Never Fail Vanilla Cake Recipe - Super Moist Vanilla Cake - Christmas Recipes - வெனிலா கேக்


print this page PRINT

எளிதில் செய்ய கூடிய கேக் இது...கண்டிப்பாக கொடுத்துள்ள அளவில் செய்தால் கேக் நன்றாக வரும்.

இதில் முட்டை சேர்த்து செய்து இருக்கின்றேன். 1 முட்டை(வெள்ளை கரு + மஞ்சள் கரு ) + இன்னொரு முட்டையின் வெள்ளை கரு மட்டும் சேர்த்து இருக்கின்றேன். பெரிய முட்டை என்றால் 1 போதும்.

நீங்களும் செய்து பார்த்துவிட்டு உங்கள் அன்பான கருத்தினை தெரிவிக்கவும்.. நன்றி சவிதா...

(மேஜை கரண்டி - Table Spoon, தே.கரண்டி - Teaspoon
1 Cup - 16 Tablespoon , 1 Tablespoon - 3 Teaspoon )

(கொடுத்துள்ள அளவு - Bakes ONE 8” அல்லது 9”  Cake )

கேக் செய்ய தேவைப்படும் நேரம் : 30 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
   .  மைதா மாவு - 1 கப் + 2 மேஜை கரண்டி
   .  பேக்கிங் பவுடர் - 1 + 3/4 தே.கரண்டி
   .  உப்பு - 1/2 தே.கரண்டி
        
   .  சக்கரை - 3/4 கப்
   .  வெண்ணெய் / Butter - 4 மேஜை கரண்டி (2 Oz / 1/4 கப்)
       
   .  வென்னிலா / Vanilla Extract - 3/4 தே.கரண்டி
   .  முட்டை - 1  முழு முட்டை + 1 முட்டையின வெள்ளை கரு மட்டும் (மஞ்சள் வேண்டாம்)
       (1 Whole egg + White part alone  from 1 egg)
         
   .  பால் - 1/2 கப் + 2 மேஜை கரண்டி



செய்முறை :
.  அவனை 350 Fயில் மூற்சூடு செய்து கொள்ளவும். மைதா மாவு + பேக்கிங் பவுடர் + உப்பு சேர்த்து 2 - 3 தடவை சலித்து வைக்கவும்.

.  பட்டரினை Room Temperatureயில் வைக்கவும். சக்கரையுடன் பட்டரினை சேர்த்து நன்றாக அடித்து கொள்ளவும். 


.  இத்துடன் முட்டை +  Vanilla Extract சேர்த்து நன்றாக 2 - 3 நிமிடங்கள் Beaterயினால் அடிக்கவும்.


.  பிறகு பால் சேர்த்து நன்றாக திரும்பவும் அடித்து கொள்ளவும். இப்பொழுது கலவை மிகவும் Fluffyயாக இருக்கும். (மிகவும் Fluffyயாக இருந்தால் கேக் ரொம்ப நன்றாக வரும்.)


.  இப்பொழுது அடித்து வைத்துள்ள கலவையில் சலித்த மைதா மாவினை சேர்த்து மெதுவாக கரண்டியினால் கலந்து கொள்ளவும். (இந்த step செய்யும் பொழுது அக்‌ஷ்தா, Gently Fold the mix without any lumps என்று சொல்லி அவளே கலந்துவிட்டாள்.)


.  8 or 9‘ Inch Cake panயில் முதலில் சிறிது பட்டர் தடவி கொள்ளவும். அதன் மீது 1 மேஜை கரண்டி அளவு மைதா மாவினை எடுத்து Dust செய்து கொள்ளவும். 

.  அதில் கலந்து வைத்துள்ள கலவையினை ஊற்றி 2 - 3 தடவை Cake Panயினை தட்டி கொள்ளவும். இப்படி செய்தால் உள்ளே உள்ள காற்று நீங்கிவிடும்.


.  மூற்சூடு செய்த அவனில் இதனை வைத்து 350 Fயில் 15 - 18 நிமிடங்கள் வேகவிடவும்.

.  கேக் வெந்து உள்ளதா என்பதினை பார்க்க ஒரு Toothpickயினை கேக் நடுவில் விட்டு எடுத்தால் எதுவும் ஒட்டாமல் கேக் வெந்துவிட்டது. அல்லது மேலும் சிறிது நேரம் வேகவிடவும்.


.  கேக் வெந்த பிறகு வெளியில் எடுத்து அதனை Wire Rackயில் வைத்து சிறிது நேரம் ஆறவிடவும்.

.  விரும்பிய வடிவத்தில் சிறிய துண்டுகளாக வெட்டி பறிமாறவும். இது சுவையான எளிதில் செய்ய கூடிய கேக் ..


2 comments:

Farin Ahmed said...

Super moist, spongy cake..love it to finish the full plate

Savitha Ganesan said...

Perfectly made vanilla Cake Geetha. Thanks for trying the recipe.

Related Posts Plugin for WordPress, Blogger...