MTR ஸ்டைல் இட்லி மிளகாய் பொடி - MTR Style Idli Milagai Podi Recipe / Idly Podi - Side dish for Idli /Dosai - Friendship 5 Series - Homemade Powders


print this page PRINT

இந்த பொடியின் ஸ்பெஷலே பொடி செய்யும் பொழுது Citric Acid (Lemon Salt) மற்றும் கடுகு சேர்த்து கடைசியில் அரைக்க வேண்டும். 

Citric Acid மற்றும் கடுகியினை பயன்படுத்தினால் தான் அந்த சுவை கிடைக்கும். இல்லை என்றால் அனைவரும் செய்யும் பொடி மாதிரி தான் இருக்கும்.

Citric Acid பயன்படுத்தாமல் ஒரு சிறிய துண்டு புளியினை கூட வறுத்து கொண்டு அனைத்து பொருட்களுடன் சேர்த்து அரைத்து கொள்ளலாம். (கவனிக்க : கண்டிப்பாக Tamarind Pasteயினை பயன்படுத்த வேண்டாம். புளி பயன்படுத்தவும். )..நன்றி முல்லை...


பொடி செய்ய தேவைப்படும் நேரம் : 5 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
. உளுத்தம்பருப்பு - 3/4 கப்
காய்ந்த மிளகாய் (நீளமானது) - 12 - 15
Citric Acid / Lemon Salt - 1 சிட்டிகை அளவு
கடுகு - 1/2 தே.கரண்டி
பெருங்காயம் - 1/2 தே.கரண்டி
கருவேப்பில்லை - 10 இலை
உப்பு - 1/2 தே.கரண்டி
எண்ணெய் - 2 தே.கரண்டி

செய்முறை :
கடாயில் 1 தே.கரண்டி எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு பொரிக்கவிட்டு தனியாக எடுத்து கொள்ளவும்.

அதே கடாயில் காய்ந்த மிளகாய் + கருவேப்பில்லை சேர்த்து வறுத்து தனியாக வைக்கவும்.


.  மீதம் உள்ள எண்ணெய் ஊற்றி உளுத்தம்பருப்பினை சேர்த்து நன்றாக 1 - 2 நிமிடங்கள் வறுத்து கொண்டு ,அனைத்து பொருட்களையும் சிறிது நேரம் ஆறவைத்து கொள்ளவும்.


.  உளுத்தம்பருப்பு + காயந்த மிளகாய் + கருவேப்பில்லை + பெருங்காயம் + உப்பு சேர்த்து நன்றாக பொடித்து கொள்ளவும்.

.  கடைசியில் கடுகு + Citric Acid யினை சேர்த்து Pulse Modeயில் 2 முறை அடித்து கொள்ளவும். 


.  பறிமாறும் பொழுது இத்துடன் நல்லெண்ணெய் சேர்த்து கலந்து கொள்ளவும். சூடான இட்லி, தோசையுடன் சாப்பிட நன்றாக இருக்கும்.


Linking this Post to ”Friendship 5 Series" Started by me & Savitha..



6 comments:

Savitha Ganesan said...

Romba super a irukku Geetha. Try panren.

Veena Theagarajan said...

looks yum! very flavourful

Priya Suresh said...

Super idli podi..

Gita Jaishankar said...

Super podi recipe dear, looks very good :)

Gayathri Sathyanarayanan said...

yummy and flavourful podi. we often have it with paniyaram and uthapam.

Anonymous said...

very easy

Related Posts Plugin for WordPress, Blogger...