒரு மாறுதலுக்காக பார்லி மாவில் செய்து பாருங்க…ரொம்ப அருமையான வித்தியசமான கொழுக்கட்டை…சத்தும் கூட…


பார்லியில் அதிக அளவு நார்சத்து மற்றும் தேவையில்லாத கொழுப்பினை நீக்கும் தன்மை இருக்கின்றது. கோதுமையினை விட பார்லியில் 3 மடங்கு அதிக அளவு நார்சத்து இருப்பதால் அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வது மிகவும் நல்லது.
இதில் கொள்ளு சேர்த்து இருப்பதால் மேலும் உடலிற்கு தேவையான சத்துகள் அனைத்துமே கிடைக்கும். கொள்ளு “உணவே மருந்து, மருந்தே உணவு “.


வெருமனே கோதுமை மாவு சப்பாத்தி சாப்பிடுவதற்கு பதிலாக 1 : 2 விதிம் பார்லி மாவினையும் சேர்த்து செய்து பாருங்க…சூப்பரான மிருதுவான சப்பாத்தி…அனைவரும் விரும்பி  சாப்பிடுவாங்க…


பார்லி மாவினை அவகேடோவுடன் சேர்த்து செய்த க்ரிஸ்பி ஸ்நாக்…இது அவனில் செய்வதால் உடலிற்கு மிகவும் நல்லது. 1 வாரம் வரை வைத்து இருந்து சாப்பிடலாம்…


அரிசிக்கு பதிலாக பார்லியினை பயன்படுத்து செய்த உணவு. பார்லியுடன் பருப்பு + காய்கறிகள் சேர்த்து இருப்பதால் கண்டிப்பாக Fully Balanced Foodஆக இது இருக்கும்.


வேகவைத்த பார்லியினை வைத்த செய்த Instant சமையல். அரிசியினை தவிர்த்து பார்லி, ஒட்ஸ், கோதுமை, ரவா போன்றவையினை வைத்து செய்து பாருங்க…சுவையான சத்தான உணவு…


பார்லி மாவில் செய்த முருக்கு…அம்மா வந்து இருந்த பொழுது செய்தாங்க…வீட்டில் அனைவருக்கும் ரொம்ப பிடித்து இருந்தது… விரும்பினால் முருக்கு செய்யும் பொழுது பார்லி மாவினை சிறிது வறுத்து கொண்டால் ரொம்ப நன்றாக இருக்கும்.


பால் கொழுக்கட்டை மிகவும் பிரபலான ஸ்வீட்…எங்க வீட்டில் அடிக்கடி செய்வோம்…அவரவர் விருப்பத்திற்கு எற்றாற் போல உருண்டையாக அல்லது நீளமாக வடிவத்தில் செய்வாங்க….

வேகவைத்த பார்லியினை வைத்து செய்த பாயசம் இது…ரொம்ப அருமையான சத்தான பாயசம்…


கேழ்வரகு மாவில் வெங்காயம் + பச்சைமிளகாய் + வேகவைத்த பார்லி சேர்த்து செய்த சத்தான மாலை நேர ஸ்நாகாக இதனை சாப்பிட மிகவும் அருமையாக இருக்கும்.


கேழ்வரகு மாவு மற்றும் பார்லி மாவினை 1 : 1 என்ற விததில் சேர்த்து செய்த புட்டு…இதில் ஏலக்காய், தேங்காய் துறுவல் சேர்த்து இருப்பதால் சூடாக சாப்பிட நன்றாக இருக்கும்.


பண்டிகை ஸ்பெஷலாக வித்தியசமாக இந்த தட்டையினை செய்து கொடுங்க…வீட்டில் அனைவரும் உங்களை கண்டிபாக பாரட்டுவாங்க… தட்டை செய்யும் பொழுது கடலைப்பருப்பு, வேர்க்கடலை போன்றவையினை ஊறவைக்க மறந்துவிட்டால் அதற்கு பதிலாக ஒட்ஸினை சேர்த்து செய்து பாருங்க…வித்தியசமான சுவையான தட்டை கிடைக்கும்…


டயட்டில் இருப்பவங்க மட்டும் இல்லாமல் சிறியவர்கள் முதல் பெரியவரிகள் வரை சாப்பிட கூடிய சத்தான லட்டு…இதே மாதிரி ஒட்ஸ், கோதுமை மாவு போன்றவையிலும் செய்து சாப்பிட்டு பாருங்க…சுவையாக இருக்கும்..

l

எங்கள் வீட்டில் அடிக்கடி செய்யும் பொங்கல் இது…அரிசியில் செய்யும்  பொங்கலுக்கும் இதற்கும் பெரிய வித்தியாசம் தெரியாது…நீங்கள் செய்து பார்த்துவிட்டு கண்டிப்பாக சொல்லுங்க..


பார்லி என்றாலே டயட் இருப்பவங்க தான் சாப்பிட வேண்டும் என்று இல்லாமல் அனைவருமே சாப்பிட கூடிய உணவு…அதில் கஞ்சி மட்டும் தான் செய்யலாம் என்று இல்லாமல் இது மாதிரி கட்லட் அல்லது வேறு மாதிரியாக செய்து சாப்பிட்டு பாருங்க…அப்பறம் பார்லி கண்டிப்பாக பிடித்துவிடும்.ரிஸோட்டா என்பது இத்தாலிய உணவு..அதிக கஞ்சி தன்மை உள்ள அரிசியில் செய்யும் உணவு தான் ரிஸோட்டோ…அத்துடன் இதில் மஷ்ரூம் சேர்த்து இருப்பதால் மிகவும் சுவையாக இருக்கும்.


பார்லியுடன் எந்த வித கீரையினை சேர்த்து சமைத்தாலும் மிகவும் நன்றாக இருக்கும்..கீரையில் நிறைய Vitamins இருப்பதால் அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வது நல்லது.


ஸ்வீட் பொங்கல் செய்யும் பொழுது பார்லியில் சக்கரை பொங்கல் செய்து பாருங்க..Healthyயான உணவினை செய்து சாப்பிடுவோம்..


பேன்கேக்ஸ் என்றால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகவும் விரும்பமான காலை நேர சிற்றூண்டி…அதனையே ஹெல்தியான உணவாக சாப்பிட்டால் அனைவருக்கும் திருப்தி…பார்லியில் செய்து பாருங்க…ரொம்ப அருமையாக இருக்கும்.


பார்லியினை வேகவைத்து அதில் தயிர் சேர்த்து கஞ்சி போல குடிப்பதினை விட இப்படி தயிர் சாதம் மாதிரி தாளித்து கலந்து செய்தால் மதியம் நேர Lunch Boxயிற்கு கொடுத்து அனுப்ப ஈஸியாக இருக்கும்.


இந்த சாலடில் ஆறு சுவை கலந்து செய்து இருக்கின்றேன். இனிப்புக்கு மாம்பழம், புளிப்புக்கு எலுமிச்சை, கசப்பு சுவைக்கு எலுமிச்சை தோல், துவர்ப்பு சுவைக்கு அவகேடோ, உவர்ப்பு சுவைக்கு உப்பு, காரத்திற்கு பச்சைமிளகாய். இதனை அனைத்தும் பார்லியுடன் சேர்த்து செய்த சத்தான சாலட்..


வெயில் காலம் மட்டும் இல்லாமல் அனைத்து seasonயிலும் சாப்பிட கூடிய சத்தான கூழ்…


பார்லியுடன் சத்தான காய்களை சேர்த்து செய்த ஹெல்தியான மாலை நேர ஸ்நாக்…இதில் காய்கள் சேர்ப்பதால் மிகவும் நல்லது. அதே மாதிரி காய்களை அப்படியே சேர்க்காமல் துறுவி சேர்த்து செய்து பாருங்க…குழந்தைகள் கண்டிப்பாக சாப்பிடுவாங்க..


5 நிமிடங்களில் எளிதில் செய்ய கூடிய ஈஸி தோசை இது. எப்பொழுதும் தோசைமாவு என்று செய்யாமல் உடனடியாக செய்ய கூடிய தோசை இது. நீங்களும் செய்து பார்த்துவிட்டு சொல்லுங்க…


க்ரிட்ஸ் என்பது நன்றாக காய்ந்த சோளத்தின் ரவை. அதில் அதிக அளவு நார்சத்து இருக்கின்றது. க்ரிட்ஸுடன் பார்லியினை சேர்த்து செய்த சத்தான இட்லி இது. இதற்கு காரமான சட்னி செய்து பாருங்க…சூப்பர்ப் காம்பினேஷன்.


இதனையும் ட்ரை செய்து பாருங்க…சவுத்வெஸ்ட் சிக்கன் சூப் - Southwest Chicken Soup - Healthy Soup Recipeஇந்த சூப் பார்த்தற்கு ரொம்ப  சிம்பிளாக இருந்தாலும் மிகவும் சுவையான சத்தான சூப்.


இந்த சூப்பின் சிறப்பே, இதில் குடைமிளகாயினை நெருப்பில் சூட்டு பிறகு அதனை சேர்த்து கொள்வது தான். இந்த சூப் தண்ணிர் மாதிரி இல்லாமல் கொஞ்சம் Thick Consistencyயில் தான் இருக்கும். விரும்பினால் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து கொள்ளலாம்.

இதனை spoonயிற்கு பதிலாக Tortilla Chipsயில் எடுத்து கூட சாப்பிடுவாங்க...சிக்கன் சாப்பிடாதவர்கள், சிக்கனுக்கு பதிலாக நிறைய Beans வகையினை சேர்த்து கொள்ளவும்.

சமைக்க தேவைப்படும் நேரம் : 30 நிமிடங்கள் -  1 மணி நேரம்
தேவையான பொருட்கள் :
·        சிக்கன் – 1 கப் (பொடியாக நறுக்கியது)
·        குடைமிளகாய் – சிவப்பு& பச்சை (Bell Peppers)
·        ஆலிவ் எண்ணெய் – 1 தே.கரண்டி

வெட்டி கொள்ள :
·        வெங்காயம் – 1
·        பூண்டு – 2 பல் (நசுக்கி கொள்ளவும்)
·        செலரி – 1 (1  கப் அளவிற்கு எடுத்து கொள்ளவும்)
·        தக்காளி – 2

பருப்பு வகைகள்:
·        Pinto Beans, Kidney Beans , Romano Beans, chick Peas – 2 கப்
(எந்த வகை பீன்ஸினையும் சேர்த்து கொள்ளலாம்.

சேர்க்க வேண்டிய தூள் வகைகள் :
·        மிளகாய் தூள் – 1 தே.கரண்டி
·        சீரக தூள் – 1 தே.கரண்டி
·        உப்பு – தேவையான அளவு

செய்முறை :
·        வெங்காயம் + தக்காளி + செலரியினை வெட்டிகொள்ளவும்.  பூண்டினை நசுக்கி கொள்ளவும். பருப்பினை ஊறவைத்து வேகவைத்து கொள்ளவும். (உப்பு இல்லாத Canned Beansயினையும் பயன்படுத்து கொள்ளவும். )


·        பத்திரத்தில் ஆலிவ் ஆயில் 1 தே.கரண்டி ஊற்றி பூண்டினை சேர்த்து வதக்கிய பிறகு வெங்காயம் சேர்த்து வதக்கி கொள்ளவும்.


·        வெங்காயம் வதங்கிய பிறகு செலரியினை சேர்த்து வதக்கவும்.

·        அதன் பிறகு தக்காளி + தூள் வகைகள் சேர்த்து வதக்கவும்.


·        இத்துடன் வேகவைத்த பருப்பினை சேர்த்து கொள்ளவும்.


·        பிறகு சிக்கன் ஸ்டாக்  2 கப் + சிறிது தண்ணீர் சேர்த்து வேகவைத்து கொள்ளவும்.


·        இதற்கிடையில், குடைமிளகாயினை அடுப்பில் வைத்து சுட்டு கொள்ளவும்.


·        ஒரு பக்கம் நன்றாக வெந்த பிறகு, அதனை திருப்பி போட்டு 30 sec கழித்து எடுத்து விட்டு சிறிது நேரம் ஆறவிடவும். பிறகு, Paper Towelயினை Wet செய்து கொண்டு, சுட்ட தோலினை நீக்கி விட்டு பொடியாக நறுக்கி கொள்ளவும்.


·        நன்றாக கொதிக்கும் பொழுது சிக்கனை சேர்த்து கொள்ளவும். அத்துடன் பொடியாக நறுக்கி வைத்துள்ள சிவப்பு +பச்சை குடைமிளகாயினையும் சேர்த்து கொள்ளவும். தேவையான அளவு உப்பு பார்த்து சேர்த்து கொள்ளவும்.


·        சுமார் 10 – 15 நிமிடங்கள் வேகவிடவும். விரும்பினால் Tex-Mex Cheese சேர்த்து கொள்ளவும்.


·        சுவையான ஹெல்தியான சூப் ரெடி. இதனை Tortilla Chips, Crackers போன்றவையுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.


குறிப்பு :
இதனை Slow Cooking மாதிரி சுமார் 1 மணி நேரம் வரை குறைந்த தீயில்  வேகவைத்தால் சூப்பராக இருக்கும்.

அவரவர் விருப்பத்திற்கு ஏற்றாற் போல பருப்பு வகையினை சேர்த்து கொள்ளவும்.

கண்டிப்பாக Bellpeppersயினை சூட்டு செய்தால் தான் சுவையாக இருக்கும்.


கலர்புல் டோமேடோ & சீஸ் சாலட் - Colorful Tomato and Mozzarella Cheese Saladதக்காளியினை கண்டிப்பாக தினமும் நாம் சமையலில் சேர்த்து கொள்வோம்… அதனையே சாலடாக சாப்பிடும் பொழுதும் மிகவும் சுவையாகவும் நமக்கு தேவையான அனைத்தும் சத்துகளும் கிடைக்கின்றது.

சுமார் 100 கிராம் தக்காளியில் வெரும் 20 கலோரில் தான் இருக்கும். அதனால் டயட்டில் இருப்பவங்க இதனை சேர்த்து கொள்வது மிகவும் நல்லது.

Fresh தக்காளியில் அதிக அளவு Potassium இருக்கின்றது. இதில் நிறைய நார்சத்து (Dietary Fiber), Antioxidants, Vitamins A , C & K இருக்கின்றது.

இந்த சாலடில் நான் சீஸ் சேர்த்து இருக்கின்றேன். சீஸ் சேர்க்க விரும்பதவங்க சேர்க்க தேவையில்லை. அதே மாதிரி கொத்தமல்லியிற்கு பதிலாக Basil, oregano போன்றவையினை சேர்த்து கொள்ளலாம்.


சாலட் செய்ய தேவைப்படும் நேரம் : 5 நிமிடங்கள்
தேவையான பொருட்கள்  :
·        தக்காளி – சிவப்பு, மஞ்சள், ஆரஞ்சு (Red, Yellow, Orange)
·        Mozzarella Cheese – தேவையான அளவு
·        கொத்தமல்லி - சிறிதளவு
·        உப்பு – தேவைக்கு

செய்முறை :
·        தக்காளியினை கழுவி கொள்ளவும். தக்காளியினை வட்ட வடிவத்தில் வெட்டி கொள்ளவும்.

·        தக்காளி வெட்டிய பிறகு அத்துடன் தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து கொண்டு சிறிது நேரம் ஊறவிடவும். ( கவனிக்க : கண்டிப்பாக இதில் முதலேயே உப்பு சேர்ப்பதால் கூடுதல் சுவையுடன் இருக்கும். கடைசியாக உப்பு சேர்த்தால் தக்காளியின் சுவை அவ்வளவாக தெரியாது.)


·        சீஸினையும் அதே மாதிரி வெட்டி வைக்கவும். பரிமாறும் ட்ரேயில் சிவப்பு, ஆரஞ்சு, மஞ்சள், சீஸ் துண்டு என்று விதத்தில் அலங்கரித்து பரிமாறவும். கடைசியில் சிறிது கொத்தமல்லி தூவவும்.

·        சுவையான சத்தான எளிதில் செய்ய கூடிய சாலட் ரெடி.
Related Posts Plugin for WordPress, Blogger...