பன்னீர் புலாவ் - Paneer Pulao Recipe for Kids / Rice varieties


எளிதில் செய்ய கூடிய சத்தான புலாவ்... இதே மாதிரி பன்னீருக்கு பதிலாக Tofu சேர்த்து செய்யலாம்.

இதில் காரத்திற்கு பச்சைமிளகாய் மட்டுமே சேர்த்து இருக்கின்றேன். குழந்தைகளுக்காக Mild ஆக செய்தது... அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப காரம் சேர்த்து கொள்ளவும்.

நீங்களூம் செய்து பார்த்துவிட்டு உங்கள் கருத்தினை தெரிவிக்கவும்....

print this page PRINT
சமைக்க தேவைப்படும் நேரம் : 15 - 20 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
  .  பன்னீர் - 10 - 15 சிறிய துண்டுகள்
  .  பாஸ்மதி அரிசி - 1 கப்
  .  வெங்காயம் - 1
  .  பச்சைமிளகாய் - 2 - 3 (காரத்திற்கு ஏற்ப)
  .  இஞ்சி பூண்டு விழுது - 1 தே.கரண்டி
  .  புதினா, கொத்தமல்லி - சிறிதளவு
  .  தேங்காய் பால் - 1/2 கப்
  .  உப்பு - தேவையான அளவு
  .  எண்ணெய் + நெய் - 1 மேஜை கரண்டி
  .  சோம்பு - 1/4 தே.கரண்டி (முதலில் தாளிக்க)

குறிப்பு : இதில் நான் சோம்பு மட்டும் சேர்த்து தாளித்து இருக்கின்றேன்...அவரவர் விருப்பம் போல பட்டை, கிராம்பு, பிரியாணி இலை சேர்த்து தாளித்து கொள்ளலாம்.

செய்முறை :
  .  வெங்காயத்தினை நீளமாக மெல்லியதாக வெட்டி கொள்ளவும். புதினா + கொத்தமல்லியினை பொடியாக நறுக்கவும். பச்சைமிளகாயினை இரண்டாக கீறி கொள்ளவும். அரிசியினை தண்ணீரில் கழுவி அதனை 5 - 10 நிமிடங்கள் ஊறவைத்து கொள்ளவும்.

  .  பிரஸர் குக்கரில் எண்ணெய் + நெய் ஊற்றி சோம்பு தாளித்து அத்துடன் வெங்காயம் சேர்த்து வதக்கி கொள்ளவும்.


  .  வெங்காயம் சிறிது வதங்கிய பிறகு இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கவும்.

  .  பிறகு இத்துடன் நறுக்கி வைத்துள்ள புதினா + கொத்தமல்லி + பச்சை மிளகாய் சேர்த்து 1 நிமிடம் வதக்கவும்.

  .  இத்துடன் பன்னீர் துண்டுகள் சேர்க்கவும்.

  .  இதில் ஊறவைத்த அரிசி + 1/2 கப் தேங்காய் பால் + 1 & 1/2 கப் தண்ணீர் + தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும். பிரஸர் குக்கரினை மூடி மிதமான தீயில் 1 விசில் வரும் வரை வேகவிடவும். (கவனிக்க : தேங்காய் பாலினை அதிகம் சேர்க்க தேவையில்லை. )


  .  குக்கரில் பிரஸர்  அடங்கியதும் அதனை திறந்து லேசாக கிளறி விடவும்.


  .  சுவையான சத்தான புலாவ் ரெடி. இதனை எதாவது ராய்தா, ப்ரை அல்லது சிப்ஸுடன் சேர்த்து சாப்பிட சுவையான இருக்கும்.5 comments:

Veena Theagarajan said...

rich and tasty rice

Ree Kasirajh said...

Love paneer and this combo looks very yum!!!

Priya Suresh said...

delicious one pot meal, can have it happily anytime.

Gita Jaishankar said...

Nice pulav preparation, looks very tasty :)

Priyas Feast said...

Kids will like it.we usually make it plain...

Related Posts Plugin for WordPress, Blogger...