பாதாம் மசாலா பால் மிக்ஸ் - Badam Masala Pal Powder Recipe /Almond Milk Powder Drink - Kids Healthy Drink - Friendship 5 Series


print this page PRINT

எளிதில் செய்ய கூடிய பொடி. இதில் அனைத்து சத்துகளும் இருப்பதால் கடையில் வாங்குவதற்கு பதிலாக வீட்டிலேயே செய்து கொடுப்பது மிகவும் நல்லது.

அவரவர் விருப்பதிற்கு ஏற்றாற் போல பருப்பினை சேர்த்து கொள்ளலாம். சிலர் பாலில் கலர் வர சிறிது Food Color பொடி சேர்ப்பாங்க...நல்ல Brand குங்குமபூ என்றால் எந்த கலரும் சேர்க்க தேவையில்லை. இல்ல என்றால் விரும்பினால் சிறிது மஞ்சள் தூள் கூட சேர்த்து கொள்ளலாம்.

சக்கரையினை கடைசியில் தான் சேர்த்து அரைக்க வேண்டும். இதனை 1 கப் பாலுக்கு 1 மேஜை கரண்டி இந்த பொடியினை கலந்து Drinkஆக அனைவரும் குடிக்கலாம். ரொம்ப நல்லா இருக்கும். அவரவர் விருப்பதிற்கு ஏற்றாற் மாதிரி இதனை சூடான/குளிர்ந்த பாலில் கலந்து குடிக்கவும்.

இதனை சுண்ட காய்ச்சிய 1 கப் பாலுடன் 3 - 4 மேஜை கரண்டி இந்த பொடியினை சேர்த்து கலந்து Freezerயில் வைத்து குல்பி செய்தால் சூப்பர்ப் சுவையுடன் இருக்கும்.

நீங்களும் செய்து பார்த்துவிட்டு உங்கள் கருத்தினை தெரிவிக்கவும்...


பொடி செய்ய தேவைப்படும் நேரம் : 5  நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
  .  பாதாம் பருப்பு - 1 கப்
  .  முந்திரி - 1/4 கப்
  .  பிஸ்தா பருப்பு - 1/4 கப்
  .  ஏலக்காய் -2
  .  சக்கரை - 1/2 கப்
  .  குங்குமபூ -சிறிதளவு

செய்முறை:
.  பாதாம் பருப்பு + முந்திரி + பிஸ்தா பருப்பினை Panயில் போட்டு 1 - 2 நிமிடங்கள் Roast செய்து கொள்ளவும். (குறிப்பு : ரொம்பவும் வறுக்க தேவையில்லை. )


.  வறுத்த பொருட்களை + ஏலக்காய் சேர்த்து மிக்ஸியில் போட்டு நன்றாக 90% பொடித்து கொள்ளவும். (ரொம்பவும் கொரகொரப்பாகவோ அல்லது Fine Powderஆகவோ பொடிக்க தேவையில்லை. )

(கவனிக்க : சிறிய குழந்தைகளுக்கு கொடுப்பதால் இருந்தால் பொடித்த கலவையினை சலித்து கொண்டால் அவர்களுக்கு குடிக்க ஈஸியாக இருக்கும். தொண்டையிலும் எதுவும் மாட்டாது)


.  அனைத்தும் நன்றாக பொடியாகிய பிறகு அதில் சக்கரை + குங்குமபூ சேர்த்து மேலும் சிறிது அரைத்து கொள்ளவும்.


.  இப்பொழுது பொடி ரெடி. பாலினை சூடு செய்தோ அல்லது குளிர்ந்த பாலில் இந்த பொடியினை கலந்து குடிக்கலாம்.


Linking this Post to ”Friendship 5 Series" Started by me & Savitha..

7 comments:

Jayanthy Kumaran said...

sounds soooper healthy n delicious geetha..:)
Tasty Appetite

nandoos Kitchen said...

very healthy drink. I too make this for my kids and I can tell it is very tasty.

Veena Theagarajan said...

very handy powder for person like me who needs some flavour in the milk

Savitha Ganesan said...

Romba nalla irukku geetha.

Vimitha Anand said...

Very healthy powder for kids akka

Gita Jaishankar said...

Very healthy and delicious powder....lovely clicks :)

ASP said...

v can add ghee to this and make delicious, healthy ladoos too!

Related Posts Plugin for WordPress, Blogger...