How to carve Halloween Pumpkin....


இந்த Halloween Pumpkinயினை அக்‌ஷ்தா தான் செய்தாள். நான் அவளூக்கு சொல்லி கொடுத்தேன். அழகாக செய்தாள்...

நீங்களும் இதே மாதிரி குழந்தைகளுடன் செய்ய கூடிய Halloween Pumpkin...

print this page PRINT

Halloween Pumpkin செய்ய தேவைப்படும் நேரம் : 30 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
   .  Pumpkin - 1
   .  Color Pen , Paper
   .  Screw Driver / கோணி ஊசி


Preparation :
.  முதலில் பூசிணிக்காயினை கழுவி சுத்தம் செய்து கொள்ளவும். விரும்பிய Designயினை பேப்பரில் வரைந்து கொள்ளவும்.


.  அதனை பூசிணிக்காயில் pen வைத்து Trace செய்யவும். Pen / அழுத்தமான பொருள் வைத்து trace செய்வதால் அதன் அச்சு தெளிவாக இருக்கும். பிறகு அதனை Color pen வைத்து வரைந்து கொண்டாள் .

 (அப்படியே pumpkinயில் விரும்பினால் வரையலாம். அக்‌ஷதா என்னை முதலில் பேப்பரில் வரைந்து கொடுக்க சொன்னா. அப்பறம் அவள் அதனை trace செய்து கொண்டாள்.)


.  பிறகு பூசணிக்காயின் மேல் பகுதியினை வெட்டி கொள்ளவும். (அதிகம் வெட்ட வேண்டாம்.படத்தில் இருப்பது போல சிறிது வெட்டி எடுத்தால் போதும். )

.  இப்பொழுது மேல் பகுதியினை நீக்கிய பிறகு பூசணீக்காயின் உள்ளே இருக்கும் விதைகள் + நார்யினை எடுத்துவிட வேண்டும்.

.  முதலில் அக்‌ஷ்தா spoon வைத்து எடுக்க பார்த்தாள். அது நிறைய நேரம் ஆனதால் கையினை வைத்தே எல்லாவற்றினையும் எடுத்துவிட்டாள். 


.  கடைசியில் அதனுடைய உள் பகுதியினை spoon வைத்து அழகாக அனைத்தும் சுத்தமாக வடித்து எடுக்கவும். 

.  இப்பொழுது உள் பகுதி சுத்தமாக இருக்கும்.


.  பிறகு trace செய்து வைத்து இருக்கும் படத்தில், கோணீ ஊசி அல்லது மெல்லியதான Screw Driverயினை வைத்து வரைந்த படத்தில் trace செய்வது மாதிரி ஒட்டைகள் போடவும்.

.  இதே மாதிரி அனைத்து ஒட்டைகள் போட்டு வைக்கவும்.


.  இப்பொழுது வேலை மிகவும் ஈஸியாக இருக்கும். ஒரு கத்தியினை எடுத்து ஒட்டை போட்ட இடத்தில் வெட்டிவிடவும். (இந்த Stepயினை நான் செய்தேன். ஏற்கனவே ஒட்டை போட்டு இருப்பதால் வெட்டுவது மிகவும் சுலபம். )

கவனிக்க : ஒட்டை போடாமல் கத்தியினை வைத்து வெட்டுவதற்கு கொஞ்சம் Practice தேவை. குழந்தைகள் இது மாதிரி ஒட்டை போட்ட பிறகு செய்வது நல்லது. 

.  பின்னர் கத்தியினை வைத்து வெட்டி வைத்து கொள்ளவும். இப்பொழுது வெட்டிய இடத்தில் மெதுவாக விரலினால் அழுத்தினால் அந்த துண்டுகள் அழகாக வெளியே வந்துவிடும்.


.  இப்பொழுது Halloween Pumpkin ரெடி. இதன் உள்ளே Battery பொருந்திய Lightயினை வைத்தால் மிகவும் சூப்பராக அழகாக இருக்கும்.




5 comments:

தினேஷ்குமார் said...

வாழ்த்துகள் மென்மேலும் வளரட்டும்

Sangeetha Nambi said...

Super post ! Thanks for ur idea !

GEETHA ACHAL said...

thanks

Saratha said...

very nice post !

Jaleela Kamal said...

ரொம்ப நல்ல இருக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...