நெல்லூர் மசாலா ரைஸ் - Nellore Masala Rice - Simple Lunch Box Menu


print this page PRINT

மிகவும் எளிதில் செய்ய கூடிய வித்தியசமான ஸ்பைசியான கலந்த சாதம்.

இதன் சுவையே இதில் நாம் வறுத்து பொடிக்கும் (எள், தனியா, காய்ந்தமிளகாய்) பொருட்களில் தான் இருக்கின்றது.

எப்பொழுதும் செய்யும் தக்காளி சாதம் ஸ்டைல் தான் ...ஆனால் கடைசியில் இந்த பொடியினை தூவி சாதம் கிளறினால் வித்தியசமான சுவையுடன் நன்றாக இருக்கும். நன்றி விஜி.

சமைக்க தேவைப்படும் நேரம் : 10 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
. வேகவைத்த சாதம் - 3 கப்
மஞ்சள் தூள் - 1/4 தே.கரண்டி
உப்பு - தேவையான அளவு

தாளிக்க :
எண்ணெய் - 1 மேஜை கரண்டி
கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு - தாளிக்க
வெங்காயம் - 1 
தக்காளி - 1
கருவேப்பிலை - 5 இலை

வறுத்து பொடிக்க :
எள் - 2 மேஜை கரண்டி
தனியா - 2 மேஜை கரண்டி
காய்ந்த மிளகாய் - 4 - 6 (காரத்திற்கு ஏற்ப)

செய்முறை :
வெங்காயம் + தக்காளியினை நீளமாக நறுக்கி வைக்கவும். வறுக்க கொடுத்துள்ள பொருட்கள் அனைத்துமே ஒன்றாக சேர்த்து 1 - 2 நிமிடங்கள் வறுத்து கொள்ளவும்.

வறுத்த பொருட்களை மிக்ஸியில் போட்டு பொடித்து கொள்ளவும்.


கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு சேர்த்து தாளித்து கொள்ளவும். இத்துடன் வெங்காயம் சேர்த்து  வதக்கி கொள்ளவும்.

அத்துடன் தக்காளி + மஞ்சள் தூள் + உப்பு சேர்த்து மேலும் 2 நிமிடம் வதக்கி கொள்ளவும்.


இதில் பொடித்து வைத்துள்ள பொடியினை 1 - 2 மேஜை கரண்டி அளவு சேர்த்து கிளறவும்.


பின்னர் வேகவைத்துள்ள சாதத்தினை இதில் சேர்த்து அனைத்து சேருமாறு கிளறிவிடவும்.


ஈஸியான Lunch Box Rice ரெடி. இத்துடன் எதாவது வறுவல் அல்லது சிப்ஸுடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.


6 comments:

Gita Jaishankar said...

Different and interesting rice recipe dear.. looks very tasty :)

Kalpana Sareesh said...

perfect lunch box rice. dish looks spicy too

Shama Nagarajan said...

super preparation dear

Priya Suresh said...

Nellore masala rice looks delicious and very quick to prepare.

Shanthi said...

flavorful recipe..lunch box recipe..

Asiya Omar said...

Simply super.

Related Posts Plugin for WordPress, Blogger...