பிரியாணி மசாலா தூள் - Homemade Biryani Masala Powder Recipe - Friendship 5 Seriesprint this page PRINT

இந்த பொடியினை பிரியாணி, க்ரேவி அல்லது வறுவல் செய்யும் பொழுது சேர்த்து கொள்ளலாம். 

இதிலேயே தனியா, மிளகாய் தூள் எல்லாம் சேர்ப்பதால் காரத்தினை பார்த்து சேர்க்கவும்.

இந்த பொடியினை அரைத்து சலித்து கொள்ளவும். நீங்களும் செய்து பார்த்து உங்கள் கருத்தினை தெரிவிக்கவும்...


பொடி செய்ய தேவைப்படும் நேரம் : 10 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
  .  தனியா - 1 கப்
  .  காய்ந்த மிளகாய் - 12 - 15
  .  மிளகு - 1/4 கப்
  .  சோம்பு - 1/4 கப்
  .  சீரகம் - 2 மேஜை கரண்டி
  .  ஏலக்காய் - 2 மேஜை கரண்டி
  .  கிராம்பு - 2 மேஜை கரண்டி
  .  பட்டை - 2 பெரிய துண்டு
  .  பிரியாணி இலை - 4 - 5
  .  வெந்தயம் - 1 தே.கரண்டி

செய்முறை :
  .  அனைத்து பொருட்களையும் கடாயில் போட்டு 1 - 2 நிமிடங்கள் வறுத்து கொள்ளவும்.


  .  வறுத்த பொருட்களை சிறிது நேரம் ஆறவைத்து அதனை மிக்ஸியில் போட்டு மைய அரைத்து கொள்ளவும்.
(குறிப்பு : இந்த பொடியினை விரும்பினால் சலித்து கொள்ளவும். நான் சலித்து கொள்ளவில்லை.)


  .  இப்பொழுது மசாலா பொடி ரெடி. இதனை பிரியாணி, க்ரேவி அல்லது வறுவல் செய்யும் பொழுது சிறிது சேர்த்தால் கூடுதல் சுவையுடன் இருக்கும்.


Linking this Post to ”Friendship 5 Series" Started by me & Savitha..


4 comments:

Shama Nagarajan said...

yummy yummy

Farin Ahmed said...

Beautiful Biryani Masala Powder Dear... My mum too makes the same

திண்டுக்கல் தனபாலன் said...

நன்றி நன்றி...

Saratha said...

நல்ல பயனுள்ள குறிப்பு.

Related Posts Plugin for WordPress, Blogger...