சிக்கன் டம்ப்ளிங் சூப் - Chicken & Dumpling Soup - Healthy Soup


Canadaவில் இந்த சூப் மிகவும் பிரபலம். மிகவும் ஹெல்தியான  Comforting உணவு இது.

இதில் சிக்கனை எலும்புடன் சேர்த்து செய்தால் மிகவும் சுவையாக இருக்கும். சிக்கனை Directஆக சூப்பில் சேர்க்காமல், முதல் அதனை 2 தே.கரண்டி ஆலிவ் எண்ணெயில் அதனை வறுத்து எடுத்து பிறகு சேர்த்தால் கூடுதால் சுவையுடன் இருக்கும்.

Dumplingsயினை ஒவ்வொருவரும் விதவிதமாக செய்வாங்க… Butter சேர்த்து செய்தால் கூடுதல் சுவையுடன் இருக்கும். நான் மைதா + கார்ன்மீல் வைத்து செய்து இருக்கின்றேன். (கண்டிப்பாக கார்ன்மீல் சேர்த்தால் தான் நன்றாக இருக்கும். )

விரும்பினால் Dumplings செய்வதற்கு பதிலாக Biscuit Mix / Biscuit Dough வைத்து கூட செய்யலாம்.

அவரவர் விருப்பததிற்கு ஏற்றாற் போல காய்கள் சேர்த்து கொள்ளவும்.

சமைக்க தேவைப்படும் நேரம் : 1 மணி நேரம்
தேவையான பொருட்கள் :
·        சிக்கன் – 1/2 கிலோ (தோல் + எலும்புடன்)
·        சிக்கன் ஸ்டாக் – 3 கப்
·        மிளகுதூள் , உப்பு – தேவையான அளவு
·        ஓரோகனோ லீவ்ஸ்( Dry Oregano Leaves) – 1 தே.கரண்டி
·        ஆலிவ் ஆயில் – 2 மேஜை கரண்டி

நறுக்கி கொள்ள :
·        வெங்காயம் – 1 பெரிய வெங்காயம்
·        பூண்டு – 5 பல்
·        Celery Sticks -  2 கப் நறுக்கியது
·        காரட் – 1 கப் நறுக்கியது

Dumplings செய்ய :
·        மைதா மாவு – 1 + 1/2 கப்
·        மஞ்சள் கார்ன்மீல் – 1/2 கப்
·        பேக்கிங் பவுடர் – 1 மேஜை கரண்டி
·        உப்பு – தேவையான அளவு (சுமார் 1 தே.கரண்டிக்கும் குறைவாக)
·        பால் – 1 + 1/2  கப்

செய்முறை :
·        வெங்காயம்  + செலரியினை பொடியாக நறுக்கி கொள்ளவும். பூண்டினை நசுக்கி வைக்கவும்.

·        பனில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம் + பூண்டு சேர்த்து வதக்கவும்.


·        வெங்காயம் சிறிது வதங்கியதும் செலரி சேர்த்து வதக்கவும்.


·        இத்துடன் Oregano + தேவையான அளவு உப்பு சேர்த்து கொள்ளவும்.


·        சிக்கன் ஸ்டாக் + சிக்கன் சேர்த்து சிக்கன் வேகும் வரை (சுமார் 15 நிமிடங்கள் ) தட்டு போட்டு மூடி வேகவிடவும்.


·        சிக்கன் வெந்த பிறகு, அதனை தனியாக வெளியே எடுத்து சிறிது நேரம் ஆறவைத்து கொள்ளவும்.


·        அதன்பிறகு, அதன் தோல் பகுதி + எலும்பினை நீக்கி சதை பகுதி மட்டும் எடுத்து வைக்கவும்.


·        எலும்பு நீக்கிய சிக்கன் துண்டுகள் + காரட் + மிளகு தூள் + தேவையான அளவு உப்பு + 2 கப் தண்ணீர் சேர்த்து மிகவும் குறைந்த தீயில் வேகவிடவும்.


Dumplings செய்ய  :  
·        மைதா மாவு + கார்ன்மீல் + பேக்கிங் பவுடர் + உப்பு சேர்த்து தனியாக கலந்து வைக்கவும்.

·        பாலினை ஒரு பவுலில் ஊற்றி கொள்ளவும்.


·        இத்துடன் கலந்து வைத்துள்ள Dry Ingredients யினை சேர்த்து கரண்டியினால் கலந்து கொள்ளவும்.


·        இந்த மாவு மிகவும் கெட்டியாகவோ அல்லது தளர்வாகவோ இருக்க கூடாது. (கவனிக்க : கொடுத்துள்ள அளவின் படி செய்தால் மாவு சரியான பத்ததில் இருக்கும். ) இப்பொழுது Dumplings செய்ய மாவு ரெடி. (இதனை அக்‌ஷ்தா தான் எனக்கு கலந்து கொடுத்தாள்…)


·        பிறகு, சூப் இருக்கும் பாத்திரத்தில் இந்த மாவினை கரண்டியினால் எடுத்து Scoop செய்து சூப்பில் போடவும். (கவனிக்க : அப்படியே Spoonயினால் எடுத்து போடவும். கையில் உருட்ட வேண்டாம்)


·        இதனை அப்படியே தட்டு போட்டு மூடி சுமார் 20 நிமிடங்கள் மிதமான தீயில் வேகவிடவும். (Dumplingsயினை கிளறிவிடவோ அல்லது திருப்பிவிடவோ கூடாது. அப்படி செய்தால் அதனுடனைய Softness மாறிவிடும். )·        இப்பொழுது சுவையான சிக்கன் டம்ப்ளிங் சூப் ரெடி.


சுரைக்காய் சட்னி - Surakkai chutney / Bottle Gourd Chutney - Side dish for Idly / Dosaiசுரைக்காயில் அதிக அளவு நார்சத்து இருக்கின்றது. டயட் மற்றும் உடல் குறைய விரும்புவர்கள் இதனை உணவில் கண்டிப்பாக சேர்த்து கொள்வது நல்லது.

இதில் Iron, Potassium மற்றும் Vitamin C இருக்கின்றது.

தினமும் சுரைக்காய் சாப்பிட்டால், உடல் சூடினை குறைக்க மற்றும் Ulcer குணமடைய உதவுக்கின்றது.

சமைக்க தேவைப்படும் நேரம் : 20 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
·        சுரைக்காய் – 1 (நறுக்கியது சுமார் 3 கப் அளவு )
·        வெங்காயம் – 1
·        தக்காளி – 1
·        பச்சை மிளகாய் – 4 (காரத்திற்கு ஏற்றாற் போல)
·        கருவேப்பில்லை – 5 இலை
·        கொத்தமல்லி – சிறிதளவு

சேர்க்க வேண்டிய தூள் வகைகள் :
·        மஞ்சள் தூள் – 1/4 தே.கரண்டி
·        உப்பு – தேவையான அளவு
·        பெருங்காயம் – சிறிதளவு ( கடைசியில் சேர்க்க )

முதலில் தாளிக்க :
·        எண்ணெய் – 1 மேஜை கரண்டி
·        கடுகு, உளுத்தம் பருப்பு - தாளிக்க

செய்முறை :
·        சுரைக்காயின் மேல் தோல் நீக்கி மிகவும் பொடியாக நறுக்கி கொள்ளவும். வெங்காயம் + தக்காளியினை வெட்டி கொள்ளவும். பச்சைமிளகாயினை இரண்டாக கீறி கொள்ளவும்.


·        கடாயில் தாளிக்க கொடுத்துள்ள பொருட்கள் சேர்த்து தாளித்து அத்துடன் வெங்காயம் + கருவேப்பில்லை சேர்த்து வதக்கவும்.


·        இத்துடன் நறுக்கி வைத்துள்ள பச்சைமிளகாய் + தக்காளி + சுரைக்காய் சேர்த்து கொள்ளவும்.


·        உடனே மஞ்சள் தூள் + உப்பு இத்துடன் சேர்த்து வதக்கவும்.


·        1 கப் தண்ணீர் சேர்த்து நன்றாக வேகவிடவும். நன்றாக வெந்த பிறகு Masher அல்லது மத்து வைத்து மசித்துவிடவும்.


·        கடைசியில் பெருங்காயம் + கொத்தமல்லி தூவி 1 நிமிடம் வேகவிடவும்.

·        சுவையான சத்தான சட்னி ரெடி. இதனை இட்லி, தோசை , சப்பாத்தி போன்றவையுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.


குறிப்பு :
சுரைக்காயினை பொடியாக நறுக்காமல் துறுவி சேர்த்தால் சீக்கிரமாக சட்னி ரெடி ஆகிவிடவும்.

தக்காளியினை அளவினை குறைத்து அதற்கு பதில் சிறிது புளி தண்ணீர் சேர்த்து கொள்ளலாம்.

சட்னியினை கடாயில் செய்யாமல் பிரஸர் குக்கரில் 2 விசில் வரும் வரை வேகவிட்டால் சட்னி ரெடி.


கார குழம்பு - Kara Kuzhambu - Simple & Easy kuzhambu


நிறைய Blog Readers கேட்டு கொண்ட Recipe இது. எளிதில் செய்ய கூடிய குழம்பு இது...

சமைக்க தேவைப்படும் நேரம் : 20  நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
·        வெங்காயம் – 2
·        தக்காளி – 1 பெரியது
·        பூண்டு – 10 – 15 பல்
·        கருவேப்பிலை – 5 இலை

சேர்க்க வேண்டிய தூள் வகைகள் :
·        மிளகாய் தூள் – 2 தே. கரண்டி
·        தனியா தூள் – 2 தே. கரண்டி
·        மஞ்சள் தூள் – 1/4 தே.கரண்டி
·        உப்பு – தேவையான அளவு
மிளகாய் தூள் + தனியா தூள் தனியாக சேர்க்காமல் குழம்பு மிளகாய் தூள் 1 + 1/2 மேஜை கரண்டி பயன்படுத்து கொள்ளலாம்.

தாளிக்க :
·        நல்லெண்ணெய் – 2 மேஜை கரண்டி
·        கடுகு , வெந்தயம் – தாளிக்க

கரைத்து கொள்ள :
·        தண்ணீர் – 2 கப்
·        புளி – பெரிய நெல்லிக்காய் அளவு
·        (அல்லது ) புளி பேஸ்ட் (Tamrind Paste) – 1 தே.கரண்டி

செய்முறை :
·        பூண்டினை தோல் நீக்கி கொள்ளவும். வெங்காயம் + தக்காளியினை நீட்டாக வெட்டி கொள்ளவும்.

·        கடாயில் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்துள்ள பொருட்கள் சேர்த்து தாளித்து கொள்ளவும். இத்துடன் பூண்டினை சேர்த்து நன்றாக வதக்கி கொள்ளவும்.


·        பூண்டு நன்றாக வதங்கிய பிறகு, வெங்காயம் சேர்த்து 2 – 3 நிமிடங்கள் வதக்கவும்.


·        வெங்காயம் வதங்கிய பிறகு தக்காளி சேர்த்து மேலும் 2 - 3 நிமிடங்கள் வதக்கவும்.
·        பிறகு சேர்க்க கொடுத்துள்ள தூள் வகைகள் + கருவேப்பிலை சேர்த்து கலந்து 1 நிமிடம் வதக்கவும்.
·        புளியினை  (அ) புளி பேஸ்டினை 2 – 2 ½ கப் தண்ணீரில் கரைத்து கொள்ளவும். அந்த தண்ணீரினை கடாயில் ஊற்றவும்.


·        குழம்பினை சுமார் 10 நிமிடங்கள், அதாவது குழம்பு Thick ஆகும்வரை கொதிக்கவிடவும்.


·        சுவையான காரகுழம்பு ரெடி. இதனை சாதம், அப்பளமுடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.

குறிப்பு :
நல்லெண்ணெய் சேர்த்து குழம்பு செய்வதால் மிகவும் சுவையாக இருக்கும்.

நிறைய எண்ணெய் சேர்க்க வேண்டும் என்று தேவையில்லை. கொடுத்துள்ள அளவே போதுமானது.

பூண்டு பெரிய பல் என்றாக இரண்டாக வெட்டி கொள்ளவும்.

அவரவர் காரத்திற்கு ஏற்றாற் போல தூள் வகையினை சேர்த்து கொள்ளவும்.

மிளகாய் தூள் + தனியா தூள் என்று இல்லாமல், குழம்பு தூள் கூட சேர்த்து கொள்ளலாம்.

பூண்டு + வெங்காயம் + தக்காளி ஒவ்வொன்றையும் நன்றாக வதக்கி கொள்ளவும்.


ஸ்ட்ராபெர்ரி ஜாம் - Strawberry Jam - Kids Lunch Box Menu - 3


Strawberryயில் அதிக அளவு நார்சத்து, Vitamin C , Folate, Potassium இருக்கின்றது. குழந்தைகள் ரொம்ப விரும்பி சாப்பிடுவாங்க…

சமைக்க தேவைப்படும் நேரம் : 15 – 20 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
·        ஸ்ட்ராபெர்ரி – 3 கப் ( நறுக்கியது)
·        சக்கரை – 1 கப்
·        எலுமிச்சை சாறு – 1 தே.கரண்டி
·        Lemon Zest – 1/4 தே.கரண்டி


செய்முறை :
·        பழங்களை நன்றாக கழுவி கொள்ளவும். எலுமிச்சை பழத்தின் மேல் தோலினை சிறிது துறுவி கொண்டால் அதுவே Lemon Zest. ஸ்ட்ராபெர்ரி பழங்களின் இலையினை நீக்கி கொள்ளவும்.


·        இதனை Medium Size துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.


·        ஒரு அகலமான பாத்திரத்தில், வெட்டி வைத்துள்ள ஸ்ட்ராபெர்ரியினை போட்டு மிதமான தீயில் வேகவிடவும். (கவனிக்க : கண்டிப்பாக தண்ணீர் ஊற்ற வேண்டாம். ஸ்ட்ராபெர்ரியில் இருந்து வரும் தண்ணீரே போதுமானது.)

·        சுமார்  6 -  8 நிமிடங்கள் வரை அடிக்கடி கிளறிவிட்டு வேகவிடவும்.·        நன்றாக வெந்த பிறகு, Masher (அ) கரண்டியினை வைத்து மசித்தால் மசித்துவிடும். (குறிப்பு : அவரவர் விருப்பதிற்கு ஏற்றாற் போல Chunky or Fine மாதிரி மசித்து கொள்ளவும். )·        இத்துடன் சக்கரை + Lemon Zest சேர்த்து வேகவிடவும்.


·        சுமார்  3 – 4 நிமிடங்கள் கழித்து எலுமிச்சை சாறு சேர்த்து கொள்ளவும்.

·        எலுமிச்சை சாறு சேர்த்த பிறகு கெட்டியாகும் வரை வேகவிடவும். (மேலும் 2 – 3 நிமிடங்கள் தான் ஆகும் )


·        ஜாம் பதம் வந்த பிறகு, அதனை ஆறவைத்து பாட்டிலில் வைத்து கொள்ளவும். சுவையான எளிதில் செய்ய கூடிய ஜாம்.

·        இதனை Bread , சப்பாத்தி, தோசை போன்றவை மீது தடவி குழந்தைகளுக்கு Lunch Boxயிற்கு கொடுத்துவிடலாம்.கவனிக்க :
3 கப் நறுக்கிய Strawberry பழத்திற்கு 1 கப் சக்கரை, அதாவது 3 : 1 என்ற விதத்தில் சேர்த்து கொள்ளவும். பழம் ரொம்ப Sweetஆக இருந்தால் சக்கரையின் அளவினை சிறிது குறைத்து கொள்ளலாம்.

Lemon Zest சேர்ப்பதால் சுவையாக இருக்கும்.

கடைசியில் எலுமிச்சை சாறு சேர்ப்பதால், ஜாம் மிகவும் கட்டியாக இல்லாமல் ஜெல்லி பதத்தில் இருக்கும். எலுமிச்சை சாறு சேர்க்கவில்லை என்றால் கொஞ்சம் கெட்டியாகிவிடும்.

இதே மாதிரி மற்ற பழங்களிலும் செய்யலாம்.

இந்த Jamயினை 1 வாரம் வரை வைத்து இருந்து சாப்பிடலாம்.


ப்ரோக்கோலி ஆம்லெட் சண்ட்விச் - Broccoli Omelette on English Muffin - Kids Lunch Box Menu - 2


சமைக்க தேவைப்படும் நேரம் : 10 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
·        ப்ரோக்கோலி – 1 கப் (பொடியாக நறுக்கியது)
·        பூண்டு – 2 பல் (தோல் நீக்கி நசுக்கி கொள்ளவும்)
·        சில்லி ப்ளோக்ஸ் (Chilli Flakes) – 1 சிட்டிகை (விரும்பினால் )
·        முட்டை - 3        
·        உப்பு – தேவையான அளவு
·        ஆலிவ் ஆயில் – சிறிதளவு

Sandwich செய்ய :
·        English Muffins / ப்ரெட் துண்டுகள் – 1
·        Cheese – 2 Slices

செய்முறை :
·        Panயில்  1 தே.கரண்டி ஆலிவ் ஆயில் ஊற்றி சூடனாதும் பூண்டு + ப்ரோக்கோலி சேர்த்து 2 நிமிடம் வதக்கி கொள்ளவும்.


·        முட்டையினை உடைத்து ஒரு பவுலில் ஊற்றி கொள்ளவும். முட்டையுடன் 2 மேஜை கரண்டி தண்ணீர் + சிறிதளவு உப்பு சேர்த்து நன்றாக Forkயினால் அடித்து கொள்ளவும். (குறிப்பு : இப்படி தண்ணீர் சேர்த்து நன்றாக Beat செய்து கொள்வதால் ஆம்லெட் மிகவும் Fluffyஆக இருக்கும்.)

·        இத்துடன் வதக்கிய பொருட்கள் + சில்லி ப்ளோக்ஸ்  சேர்த்து கலந்து கொள்ளவும்.


·        Panயினை சூடாக்கி சிறிது ஆலிவ் ஆயில் ஊற்றி அதில் கலந்து வைத்துள்ள கலவையினை வைத்து ஆம்லெட் ஊற்றவும்.


·        ஒருபக்கம் நன்றாக வெந்த பிறகு திருப்பி போட்டு வேகவிடவும். நன்றாக வெந்த பிறகு, ஆம்லெட் மீது cheeseயினை வைக்கவும்.


·        English Muffinsயினை Toast செய்து கொள்ளவும். அதனுள் ஆம்லெடினை அதே வடிவத்தில் வெட்டி நடுவில் Sandwich மாதிரி வைக்கவும்.

·        குழந்தைகளுக்கு ஏற்ற ஈஸியான Healthyயான Lunch Box ரெடி. இத்துடன் ஏதாவது பழம் அல்லது பழ ஜுஸ் வைத்து அனுப்பலாம்.


குறிப்பு :
இதில் ப்ரோக்கோலி + சீஸ் சேர்ப்பதால் மிகவும் ஹெல்தியாக இருக்கும்.

இதே மாதிரி அவரவர் விருப்பத்திற்கு ஏற்றாற் போல காய்கள் சேர்த்து கொள்ளலாம்.

காரத்திற்கு chili Flakesயிற்கு பதிலாக மிளகுதூள் சேர்த்து கொள்ளலாம்.

English Muffinயிற்கு பதிலாக எந்த வித Breadயினையும் பயன்படுத்தலாம்.
Related Posts Plugin for WordPress, Blogger...