Basbousa - Eggless Rava Cake - Easy Mediterranean Dessert - Thanksgiving Special


இது மிகவும் பிரபலமான Mediterranean Dessert. எதில் செய்ய கூடிய FailProof Cake இது .

கண்டிப்பாக செய்து பார்த்து தங்களுடைய கருத்தினை தெரிவிக்கவும்….

இதனை Egglessஆக செய்து இருக்கின்றேன். முட்டை சேர்ப்பதாக இருந்தால், தயிருக்கு பதிலாக 2 முட்டை சேர்த்து கொள்ளவும். அப்படி சேர்க்கும் பொழுது விரும்பினால் சிறிது Vanilla Essence சேர்த்து கொள்ளலாம்.

நன்றி ஷோபனா , நன்றி சவிதா…

சமைக்க தேவைப்படும் நேரம் : 30 – 40 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
·        ரவை – 1 கப் + 1/4 கப் (250 கிராம்)
·        சக்கரை – 3/4 கப் (150 கிராம்)
·        வெண்ணெய் – 3/4 கப் (150 கிராம்)
·        தேங்காய் துறுவல் (Unsweetened Coconut) – 1/2 கப்
·        தயிர் – 1/2 கப்

சக்கரை சிரப் செய்ய :
·        சக்கரை – 3/4 கப்
·        தண்ணீர் – 3/4 கப்


செய்முறை :
·        Room Temperature Butter /வெண்ணெயினை Microwaveயில் 30 Seconds வைத்து உறிக்கிகொள்ளவும்


·        இதில் ரவையினை சேர்த்து கலந்து கொள்ளவும்


·        இத்துடன் சக்கரை + தேங்காய் துறுவல் + தயிர் சேர்த்து கரண்டியினால் கலந்து கொள்ளவும்.



·        அவனை 350Fயினை மூற்சூடு செய்து கொள்ளவும். அகலமான ட்ரேயில் 1 மேஜை கரண்டி Butterயினை தடவி அதில் கலந்து வைத்துள்ள கலவையினை கொட்டி சமப்படுத்தவும்.


·        ட்ரேயினை சிறிது தட்டி கொள்ளவும். இதனால் உள்ளே இருக்கும் Air எல்லாம் நீக்கிவிடும்.

·        கலவையில் அவரவர் விருப்பதிற்கு ஏற்றாற் போல cut செய்து கொள்ளவும்.


·        ட்ரேயினை அவனில் வைத்து 350Fயில் 20 – 22 நிமிடங்கள் Bake செய்யவும்.


·        இதன் நடுவில் சக்கரை சிரபினை தயார் செய்து கொள்ளவும். பாத்திரத்தில் சக்கரை + தண்ணீர் சேர்த்து 5 – 6 நிமிடங்கள் கொதிக்கவிடவும். (கவனிக்க : சக்கரை நன்றாக கரைந்தால் போதும். பாகு வரும் வரை கொதிக்கவிட வேண்டாம்.)


·        அவனில் இருந்து ட்ரேயினை வெளியில் எடுத்து அதில் இந்த Sugar Syrupயினை ஊற்றிவிடவும்.


·        திரும்பவும் ட்ரேயினை அவனில் வைத்து மேலும் 8 – 10 நிமிடங்கள் Bake செய்யவும்.


·        ட்ரேயினை வெளியில் வைத்து சிறிது நேரம் ஆறவைத்து அதனை பறிமாறவும்.


·        சுவையான Basbousa ரெடி. 


கும்பகோணம் கடப்பா - Kumbakonam Kadappa - Side Dish for Idly / Dosai Recipes


கடப்பா என்பது பருப்புடன் உருளைகிழங்கினை சேர்த்து செய்யும் குழம்பு வகை… இது இட்லி, தோசை சூப்பர்ப் காம்பினேஷன்…

இதில் காரத்திற்கு பச்சைமிளகாய் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

நான் பாசிப்பருப்புடன்,துவரம்பருப்பினை சேர்த்து செய்து இருக்கின்றேன். இதனை வெரும் பாசிப்பருப்பினை வைத்தும் செய்யலாம்.

தேங்காய் விழுதினை மைய அரைப்பதற்கு பதிலாக தேங்காய் பால் கூட சேர்த்து கொள்ளலாம்.

சமைக்க தேவைப்படும் நேரம் : 25 - 30 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :  
·        பாசிப்பருப்பு – 1/2 கப்
·        துவரம் பருப்பு – 1/2 கப்
·        உருளைகிழங்கு – 2 பெரியது
·        வெங்காயம் – 1
·        பச்சை மிளகாய் - 4
·        இஞ்சி பூண்டு விழுது – 1 மேஜை கரண்டி
·        மஞ்சள் தூள் – 1/2 தே.கரண்டி
·        உப்பு – தேவையான அளவு

தாளிக்க :
·        எண்ணெய் – 1 மேஜை கரண்டி
·        பட்டை – 2
·        சோம்பு – 1/4 தே.கரண்டி, கிராம்பு – 2

அரைத்து கொள்ள :
·        தேங்காய் துண்டுகள் – 4
·        பச்சைமிளகாய் - 2

கடைசியில் சேர்க்க :
·        கொத்தமல்லி - சிறிதளவு

செய்முறை :
·        வெங்காயத்தினை நீளமாக வெட்டி கொள்ளவும். பச்சைமிளகாயினை இரண்டாக கீறி வைக்கவும். உருளைகிழங்கினை தோல் சீவி சிறிய துண்டுகளாக நறுக்கவும்.

·        பிரஸர் குக்கரில் பாசிப்பருப்பு + துவரம்பருப்பு + தேவையான அளவு தண்ணீர் சேர்த்து 3 – 4 விசில் வரும் வரை வேகவைத்து கொள்ளவும். உருளைகிழங்கினை தனியாக வேகவைத்து கொள்ளவும். (குறிப்பு : விரும்பினால் பருப்புடன் உருளைகிழங்கினை சேர்த்து வேகவைத்து கொள்ளலாம்)

·        கடாயில் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்துள்ள பொருட்கள் சேர்த்து தாளித்து அத்துடன் இஞ்சி பூண்டு விழுதினை சேர்த்து வதக்கவும்.

·        இத்துடன் வெங்காயம் சேர்த்து வதக்கி கொள்ளவும்.


·        பிறகு வேகவைத்த பருப்பு + பச்சைமிளகாய் சேர்க்கவும்.


·        2  கப் தண்ணீர் + மஞ்சள் தூள் சேர்த்து 3 நிமிடங்கள் வேகவிடவும்.


·        அத்துடன் வேகவைத்த உருளைகிழங்கினை சேர்த்து சிறிது மசித்து 2  நிமிடங்கள் வேகவிடவும் (கவனிக்க: உருளையினை நன்றாக மசிக்க கூடாது.ஒன்றும்பாதியுமாக மசிக்கவும்.)


·        அரைக்க கொடுத்துள்ள பொருட்களை நன்றாக மைய அரைத்து இதில் சேர்த்து 4 – 5 நிமிடங்கள் கொதிக்கவிட்டு கடைசியில் கொத்தமல்லி தூவி பறிமாறவும்.



·        சூடான இட்லி, தோசைக்கு சூப்பரான காம்பினேஷன்…


ஷார்ட் ப்ரெட் குக்கீஸ் - Shortbread Cookies - Christmas Recipes - Simple Cookies Recipes


இந்த ஷார்ட் ப்ரெட் குக்கீஸ் மிகவும் சுவையாக அருமையாக இருக்கும் . இதனை குறைந்த Temperatureயில் அதாவது சுமார் 325 F யில் 12 – 15 நிமிடங்கள் வேகவிட  வேண்டும்.

பொதுவாக இந்த குக்கீஸிற்கு 1 Part Sugar + 2 parts Butter + 3 Parts Flour by Weight (1 : 2 : 3 Ratio) என்று விதத்தில் எடுத்து கொண்டு செய்வாங்க. Weighing Machine இல்லாதவர்களுக்கு கப் அளவில் செய்ய அளவு கொடுத்து இருக்கின்றேன்.

1 cup Butter – 225 gm
1 cup Sugar powder – 125 gm
1 cup All Purpose Flour – 125 gm

1 cup Powdered Sugar + 1 Cup Butter + 3 Cup Flour by Cup Measurement 
        -----------------------------------------------------------------------------------------------
1 Part Powdered Sugar + 2 parts Butter + 3 Parts Flour by Weight Measurement

நீங்களும் செய்து பார்த்து தங்களுடைய அன்பான கருத்தினை தெரிவிக்கவும்.


சமைக்க தேவைப்படும் நேரம் : 25 - 30  நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
·        All Purpose Flour – 3 கப்
·        வெண்னெய் – 1 கப்
·        பொடித்த சக்கரை – 1 கப்
·        உப்பு – 1/4 தே.கரண்டி

செய்முறை :
·        ஒரு பவுலில் பொடித்த சக்கரை + உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும் .


·        இத்துடன் Room Temperature Butter சேர்த்து கொள்ளவும் .


·        பிறகு மாவினை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும் .



·        Parchment Paper மீது கலந்த மாவினை வைத்து அதன் மீது இன்னொரு parchment paperயினை வைத்து மாவினை சாப்பாத்தி மாவினை போல் உருட்டி கொள்ளவும். (அப்படியே Roll செய்தால் மாவு கட்டையில் ஒட்டி கொள்ளும் அதனால் தான் parchment paperயினை பயன்படுத்து கொள்ளவும்.)


·        இதனை அவரவர் விருப்பத்திற்கு ஏற்ற வடிவத்தில் வெட்டி கொள்ளவும்


·        அவனை 325Fயில் மூற்சூடு செய்து கொள்ளவும் .அவனில் வைக்கும் ட்ரேயில் Parchment paperயினை வைக்கும் . அதன் மீது வெட்டி வைத்துள்ள துண்டுகளை சிறிது இடைவெளி வைத்து வைக்கவும்.


·        மூற்சூடு செய்த அவனில், ட்ரேயினை வைத்து 325Fயில் சுமார் 12 – 15 நிமிடங்கள் வேகவிடவும் (நான் குக்கிஸிக்கு அதிக இடைவெளி விட்டு வைக்கவில்லை என்பதால் இப்படி இருக்கின்றெது. அதனை கட் செய்து கொண்டேன் )(விரும்பினால் கூடுதலாக 1 அல்லது 2 நிமிடங்கள் அவனில் வைத்து கொள்ளவும்)




·        இது வெளியெ எடுக்கும் பொழுது மிகவும் க்ரிஸிபியாக இருக்காது . ஆனால் சிறிது நேரம் கழித்து பார்த்தால், வெளியே crispyயாகவும், உள்ளே softஆகவும் இருக்கும்.


·        சுவையான எளிதில் செய்ய கூடிய குக்கீஸ் ரெடி.


மெக்ஸிகன் ரைஸ் - Mexican Rice - Spanish Rice - Rice Varieties


Mexican Riceயினை Spanish Rice என்றும் குறிப்பிடுவர்கள். இதில் அரிசியுடன் அரைத்த தக்காளி விழுதினை சேர்த்து சமைப்பாங்க…

பார்பதற்கு நம்மூர் தக்காளி சாதம் மாதிரி தான் இருக்கும். இதில் காரத்திற்கு Jalapeno Peppers தான் பயன்படுத்துவாங்க..

Jalapeno Peppers பதிலாக பச்சை மிளகாய் கூட பயன்படுத்தலாம். ஆனால் சுவையில் சிறிது வித்தியாசம் இருக்கும்.

இதில் தக்காளி அரைத்து சேர்ப்பதால் Rich Red கலரில் இருக்கும்.


சமைக்க தேவைப்படும் நேரம் : 30 - 40 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
·        Long Grain Rice / புழுங்கல் அரிசி – 2 கப்
·        தக்காளி – 4
·        கொத்தமல்லி – சிறிதளவு கடைசியில் தூவ
·        உப்பு – சிறிதளவு
·        ஆலிவ் ஆயில் – 1 மேஜை கரண்டி

பொடியாக நறுக்கி கொள்ள :
·        பூண்டு – 4 பல்
·        வெங்காயம் – 1 பெரியது
·        காரட் ,குடைமிளகாய் – 1 கப் நறுக்கியது
·        Jalapeño Peppers – 1 விதை நீக்கியது

செய்முறை :
·        வெங்காயம் , குடைமிளகாய், காரடினை பொடியாக நறுக்கியது. Jalapeño மிளகாயினை விதை நீக்கி பொடியாக நறுக்கி வைக்கவும். பூண்டினை பொடியாக நறுக்கி வைக்கவும்.


·        தக்காளியினை கழுவி பெரிய துண்டுகளாக நறுக்கி அதனை மிக்ஸியில் போட்டு மைய அரைத்து கொள்ளவும்.

·        பிரஸர் குக்கரில், எண்ணெய் ஊற்றி பூண்டு சேர்த்து வதக்கி கொள்ளவும். இத்துடன் வெங்காயம் + காய்கள் சேர்த்து 1 – 2 நிமிடங்கள் வதக்கவும்.



·        அரிசியினை தண்ணீரில் கழுவி கொள்ளவும். அதனை தண்ணீர் இல்லாமல் கழுவி, இத்துடன் சேர்த்து மேலும் 2 நிமிடங்கள் வதக்கவும்.



·        அரைத்து வைத்துள்ள தக்காளியினை இத்துடன் சேர்த்து கொள்ளவும். (கவனிக்க : தக்காளி விழுதினை சேர்க்கும் பொழுது அதனை அளந்து கொள்ளவும். 4 தக்காளிக்கு சுமார் 1 ½ கப் – 2 கப் வரை விழுது வரும். )


·        பிறகு, 1 கப் அரிசிக்கு 2 கப் தண்ணீர் என்ற அளவில் சேர்த்து கொள்ளவும். (கவனிக்க : தக்காளி விழுதினையும் சேர்த்து இருக்கின்றோம். அதனால் தண்ணீரின் அளவினை பார்த்து சேர்த்து கொள்ளவும். )


·        இத்துடன் உப்பு சேர்த்து கொள்ளவும். பிரஸர் குக்கரினை மூடி 1 விசில் வரும் வரை வேகவிடவும். (கவனிக்க: கண்டிப்பாக 1 விசில் வந்ததுவுடன் அடுப்பினை நிறுத்திவிடவும். இந்த மெக்ஸிகன் ரைஸிற்கு அதிகம் குழைவாக இருக்ககூடாது. )


·        பிரஸர் குக்கரினை திறந்து, அத்துடன் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி சேர்த்து கலந்து கொள்ளவும்.



·        சுவையான மெக்ஸிகன் ரைஸ் ரெடி. இதனை சிப்ஸ், முட்டை அல்லது எதாவது ப்ரையுடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.
Related Posts Plugin for WordPress, Blogger...