பாதாம் சட்னி - Badam Chutney / Almond Chutney - Side Dish for Idly / Dosai


பொதுவாக எப்பொழுதும் பொட்டுக்கடலை , வேர்க்கடலை அல்லது கடலைப்பருப்பு வைத்து தான் சட்னி செய்வோம்.  ஒரு மாறுதலுக்காக பாதாம் பருப்பினை சேர்த்து சட்னி செய்து பாருங்க..அப்பறம் எப்பொழுதுமே இந்த சட்னி தான் செய்வோம்.

ஊருக்கு சென்ற பொழுது, அம்மா இது மாதிரி பருப்பு வகைகள் எல்லாம் சேர்த்து சட்னி செய்தால் நன்றாக இருக்கும் என்று சொன்னாங்க…அதன்பிறகு, இங்கே வந்த பிறகு செய்து பார்த்தேன்..மிகவும் நன்றாக இருந்தது.

இதில் பாதாம் பருப்பினை வேகவைத்து தோல் நீக்கி அரைத்தேன். விரும்பினால் தோல் நீக்க தேவையில்லை. அப்படியே சேர்த்து அரைக்கலாம்.


சமைக்க தேவைப்படும் நேரம் : 10 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
·        பாதாம் பருப்பு – 20 – 25
·        தேங்காய் – 2 துண்டுகள்
·        பச்சைமிளகாய் – 2
·        இஞ்சி – சிறிய துண்டு
·        உப்பு – தேவையான அளவு

தாளிக்க :
·        எண்ணெய் – 1 தே.கரண்டி
·        கடுகு, உளுத்தம்பருப்பு – தாளிக்க
·        கருவேப்பில்லை – 4 இலை

செய்முறை :
·        பாதாம் பருப்பு + 1 கப் தண்ணீர் சேர்த்து Microwaveயில் 4 நிமிடங்கள் வேகவிடவும். (குறிப்பு : இதில் பாதாம் பருப்பு முதலில் ஊற வைக்க தேவையில்லை. அப்படியே வேகவிடவும்.)


·        பிறகு, பருப்பில் இருந்து தோலினை தனியாக நீக்கி வைக்கவும்.


·        மிக்ஸியில், பாதாம் பருப்பு + தேங்காய் + பச்சைமிளகாய் + இஞ்சி + உப்பு சேர்த்து அரைக்கவும்.


·        பிறகு சிறிது தண்ணீர் சேர்த்து மைய அரைக்கவும்.


·        தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளித்து சட்னியில் சேர்க்கவும்.

·        சுவையான சத்தான சட்னி ரெடி. சூடான இட்லி, தோசைக்கு சூப்பப்ர் காம்பினேஷன்.


குறிப்பு :
Badam / Almonds மாதிரியே Cashew, Walnut போன்ற பருப்பு வகையினையும் சேர்த்து செய்யலாம்.

அவரவர் விருப்பதிற்கு ஏற்றாற் போல பொருட்களை சேர்த்து கொள்ளலாம்.

தேங்காய் இல்லாமலும் செய்யலாம். அதே போல கொத்தமல்லி, புதினா போன்றவையினையும் சேர்த்து செய்யலாம்.

4 comments:

Shanthi said...

awesome..so cool recipe..my friend was telling about this almond chutney long back..nice to see different version of it..

திண்டுக்கல் தனபாலன் said...

படத்தில் உள்ள தோசை போலவும் செய்ய வேண்டும்...!

படங்களுடன் செய்முறை விளக்கம் அருமை... நன்றிங்க... தொடர

வாழ்த்துக்கள்...

Selvi Srinivasan said...

edu migavum nanraga irundadu...

Selvi Srinivasan said...

awsome....

Related Posts Plugin for WordPress, Blogger...