கருணைகிழங்கு வறுவல் - Karunai Kizhangu Varuval Recipe - Senai Kizhangu Fry - Easy Varuval recipe


சமைக்க தேவைப்படும் நேரம் : 15 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
  .  கருணைக்கிழங்கு - 1/4 கிலோ
  .  புளி - சிறிய கொட்டைபாக்கு அளவு (அல்லது ) புளி பேஸ்ட் - 2 சிட்டிகை அளவு
  .  எண்ணெய் - 2 மேஜை கரண்டி அளவு
  .  கருவேப்பிலை - 5 - 6 இலை (கடைசியில் தூவ)

சேர்க்க வேண்டிய தூள் வகைகள் :
  .  மஞ்சள் தூள் - 1/4 தே.கரண்டி
  .  மிளகாய் தூள் - 3/4 தே.கரண்டி
  .  சோம்பு தூள் - 1/4 தே.கரண்டி
  .  உப்பு - தேவையான அளவு

செய்முறை :
.  கருணைகிழங்கின் தோலினை நீக்கி ஒரே அளவிலான துண்டுகளாக வெட்டி கொள்ளவும்..  வெட்டிய துண்டுகளை கழுவி கொள்ளவும். அது முழ்கும் அளவு தண்ணீரில் போட்டு Microwaveயில் 3 - 4 நிமிடங்கள் வேகவைத்து கொள்ளவும்.


(கவனிக்க : Microwaveயிற்கு பதிலாக பாத்திரத்தில் போட்டு அடுப்பிலும் வேகவைத்து கொள்ளலாம். அதிகம் வேகவைக்க வேண்டாம். )

.  பிறகு அதில் இருந்த தண்ணீர் எல்லாம் நீக்கிவிடவும். அத்துடன் புளி பேஸ்ட் அல்லது கெட்டியாக கரைத்த புளி கரைசல் + சேர்க்க கொடுத்துள்ள தூள் வகைகள் சேர்த்து கலந்து கொள்ளவும்.


.  இதனை 3 - 5 நிமிடங்கள் ஊறவைத்து கொள்ளவும். தோசை கல்லினை (அ) Non-stick Panயினை சூடுபடுத்தி கொள்ளவும்.

.  அதில் சிறிது எண்ணெய் ஊற்றி இந்த துண்டுகளை ஒன்றுடன் ஒன்று ஒட்டாமல் வைத்து வேகவிடவும்.


.  ஒரு பக்கம் நன்றாக வெந்த பிறகு அதனை திருப்பி போட்டு வேகவிடவும்.


.  கடைசியில் கருவேப்பிலை தூவி விடவும். சுவையான கருணைகிழங்கு வறுவல் ரெடி. இதனை சாம்பார், குழம்பு, கலந்த சாதம் போன்றவையுடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.


3 comments:

அமுதா கிருஷ்ணா said...

இது இங்கே சேனை கிழங்குன்னு சொல்வோம். கொஞ்சமா தேங்காய் பால் சேர்த்து செய்தா மசால் இன்னும் டேஸ்ட்டா வரும்.பார்க்க செமையா இருக்கு கீதா.

Asiya Omar said...

இது சேனைக்கிழங்கு தானே ! படங்கள் அருமை.

Selvi Srinivasan said...

idhu senaikilangu varuval

Related Posts Plugin for WordPress, Blogger...