சாக்கோலேட் மில்க் சிரப் - Homemade Chocolate Milk Syrup Recipe - Friendship 5 series


print this page PRINT

எளிதில் வீட்டில் செய்ய கூடிய Chocolate Milk ... இதற்கு தேவையான syrupயினை வீட்டிலேயே செய்து வைத்து கொண்டால் நொடியில் சாக்கோலேட் மில்க் செய்துவிடலாம்.

நல்ல Brand Cocoa Powder பயன்படுத்தினால் கூடுதல் சுவையுடன் இருக்கும். கோக்கோ பவுடர் அதிகம் சேர்த்தால் மிகவும் Dark Colorஆக இருக்கும். 

அவரவர் விருப்பதிற்கு ஏற்றா போல சூடான பால் அல்லது குளிர்ந்த பாலுடன் சேர்த்து கலந்து குடிக்கலாம்.

இந்த சிரப்  2 தே.கரண்டியினை 1 கப் பாலுடன் சேர்த்து கலந்து குடிக்கவும். நீங்களும் செய்து பார்த்துவிட்டு உங்கள் கருத்தினை தெரிவிக்கவும்...

Chocolate syrup செய்ய தேவைப்படும் நேரம் : 5 - 8 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
  .  Cocoa Powder - 1 கப்
  .  சக்கரை - 1 & 1/2 கப்
  .  தண்ணீர் - 1 கப்
  .  உப்பு - 1/4 தே.கரண்டி அளவு
  .  Vanilla Essence - 1 தே.கரண்டி

  .  பால் - Chocolate Milk செய்ய

செய்முறை :
  .  பாத்திரத்தில் கோக்கோ பவுடர் + சக்கரை + உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.

  .  இத்துடன் தண்ணீர் சேர்த்து நன்றாக கலந்து அடுப்பில் வைத்து 3 - 4 நிமிடங்கள்  கட்டி இல்லாமல் அடிக்கடி கிளறவும்.


  .  கடைசியில் Vanilla essence சேர்த்து கலந்து,  பாத்திரத்தினை அடுப்பில் இருந்து எடுத்து ஆறவிடவும். இப்பொழுது Chocolate syrup ரெடி. 


(கவனிக்க : இதனை அப்படியே Room Temperatureயில் 1 - 2 வாரம் வரை வைத்து கொள்ளலாம். விரும்பினால் Fridgeயில் வைத்து கொள்ளவும்.)

  .  2 தே. கரண்டி சிரப் + 1 கப் பால் சேர்த்து கலந்து கொண்டால் சுவையான ஹெல்தியான Chocolate Milk ரெடி.  Linking this post to "Friendship 5 series" started by me & Savitha...3 comments:

Savitha Ganesan said...

Geetha, romba nalla irukku drink, Naanum ippadi dhan senjen.

nandoos Kitchen said...

a very useful post. thanks for sharing

Priya Suresh said...

Very attractive syrup, homemade is the best.

Related Posts Plugin for WordPress, Blogger...