முருகன் இட்லி கடை இட்லி - Murugan Idly Kadai Idly Recipe / Idli Recipes - Restaurant / Hotel style cooking


print this page PRINT 

 மிகவும் Softஆன இட்லி..முருகன் இட்லி கடை Websiteயிலேயே அவங்க Idly Recipeயினை வெளியிட்டு இருக்காங்க…

அதில், கடை இட்லி செய்முறையில்,  2 கப் இட்லி அரிசிக்கு 1 கப் உளுத்தம்பருப்பு என்ற Ratioவில் கொடுத்து இருந்தாங்க… எனக்கு அந்த Ratioவில் இட்லி சரியாக வரவில்லை. 

நான் 3 கப் இட்லி அரிசிக்கு 1 கப் உளுத்தம்பருப்பினை சேர்த்து சேர்த்து செய்தேன். (இந்த Ratioவில் தான் நான் எப்பொழுது இட்லிக்கு மாவி அரைப்பேன்…) அதே மாதிரி தான் இதற்கு அரைத்தேன்… நன்றாக இருந்தது…

நீங்களும் செய்து பார்த்து உங்கள் கருத்தினை தெரிவிக்கவும்…


அரிசி ஊறவைக்க : குறைந்தது 5 – 6 மணி நேரம்
மாவு புளிக்க : குறைந்தது 8 - 10 மணி நேரம்
சமைக்க தேவைப்படும் நேரம் : 10 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
·        இட்லி அரிசி – 3 கப்
·        உளுத்தம் பருப்பு – 1 கப்
·        வேகவைத்த சாதம் – 1/2 கப்
·        வெந்தயம் – 1/2 தே.கரண்டி
·        உப்பு – தேவையான அளவு

செய்முறை :
·        இட்லி அரிசி + வெந்தயம் சேர்த்து தண்ணீர் ஊற்றி குறைந்தது 5 – 6 மணி நேரம் ஊறவைத்து கொள்ளவும். அதே மாதிரி உளுத்தம்பருப்பினை தனியாக சுமார் 4 மணி நேரம் ஊறவைத்து கொள்ளவும்.

·        ஊறவைத்த பொருட்களை கழுவி , அதில் இருந்து தண்ணீர் வடித்து கொள்ளவும். ஊறவைத்த உளுத்தம்பருப்பு + 1/4 கப் குறைவான தண்ணீர் சேர்த்து மாவினை மைய அரைத்து கொள்ளவும். இதனை தனியாக பாத்திரத்தில் வைக்கவும்.

·        மீண்டும் மிக்ஸியில் அரிசி + வெந்தயம் + வேகவைத்த சாதம் + 1/4 கப் தண்ணீர் சேர்த்து மைய அரைத்து கொள்ளவும்.

·        இப்பொழுது இதனையும் பாத்திரத்தில் ஊற்றி அத்துடன் தேவையான அளவு உப்பு (சுமார் 3/4  தே.கரண்டி அளவு) சேர்த்து கரண்டியினால் நன்றாக கலந்து கொள்ளவும்.

·        கலந்து வைத்துள்ள மாவினை நன்றாக புளிக்கவிடவும்.



·        புளித்த மாவினை இட்லிகளாக சூடவும். சூடான இட்லி ரெடி. இத்துடன் சட்னி, சாம்பார், பொடி போன்றவையுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.




10 comments:

Gita Jaishankar said...

Such soft looking idlis, looks so tempting and delicious, thanks for sharing dearie :)

Savitha Ganesan said...

Idli looks so soft . Geetha, will call u today. My phone is working.

sripriya vidhyashankar said...

looks really soft.. nice entry..

Veena Theagarajan said...

so soft and delicious looking idli

Vimitha Anand said...

Super soft a irukku...

திண்டுக்கல் தனபாலன் said...

அசத்தலான படங்களுடன் செய்முறை குறிப்பிற்கு நன்றி...

திண்டுக்கல் தனபாலன் said...

இன்றைய பகிர்வில் சில பகுதிகள் உங்கள் தளத்திற்கும் உதவக் கூடும்... முக்கியமாக கீழ் உள்ள தலைப்பு :

4. வாசகர்களை நம் தளத்திற்கு வந்து வாசிக்க வைக்க...!

6. .in என்பதை .com-யாக மாற்றி எல்லா நாட்டவரையும் வாசிக்க வைக்க...!

இணைப்பு : http://dindiguldhanabalan.blogspot.com/2014/03/Speed-Wisom-3.html

நன்றி...

Magees kitchen said...

Traditional recipe of Tamilnadu....Looks fluffy and soft

Kalpana Sareesh said...

murugan kadai idlies r def not tis soft .. i can vouch tis is so yumm

Priya Suresh said...

Soft idli tempting me, rendu idli parcel please.

Related Posts Plugin for WordPress, Blogger...