சிம்பிள் தம் பிரியாணி - Simple & Perfect Dum Biryani - Biryani Recipe


print this page PRINT

இந்த செய்முறை மிகவும் எளிதில் செய்ய கூடியது. இந்த செய்முறையினை என்னுடைய தோழி திருமதி. மஞ்சு சண்முகம் தான்  சொல்லி கொடுத்தாங்க...

அவங்க சொன்ன மாதிரி நிறைய முறை செய்து இருக்கின்றேன். ஒவ்வொரு முறையும் சாதம் Perfect ஆக வெந்து பிரியாணி ரொம்ப சூப்பராக இருக்கும்.. (இந்த முறையில் செய்யும் பொழுது சாதம் அடிபிடித்து விடுமோ அல்லது தண்ணீர் அதிகம் / குறைவாக இருக்குமோ என்ற பயம் இருக்காது.)

கண்டிப்பாக அனைவரும் அவரவர் விருப்படி பிரியாணி மசாலாவினை செய்து  இந்த முறையில் சாதத்தினை பிரியாணி மசாலாவுடன் சேர்த்து வேகவைத்து  செய்து பாருங்க... நன்றாக வரும்.

பொதுவாக நாம் எப்பொழுதும் பிரியாணிக்கு அரிசியினை குறைந்தது 10 - 20 நிமிடங்கள் ஊறவைப்போம். ஆனால் இந்த மாதிரி சமைக்கும் பொழுது Correct 1 மணி நேரம் ஊறவைக்க ( 60 Minutes) வேண்டும்.

அதே மாதிரி இந்த  பிரியாணிக்கு தண்ணீர் வைக்கும் பொழுதும் 1 கப் அரிசிக்கு 2 கப் தண்ணீர் ஊற்ற வேண்டும். (கவனிக்க : தண்ணீரின் அளவினை குறைக்க தேவையில்லை. )

இப்பொழுது அரிசியினை பிரியாணிக்கு சேர்க்கும் விதத்தில் தான் அந்த Technique இருக்கின்றது. ஊறவைத்த அரிசியினை பிரியாணி மசாலாவின் மீது பரவலாக சேர்க்க வேண்டும். 
(அதாவது வேகவைத்த சாதத்தினை தம் பிரியாணிக்கு செய்வது மாதிரி இந்த முறையில் நாம் வெரும் ஊறவைத்த அரிசியினை மசாலாவுடன் சேர்த்து கிளறாமல் மேலே பரவிவிட வேண்டும். )

இரண்டாவதாக கவனிக்க வேண்டியது, தண்ணீரினை பரவலாக பரவி இருக்கும் அரிசியின் மீது மெதுவாக ஊற்ற வேண்டும். (அதாவது தண்ணீர் ஊற்றும் பொழுது அரிசி மசாலாவுடன் கலந்துவிட கூடாது. )

தண்ணீர் ஊற்றிய பிறகு தட்டு போட்டு மூடி அதனை பிரியாணியினை மிதமான தீயில் தண்ணீர் குறைந்தது, சாதம் சுமார் 75 - 80% வேகும் வரை வைக்கும் . பிறகு தீயினை மிகவும் குறைந்த தீயில் வைத்து மேலும் 5 - 8  நிமிடங்கள் வேகவைத்து அடுப்பி நிறுத்திவிடவும் அப்படியே 5 நிமிடங்கள் விடவும்.

பிறகு தட்டினை திறந்து மெதுவாக அனைத்து சேர்ந்த மாதிரி ஒரே ஒரு முறை கிளறிவிட்டு தட்டு போட்டு 2 நிமிடங்கள் மூடிவிடவும். இப்பொழுது பிரியாணி சூப்பராக இருக்கும். 

நான் பிரியாணிக்கு பயன்படுத்தி இருப்பது Premium India Gate Basmati Rice. நீங்கள் எந்த Brand அரிசியினையும் பயன்படுத்தலாம். இதே மாதிரி அரிசி Perfectஆக வேகும்.

சரி...இப்பொழுது பிரியாணி செய்முறையினை பார்ப்போம்...நீங்களும் செய்து பார்த்துவிட்டு உங்கள் அன்பான கருத்தினை தெரிவிக்கவும்...


அரிசியினை ஊறவைக்க தேவைப்படும் நேரம் : 50 நிமிடங்கள் -  1 மணி நேரம்
சமைக்க தேவைப்படும் நேரம் :  40 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
  .  பாஸ்மதி அரிசி - 3 கப்
  .  சிக்கன் - 1/2 கிலோ
  .  இஞ்சி பூண்டு விழுது - 2 மேஜை கரண்டி
  .  தயிர் - 1/2 கப்
  .  எலுமிச்சை சாறு - பாதி பழம்

நறுக்கி கொள்ள :
  .  வெங்காயம் - 2 பெரியது
  .  பச்சைமிளகாய் - 3
  .  புதினா, கொத்தமல்லி - 2 கைபிடி அளவு 

சேர்க்க வேண்டிய தூள் வகைகள் :
  .  மஞ்சள் தூள் - 1/2 தே.கரண்டி 
  .  மிளகாய் தூள் - 2 தே.கரண்டி
  .  உப்பு - தேவையான அளவு 

முதலில் தாளிக்க :
  .  எண்ணெய் + நெய் - 2 மேஜை கரண்டி 
  .  பட்டை- 1 , கிராம்பு - 2, பிரியாணி இலை - 1
  .  பிரியாணி மசாலா/ கரம்மசாலா - 1/2 தே.கரண்டி

செய்முறை :
  .  அரிசியினை 1 மணி நேரம் ஊறவைத்து கொள்ளவும். வெங்காயத்தினை நீளமாக வெட்டிவைக்கவும். பச்சைமிளகாயினை இரண்டாக கீறிகொள்ளவும். புதினா, கொத்தமல்லியினை பொடியாக நறுக்கவும்.

  .  சிக்கனை சுத்தம் செய்து கொள்ளவும். சிக்கனுடன் தயிர் + மஞ்சள் தூள் + மிளகாய் தூள் + உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும். 

  .  பாத்திரத்தில் எண்ணெய் + நெய் ஊற்றி தாளிக்க கொடுத்துள்ள பொருட்கள் + பிரியாணி மசாலா சேர்த்து தாளித்து கொள்ளவும்.


  .  பிறகு வெங்காயம் சேர்த்து வதக்கி கொள்ளவும்.

  .  வெங்காயம் சிறிது வதங்கியதும் இத்துடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்றாக வதக்கவும். 


  .  இத்துடன் கலந்து வைத்து இருக்கும் சிக்கன் கலவையினை சேர்த்து சிக்கனை வேகவிடவும். 

  .  சிக்கன் 90% வெந்த பிறகு அரிசியினை தண்ணீர் இல்லாமல் அதன் மீது பரவலாக பரவி விடவும். (கவனிக்க : அரிசியினை சேர்பதற்கு முன்பாக பிரியாணிக்கு தேவையான அளவு உப்பு இருக்கின்றது என்பதினை கண்டிப்பாக சரி பார்த்து கொள்ளவும். )


  .  1 கப் அரிசிக்கு 2 கப் தண்ணீர் என்ற அளவில் அரிசியின் மீது தண்ணீர் மசாலாவுடன் கலக்காத மாதிரி ஊற்றிவிடவும். அத்துடன் எலுமிச்சை சாறு + புதினா , கொத்தமல்லியினை மேலே தூவிவிடவும்.


  .  இதனை மிதமான தீயில் தட்டு போட்டு மூடி பிரியாணியில் தண்ணீர் 80 %- 90%  வற்றும் வரை வேகவிடவும். இப்பொழுது சாதமும் சுமார் 75-80% வெந்து இருக்கும்.

  .  பிறகு  மிகவும் குறைந்த தீயில் அடுப்பினை வைத்து மேலும் 5 - 8 நிமிடங்கள் வைத்து அடுப்பினை நிறுத்தி அப்படியே 5 நிமிடங்கள் வைக்கவும். 


  .  அதன் பின்னர் தட்டினை திறந்து அதனை ஒரு முறை மெதுவாக  கிளறிவிடவும். 

சுவையான பிரியாணி ரெடி. இதனை தயிர் பச்சடி, முட்டை, ப்ரை போன்றவையுடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.


கவனிக்க :
இதனை எந்த பாத்திரத்திலும் அதற்கு ஏற்ற தட்டு போட்டு மூடிசெய்யலாம்.  

இதில் எலுமிச்சை சாறுக்கு பதிலாக Amchoor powder சேர்த்தால் கூடுதல் சுவையாக இருக்கும்.

இதில் நான் தக்காளி சேர்க்கவில்லை...ஆனால் விரும்பினால் இஞ்சி பூண்டு விழுது வதங்கியதும் தக்காளியினை சேர்த்து வதக்கவும்...

6 comments:

ரூபன் said...

வணக்கம்

மிக அருமையான செய்முறை விளக்கம் நாங்களும் செய்து பார்க்கிறோம்... பகிர்வுக்கு நன்றி

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Gita Jaishankar said...

Love this biryani preparation dear....kalkureenga :)

Kurinji said...

delicious and yummy biriyni...

nandoos Kitchen said...

super! yummy, mouthwatering biryani..

Anonymous said...

Itz coming perfect! Atlast i can also make briyani thanks to ur simple method!

Pratheepa Parthasarathy said...

Looks so perfect. Will try it today itself
Thanks for your effort in explaining it so clearly

Related Posts Plugin for WordPress, Blogger...