முட்டை பிரியாணி - Egg Biryani - Biryani Varieties - Egg Recipes


print this page PRINT

இந்த பிரியாணியில், முட்டையினை வேகவைத்து சேர்த்து இருக்கின்றேன்.

பிரியாணி செய்து கடைசியில் 2 முட்டையினை சிறிது மஞ்சள் தூள் + மிளகாய் தூள் + உப்பு சேர்த்து , முட்டை பொடிமாஸ் (Scrambled Eggs ) மாதிரி செய்து பிரியாணியில் கிளறினால் சூப்பர்ப் சுவையுடன் இருக்கும்.

நீங்களும் செய்து பார்த்துவிட்டு உங்கள் கருத்தினை தெரிவிக்கவும்…

சமைக்க தேவைப்படும் நேரம் : 30 – 35 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
·        முட்டை – 6
·        பாஸ்மதி அரிசி – 2 கப்
·        இஞ்சி பூண்டு விழுது – 1 மேஜை கரண்டி
·        தயிர் – 1/2 கப்
·        தேங்காய் பால் – 1 கப்
·        Chicken Stock / Vegetable Stock – 1 கப் / Optional / விரும்பினால் சேர்த்து கொள்ளவும்.

நறுக்கி கொள்ள :
·        வெங்காயம் – 1 பெரியது
·        தக்காளி – 2
·        பச்சைமிளகாய் - 4
·        புதினா, கொத்தமல்லி – 1 கைபிடி

சேர்க்க வேண்டிய தூள் வகைகள் :
·        மஞ்சள் தூள் – 1/2 தே.கரண்டி
·        கரம்மசாலா தூள் – 1/4 தே.கரண்டி
·        மிளகாய் தூள் – 1 தே.கரண்டி
·        உப்பு – தேவையான அளவு

முதலில் தாளிக்க :
·        எண்ணெய் + நெய் – 2 மேஜை கரண்டி
·        பட்டை, சோம்பு, கிராம்பு, ஏலக்காய்

செய்முறை :
·        முட்டையினை தண்ணீரில் போட்டு 8 – 10 நிமிடங்கள் வேகவைத்து அதில் இருந்து தோலினை நீக்கி தனியாக வைத்து கொள்ளவும். முட்டையினை 2 – 3 இடத்தில் கீறி கொள்ளவும்.


·        அரிசியினை தண்ணீரில் குறைந்தது 10 நிமிடங்கள் ஊறவைத்து கொள்ளவும்.

·        முட்டை வேகும் சமயம், வெங்காயம் + தக்காளியினை நீளமாக நறுக்கி வைக்கவும். புதினா, கொத்தமல்லியினை சுத்தம் செய்து கொள்ளவும். பச்சைமிளகாயினை இரண்டாக கீறி கொள்ளவும்.

·        கடாயில் எண்ணெய் + நெய் ஊற்றி தாளிக்க கொடுத்துள்ள பொருட்கள் சேர்த்து தாளித்த பிறகு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கி கொள்ளவும்.


·        இத்துடன் வெங்காயம் சேர்த்து 2 – 3 நிமிடங்கள் நன்றாக வதக்கி கொள்ளவும்.

·        வெங்காயம் வதங்கிய பிறகு தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும்.


·        பிறகு, இதில் பச்சைமிளகாய் + புதினா, கொத்தமல்லி சேர்த்து வதக்கி கொள்ளவும்.

·        இதில் தயிர் + சேர்க்க கொடுத்துள்ள தூள் வகைகள் சேர்த்து மேலும் 2 – 3 நிமிடங்கள் வதக்கி கொள்ளவும்.

·        பின்னர் தேங்காய் பால் சேர்த்து வேகவிடவும்.
  

·        இதில் முட்டையினை சேர்த்து மேலும் 2 – 3 வேகவிடவும். இதில் தேவையான அளவு தண்ணீர் + Vegetable/Chicken Stock சேர்த்து கொதிக்கவிடவும்.


·        பிரஸர் குகக்ரில் 1 தே.கரண்டி நெய் ஊற்றி அதில் அரிசியினை சேர்த்து 1 நிமிடம் வதக்கி கொள்ளவும். 

·        அதில் இந்த முட்டை கலவையினை ஊற்றி 1 விசில் வரும் வரை வேகவிடவும்.·        சுவையான முட்டை பிரியாணி ரெடி. இத்துடன் பச்சடி , சிப்ஸுடன் சாப்பிட அருமையாக இருக்கும்.


4 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

உடனே செய்யலாம்... எளிதான முட்டை பிரியாணியின் செய்முறைக்கு நன்றி சகோதரி...

Priya Suresh said...

Variety briyaniya pottu kalakuring Geetha, unga blog pakkam vanthale pasikathavangalukum pasikum.

Saratha said...

முட்டை பிரியாணி எளிமையாகவும்,நல்ல அசத்தலாகவும் இருக்கு.சூப்பர்!!

Gita Jaishankar said...

Very nice preparation, this is my favorite too, looks superb :)

Related Posts Plugin for WordPress, Blogger...