முட்டையில்லாத டூட்டி ப்ரூட்டி கேக் - Eggless Tutti Frutti Cake Recipe / Eggless Vanilla Cake - Christmas Cake Recipe


print this page PRINT
எளிதில் செய்ய கூடிய Eggless Tutti Frutti Cake இது. 

நீங்களும் செய்து பார்த்துவிட்டு உங்கள் கருத்தினை தெரிவிக்கவும். நன்றி சோபனா...

சமைக்க தேவைப்படும் நேரம்: 30 - 40 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
   .  மைதா மாவு -  1 +  1/2 கப்
   .  சக்கரை - 1 கப்
   .  எண்ணெய் - 1/2 கப்
   .  Vanilla Essence - 2 தே.கரண்டி

   .  தயிர் - 1 கப்
   .  பேக்கிங் பவுடர் - 1 1/4 தே.கரண்டி
   .  பேக்கிங் சோடா - 1/2 தே.கரண்டி

   .  மைதா மாவு - 2 மேஜை கரண்டி


செய்முறை :
   .  பெரிய பவுலில் தயிர் + Baking Powder + Baking Sodaயினை கரண்டியினை வைத்து நன்றாக 1 - 2 நிமிடங்கள் கலந்து கொள்ளவும். இதனை அப்படியே 2 - 3 நிமிடங்கள் வைக்கவும்.


    .  Tutti Fruttiயினை 2 மேஜை கரண்டியினை மைதா மாவில் நன்றாக கலந்து கொள்ளவும்.


   .  கலந்து வைத்துள்ள தயிர் கலவையுடன் சக்கரை சேர்த்து கலந்து கொள்ளவும்.

   .  சக்கரை சேர்த்த பிறகு எண்ணெய் + Vanilla Essence சேர்த்த கலக்கவும்.


   .  அதன்பின், மைதா மாவினை சேர்த்து கலக்கவும்.


   .  கடைசியில் மைதா மாவில் கலந்தவைத்துள்ள Tutti Fruttiயினையும் சேர்த்து கொள்ளவும்.


   .  8” கேக் Panயில் எண்ணெய் தடவி அதன் மீது Parchment Paperயினை வைக்கவும். அவனை 350 Fயினை முற்சூடு செய்து கொள்ளவும்.

   .  பேங்கிங் Panயில் கலந்து வைத்துள்ள மாவினை ஊற்றி சமப்படுத்திய பிறகு, Panயினை 2 - 3 தடவை தட்டி கொள்ளவும். இதனால் Air Bubbles எல்லாம் நீங்கிவிடும்.

   .  மூற்சூடு செய்த அவனில் 30 - 35 நிமிடங்கள்  350 Fயில் Bake Modeயில் வேகவிடவும். (கவனிக்க ; அவரவர் அவனின் திறம் பொருத்து நேரம் அதிகம் / குறைவாகவோ ஆகலாம். )


   .  கேக் வெந்து உள்ளதா என்று பார்க்க ஒரு Toothpickயினை கேக் உள்ளே விட்டு எடுத்தால் எதுவும் ஒட்டாமல் வர வேண்டும். இல்லை என்றால் மேலும்  சிறிது நேரம் வேகவிடவும்.

   .  கேக் வெந்த பிறகு அதனை வெளியில் எடுத்து சிறிது நேரம் கண்டிப்பாக ஆறவிடவும். அப்படி ஆறினால் கேக் வெட்டும் பொழுது நன்றாக வரும்.

   .  விரும்பிய வடிவத்தில் கேக்கினை வெட்டி பறிமாறவும்.


குறிப்பு :
அவரவர் விருப்பதிற்கு ஏற்ப Fruits & Nutsயினை சேர்த்து கொள்ளவும். இதே அளவில் Fruits & Nuts இல்லாமலும் கேக் செய்யலாம்.

இதில் விரும்பினால் தயிருக்கு பதிலாக 1 முட்டையினை சேர்த்து கொள்ளவும். 

அதே மாதிரி முட்டை சேர்க்கும் பொழுது பேக்கிங் சோடா சேர்க்க தேவையில்லை.

முட்டையில்லாமல் கேக் செய்யும் பொழுது கேக் கொஞ்சம் Dense ஆக தான் இருக்கும். 

4 comments:

Sangeetha Nambi said...

Love this all time

Anitha Sundramoorthy said...

Delicious cake...

ADHI VENKAT said...

பார்க்கவே கலர்ஃபுல்லான கேக்காக இருக்கு. பகிர்வுக்கு நன்றி.

sangeethas creations said...

ஆகா ... பார்க்கவே சூப்பர் ...

Related Posts Plugin for WordPress, Blogger...