ரஸ மலாய் - Instant Ras Malai Recipe using Milk Powder - Rice Cooker Recipe


எளிதில் செய்ய கூடிய ரஸமலாய் ரெஸிபி இது. இதனை பால் பவுடர் வைத்து Rice Cookerயில் செய்தேன். மிகவும் அருமையான Dessert.

நீங்களூம் செய்து பார்த்துவிட்டு உங்கள் அன்பான கருத்தினை தெரிவிக்கவும். Thanks Mano Aunty.

இதே மாதிரி Rice Cookerயில் பாயசம், ரப்டி, பாஸுந்தி போன்றவையினை செய்யலாம்...
print this page PRINT
சமைக்க தேவைப்படும் நேரம் : 20 - 30 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
  .  பால் - 3 கப்
  .  பாதம் பால் மிக்ஸ் / Badam Paal Mix - 3 மேஜை கரண்டி
  .  சக்கரை - 1/2 கப்
  .  குங்குமபூ - 2 சிட்டிகை

உருண்டைகள்  செய்ய :
  .  பால் பவுடர் - 1 கப்
  .  மைதா மாவு - 1 தே.கரண்டி
  .  பேக்கிங் பவுடர் - 1/2 தே.கரண்டி
  .  பால் - 2 மேஜை கரண்டி
  .  நெய் - 1 தே.கரண்டி

விரும்பினால் பால் சேர்ப்பதற்கு பதிலாக ஒரு முட்டையினை சேர்த்து கொள்ளவும். முட்டை சேர்த்தால் சூப்பராக இருக்கும். 


செய்முறை :
  .  ரைஸ் குக்கரில் பாலினை ஊற்றி Cook Modeயில் குக்கரினை மூடாமல், சுமார் 8 - 10 நிமிடங்கள் கொதிக்கவிடவும்.


  .  பால் கொதிக்கும் பொழுது அதில் சக்கரை + பாதம் பால் மிக்ஸ் + குங்குமபூ சேர்த்து அதனை நன்றாக கலந்து மேலும் 5 நிமிடங்கள் கொதிக்கவிடவும்.

  .  உருண்டைகள் செய்ய கொடுத்துள்ள பொருட்களில் , பால் பவுடர் + மைதா மாவு + பேக்கிங் பவுடரினை முதலில் கலந்து கொள்ளவும்.

  .  அத்துடன் பால் + நெய் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து 2 நிமிடங்கள் ஊறவைத்து கொள்ளவும்.

 (இதில் பாலிற்கு பதிலாக முட்டை தான் Original Recipeயில் சேர்ப்பாங்க...முட்டை சேர்த்தால் உருண்டைகள் வெந்த பிறகு Double Sizeயில் இருக்கும்.முட்டை சேர்க்காமல் செய்ததால் என்னுடைய உருண்டைகள் செய்ததைவிட கொஞ்சம் தான் பெரியதாக இருந்தது. )


  .  இதனை சிறிய சிறிய உருண்டைகளாக உருட்டி வைக்கவும். 

  .  கொதிக்கும் பாலினை அனைத்து உருண்டைகளையும் ஒரே சமயத்தில் சேர்க்கவும். 

(கவனிக்க ; இப்படி சேர்ப்பதால் அனைத்தும் ஒரே நேரத்தில் வேகும். இல்லை என்றால் ஒன்று அதிகம் வேகும் அல்லது குறைவாக வேகும். இதனால் நடுவில் சில ச்மயம் வேகாமல் இருக்க வாய்ப்பு இருக்கும். )


  .  உருண்டைகள் பாலில் போட்ட பிறகு 1 - 2 நிமிடங்கள் வெந்த மேலே வரும், அப்பொழுது விரும்பினால் மெதுவாக திருப்பிவிடவும். 

  .  இதனை அப்படியே 4 - 5 நிமிடங்கள் வேகவிட்டு ரைஸ் குக்கரினை தட்டு போட்டு மூடி நிறுத்துவிடவும். 


 .  ரஸமலாய் சூடு ஆறியதும் அதனை Fridgeயில் 1 - 2 மணி நேரம் வைத்துவிட்டு பறிமாறவும். சூப்பரான எளிதில் செய்ய கூடிய ரஸமலாய் ரெடி .

குறிப்பு :
உருண்டைகள் பாலில் போட்டு பிறகு அடிக்கடி கிளறிவிட வேண்டாம்.

உருண்டைகள் உடைந்துவிட்டால் அதனை ரப்டி மாதிரி சாப்பிடலாம். இல்லையெனில் அதனை அப்படியே மிக்ஸியில் போட்டு அடித்து Popsicle Boxயில் ஊற்றி Freezerயில் வைத்தால் kulfi மாதிரி இருக்கும்.

இதில் நான் பாதம் பால் மிக்ஸ் பயன்படுத்தி இருக்கின்றேன். அதற்கு பதில் விரும்பினால் 4 முந்திரி + 4 பாதம் பருப்பினை சிறிது சக்கரை + 1 ஏலக்காய் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து சேர்த்து கொள்ளவும்.

Linking this post to "Friendship 5 series" started by Geetha Achal & Savitha...


4 comments:

Savitha Ramesh said...

Romba nalla irukku Geetha. Arumayana idea.

Veena Theagarajan said...

Looks so yum! creamy and addictive rice dessert

nandoos Kitchen said...

looks delicious

sangeethas creations said...

looking yummy akka... super

Related Posts Plugin for WordPress, Blogger...