முருங்கைகீரை ராகி அடை - Murungai Keerai Ragi Adai Recipe - Kezhvaragu Kara Adai - Gramathu Unavu


எங்க வீட்டில் முருங்கை மரம் இருந்ததால், அம்மா அடிக்கடி செய்யும் Evening Snacks listயில் இந்த அடையும் இருக்கும். எங்களுக்கு மிகவும் பிடித்த அடை. 

அம்மா பொறுமையாக இரண்டு தோசை கல் வைத்து மிதமான தீயில் அடையினை சுட்டு கொடுப்பாங்க...  ஒரு அடை சாப்பிட்டு முடிந்த பிறகும் காத்து இருந்து இன்னொரு அடை சாப்பிடுவோம்...ரொம்ப சூப்பரான சத்தான உணவு..

முருங்கைகீரைக்கு பதில் Collard Greens சேர்த்து செய்து பாருங்க...அதுவும் இதே மாதிரி சுவையுடன் இருக்கும். 

நீங்களும் செய்து பார்த்துவிட்டு உங்கள் கருத்தினை தெரிவிக்கவும்..

print this page PRINT
சமைக்க தேவைப்படும் நேரம் : 15 - 20 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
  .  ராகி / கேழ்வரகு மாவு - 2 கப்
  .  உப்பு - தேவையான அளவு
  .  எண்ணெய் - சிறிதளவு

தாளித்து சேர்க்க:
  .  முருங்கைகீரை இலை - 1 கப்  (சுத்தம் செய்தது)
  .  வெங்காயம் - 1
  .  பச்சைமிளகாய் - 2 - 4 (காரத்திற்கு ஏற்ப)
  .  கருவேப்பிலை - விரும்பினால் - 5 இலை

செய்முறை :
.  வெங்காயம் + பச்சை மிளகாயினை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

.  கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயம் + பச்சைமிளகாய் + கருவேப்பிலை சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கவும்.

.  இத்துடன் முருங்கைகீரை இலையினை சேர்த்து 1 நிமிடம் வதக்கி கொள்ளவும்.


.  ராகி மாவுடன் வதக்கிய பொருட்கள் + தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.


.  வதக்கிய பொருட்கள் ராகி மாவுடன் நன்றாக கலந்த பிறகு, அத்துடன்  சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து மாவினை உருண்டையாக வரும் வரை உருட்டு கொள்ளவும்.

.  மாவினை சிறிய சிறிய உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.  Paper Towel / Ziploc cover யினை ஒரு உருண்டையினை எடுத்து வைத்து அடையினை தட்டி கொள்ளவும். 


(கவனிக்க : மாவு மிகவும் கெட்டியாக இருந்தால் அடை தட்டும் பொழுது வீரல் விடும் Shapeயும் ஒழுங்காக வராது. அதே மாதிரி தண்ணீர் அதிகம் சேர்த்து விட்டால் அடையினை தட்ட வராது. அதனால் மாவில் சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து பிசைந்து கொள்ளவும்.) 

.  தோசை கல்லினை காய வைத்து கொள்ளவும். தட்டி வைத்து இருக்கும் அடையினை கல்லில் போட்டு அத்துடன் சிறிது எண்ணெய் ஊற்றி மிதமான தீயில் சுமார் 2 - 3 நிமிடங்கள் வேகவிடவும்.


.  ஒரு பக்கம் நன்றாக வெந்த பிறகு அடையினை திருப்பி போட்டு (விரும்பினால் மேலும் சிறிது எண்ணெய் ஊற்றி ) 2 நிமிடங்கள் வேகவிடவும்.

.  சுவையான சத்தான முருங்கைகீரை அடை ரெடி. 


Linking this post to "Friendship 5 series" started by Geetha Achal & Savitha...


3 comments:

Ree Kasirajh said...

Woow...I love this combo...will try soon!!!

சுபத்ரா said...

LOOKS YUMMY :p

Priya Suresh said...

Nutritious adai,love it.

Related Posts Plugin for WordPress, Blogger...