கோவை ஹோட்டல் அங்கணன் பிரியாணி - Kovai Hotel Anaganan Style Biryani - Hotel Style cooking

இந்த பிரியாணியின் ஸ்பெஷலே,

·     இதில் தக்காளி சேர்க்க தேவையில்லை.
· பூண்டினை முழு பல்லாகவும், இஞ்சியினை மட்டும் அரைத்து சேர்க்க வேண்டும். 
·     காரத்திற்கு பச்சை மிளகாய் மட்டும் தான் சேர்க்க வேண்டும். (மிளகாய் தூள் எல்லாம் சேர்க்க தேவையில்லை.அதனால் பச்சைமிளகாயினை கூடுதலாக சேர்த்து கொள்ளவும். காரம் குறைந்தால் பிரியாணி வேறு சுவை தரும்.) 
·  கொத்தமல்லியினை அரைத்து சேர்க்க வேண்டும். புதினா இலையினை வதக்கும் பொழுது சேர்க்க வேண்டும். 
·     தயிர் அதிகம் சேர்க்க தேவையில்லை. எலுமிச்சை சாறு சிறிதளவு சேர்க்க வேண்டும்.

நீங்களும் செய்து பார்த்து உங்கள் கருத்தினை தெரிவிக்கவும். நன்றி மேனகா


சமைக்க தேவைப்படும் நேரம் : 40 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
·        சிக்கன் – 1/2 கிலோ
·        பாஸ்மதி அரிசி – 3 கப்
·        தயிர் – 2 மேஜை கரண்டி
·        பூண்டு – 10 – 12 பல் தோல் நீக்கியது
·        புதினா இலை – 1 கைபிடி, எலுமிச்சை சாறு – பாதி பழம்
·        நெய், எண்ணெய் – சிறிதளவு

சேர்க்க வேண்டிய தூள் வகைகள் :
·        மஞ்சள் தூள் – 1 தே.கரண்டி
·        உப்பு – தேவையான அளவு

நறுக்கி கொள்ள :
·        வெங்காயம் – 2
·        பச்சைமிளகாய் – 4 கீறி கொள்ளவும்

அரைத்து கொள்ள :
·        முந்திரி – 5 – 6
·        கொத்தமல்லி – 1 கைபிடி
·        வெங்காயம் – 1/2
·        இஞ்சி – 1 இன்ச் துண்டு
·        பச்சைமிளகாய் – 4
·        பட்டை – 1, கிராம்பு – 2, ஏலக்காய் – 2
கவனிக்க : 1. Original Recipeயில் முந்திரிக்கு பதிலாக கசகசா சேர்த்து இருப்பாங்க…விரும்பினால் அதனையும் சேர்த்து கொள்ளவும். கசகசா – 2 தே.கரண்டி
2. பட்டை, கிராம்பு, ஏலக்காயினை அரைக்காமல் கரம்மசாலாவினை 1/2 தே.கரண்டி சேர்த்து கொள்ளலாம்.

முதலில் தாளிக்க :
·        எண்ணெய் , நெய் – 1 மேஜை கரண்டி
·        பட்டை, கிராம்பு, பிரியாணி இலை

செய்முறை :
·        அரைக்க கொடுத்துள்ள பொருட்களை எடுத்து கொண்டு மைய அரைத்து கொள்ளவும்.·        வெங்காயத்தினை நீளமாக நறுக்கி வைக்கவும். சிக்கனை சுத்தம் செய்து கொள்ளவும். அரிசியினை தண்ணீரில் சுமார் 10 – 15 நிமிடங்கள் ஊறவைத்து கொள்ளவும். புதினா இலையினை கழுவி கொள்ளவும்.

·        கடாயில் எண்ணெய் + நெய் ஊற்றி தாளிக்க கொடுத்துள்ள பொருட்கள் சேர்த்து தாளித்து அத்துடன் பூண்டினை சேர்த்து 1 நிமிடம் வதக்கவும்.


·        இத்துடன் வெங்காயம் சேர்த்து 2 – 3 நிமிடங்கள் வதக்கவும்.


·        வெங்காயம் சிறிது வதங்கிய பிறகு, அத்துடன் அரைத்து வைத்துள்ள கலவையினை சேர்த்து 2 – 3 நிமிடங்கள் வதக்கவும்.


·        புதினா இலைகள் சேர்த்து மேலும் 1 நிமிடம் வதக்கவும்.


·        இப்பொழுது சிக்கன் + தூள் வகைகள் + தயிர் சேர்த்து வேகவிடவும்.
·        சிக்கன் பாதி வெந்த பிறகு அத்துடன் பச்சை மிளகாய் + தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.·        அரிசியினை கழுவி கொள்ளவும். பிரஸர் குக்கரில் 1 தே.கரண்டி நெய் ஊற்றி அதில் அரிசியினை தண்ணீர் இல்லாமல் போட்டு வதக்கி கொள்ளவும்.

·        இப்பொழுது கொதிக்கும் கலவையினை பிரஸர் குக்கரில் ஊற்றி, உப்பினை அளவினை சரி பார்த்து கொள்ளவும்.


·        சாதம் பாதி வெந்த பிறகு, பிரஸர் குக்கரில் வெயிட் போட்டு மூடி மிகவும் குறைந்த தீயில் சுமார் 20 – 22 நிமிடங்கள் வைக்கவும். ( கவனிக்க : கண்டிப்பாக மிகவும் சிறுதீயில் இருக்க வேண்டும். அதே மாதிரி பிரஸர் குக்கரில் Whistle வர தேவையில்லை. இந்த மாதிரி செய்தால் சாதம் நன்றாக ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் தம் போட்ட மாதிரி இருக்கும். )

·        பிரஸர் குக்கரினை திறந்து எலுமிச்சை சாறு + 1 தே.கரண்டி நெய் ஊற்றி கிளறிவிட்டு மேலும் 5 நிமிடங்கள் மூடி வைக்கவும்.·        சுவையான பிரியாணி ரெடி. இதனை ரய்தா, வேகவைத்த முட்டை, சிக்கன் மசாலா போன்றவையுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

  Print Recipe

5 comments:

Priya Suresh said...

Super briyani, inviting Geetha..Kudiya seekarama pannanam pola irruku.

Sangeetha Nambi said...

Mouth watering....

Niloufer Riyaz said...

interesting recipe! looks yumm

Asiya Omar said...

ஸ்டெப் படங்களுடன் பிரியாணி சூப்பர்.

Selvi Srinivasan said...

briyani rompa super thank you

Related Posts Plugin for WordPress, Blogger...