கண்டன்ஸ்டு மில்க் - Homemade Condensed Milk using Milk - DIY Condensed Milk


print this page PRINT

இது வீட்டிலேயே எளிதில் செய்ய கூடியது.  இதற்கு Non-stick பாத்திரம் பயன்படுத்தினால் எளிதாக இருக்கும் அதிகம் கிளற தேவையில்லை.

இதற்கு, கண்டிப்பாக இதில் whole milkயினை பயன்படுத்தவும். 

இதே மாதிரி பால் பயன்படுத்தாமல், Milk Powder சேர்த்து செய்யலாம்.

பால் பவுடர் பயன்படுத்தும் பொழுது , 1 கப் பால் பவுடரினை 1 கப் சுடான தண்ணீருடன் சேர்த்து கலந்து கொள்ளவும். அத்துடன் 1/2 கப் பொடித்த சக்கரை + வெண்ணெய் சேர்த்து 2 - 3 நிமிடங்கள் கொதிக்கவிடவும். எளிதில் இந்த முறையில் செய்து விடலாம். ஆனால் இதில் சுவையில் சிறிது வித்தியசம் இருக்கும்.

நீங்களும் செய்து பார்த்துவிட்டும் உங்கள் கருத்தினை தெரிவிக்கவும்...

Condensed Milk செய்ய தேவைப்படும் நேரம் : 20 - 30 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
பால் ( Whole Milk) - 2 கப்
பொடித்த சக்கரை - 1/2 கப்
வெண்ணெய் - 4 மேஜை கரண்டி


செய்முறை :

பாலினை அடிகணமான பாத்திரத்தில் போட்டு மிதமான தீயில் வைக்கவும். வெண்ணெய் + சக்கரை எடுத்து வைத்து கொள்ளவும்.


பால் நன்றாக காய்ந்து சுமார் 15 நிமிடங்கள் வைக்கவும். (கவனிக்க : பாலினை 3/4 பங்கு வரும் வரை காயவிடவும். அதே மாதிரி ஏடு சேராத மாறு பார்த்து கொள்ளவும்.)


இத்துடன் பொடித்த சக்கரை + வெண்ணெய் சேர்த்து மேலும் 10 - 15 நிமிடங்கள் குறைந்த தீயில் அடிக்கடி கிளறி கொதிக்கவிடவும். 


இப்பொழுது சுவையான கண்டன்ஸ்டு மில்க் ரெடி. இதனை இனிப்பு வகைகள் செய்யும் பொழுது சேர்த்தால் சுவையாக இருக்கும்.Linking this post to "Friendship 5 series" started by Geetha Achal & Savitha...4 comments:

Kalpana Sareesh said...

sooper recipe..

Priya Suresh said...

Super, romba nalla irruku condensed milk.

Veena Theagarajan said...

wow! homemade condensed milk.. looks so perfect..Thanks for sharing

Savitha Ganesan said...

Geetha, romba interesting recipe. Super .

Related Posts Plugin for WordPress, Blogger...