செர்ரி டொமெடோ ஹார்ட்ஸ் சாலட் - Cherry Tomato Hearts Salad - Valentine Special Recipes


எளிதில் செய்ய கூடிய ஸ்பெஷல் சாலட் . நீங்களூம் செய்து பார்த்துவிட்டு உங்கள் அன்பான கருத்தினை தெரிவிக்கவும்.

சாலட் செய்ய தேவைப்படும் நேரம் : 5 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
·        செர்ரி தக்காளி – Cherry Tomatoes – 10 -15
·        Spinach / எதாவது சாலட் கீரை வகைகள் – 2 கப்
·        சீஸ் – சிறிதளவு துறுவியது
·        Ranch/ Blue Cheese/ Salad Dressing – விருப்பதிற்கு ஏற்றாற் போல

செய்முறை :
·        தக்காளியினை கழுவி கொள்ளவும். ஒரே அளவிலான தக்காளிகளை One Pair  ஆகாக எடுத்து தனி தனியாக வைத்து கொள்ளவும். (அப்பொழுது தான் Hearts ஒரே அளவில் இருக்கும்.)


·        ஒரே அளவில் இருக்கும் இரண்டு தக்காளியினை எடுத்து கொள்ளவும். தக்காளியினை 3/4 பகுதியினை Diagonalஆக வெட்டி கொள்ளவும். (அதாவது ஒரு பகுதி பெரியதாகவும் அடுத்த பகுதி சிறியதாகவும் Diagonalஆக Cut செய்ய வேண்டும்.)
·        அதே மாதிரி அடுத்த தக்காளியினை வெட்டவும். Diagonalஆக வெட்டிய 3/4 பகுதியினை , 2 தக்காளியில் எடுத்து Heart Shapeயில் வைக்கவும்.


·        இதே மாதிரி அனைத்து தக்காளியிலும் செய்யவும். இப்பொழுது Cherry Tomato Hearts ரெடி.


·        சாலட் பறிமாறும் தட்டில், Spinach வைத்து அதன் மீது இந்த Heartsயினை வைக்கவும். பிறகு அதன் மீது Salad Dressing மற்றும் சீஸ் தூவி பறிமாறவும்.

·        அழகாக Heart சாலட் ரெடி.

குறிப்பு :
இதே மாதிரி அவரவர் விருப்பதிற்கு ஏற்றாற் போல சாலட் செய்து இந்த Heartயினை அதில் வைக்கலாம்.


Cherry Tomatoவிற்கு பதிலாக Grapesயிலும் இதனை செய்யலாம். ஆனால் தக்காளியில் செய்யும் பொழுது மிகவும் அழகாக இருக்கும். குழந்தகைகளுக்கு பழங்களில் இது மாதிரி செய்து கொடுக்கலாம்.


3 comments:

Asiya Omar said...

ஸ்சப்பா ,கண்ணை பறிக்குது போடோஸ்..சூப்பர்.

Shanthi said...

wow..beautiful hearts with tomato..awesome...

Selvi Srinivasan said...

super beautiful hearts with tomato

Related Posts Plugin for WordPress, Blogger...