டூட்டி ப்ரூட்டி - Homemade Tutti Frutti Recipe - Candied Fruits / Dry Fruit Mix for Bakingprint this page PRINT

வீட்டிலேயே எளிதில் செய்ய கூடிய Tutti Frutti இது. அவரவர் விருப்பத்திற்கு ஏற்ற size & Colorயில் இதனை செய்யலாம்.

இந்த Tutti Fruttiயினை சேகரி செய்யும் பொழுது சேர்த்தால் நன்றாக இருக்கும். அதே மாதிரி Dil Pasand, Coconut Buns, Fruit Cake, Christmas Cake போன்றவையினை செய்யும் பொழுது சேர்த்தால் கூடுதல் சுவையுடன் இருக்கும்.

இதனை பப்பாளி காயில் இருந்து செய்து இருக்கின்றேன். (பப்பாளி காய். பப்பாளி பழம் அல்ல). விரும்பினால் இதில் Vanilla Essence 1 - 2 துளி சேர்த்து கொள்ளலாம். 

இதற்கு கண்டிப்பாக நல்ல Brand Color பவுடரினை சேர்க்கவும் அப்பொழுது தான் கலர் காயந்த பிறகு ஒன்றுடன் ஒன்று ஒட்டாமல் இருக்கும். நீங்களும் இதனை செய்து பார்த்துவிட்டு உங்கள் கருத்தினை தெரிவிக்கவும். நன்றி மஞ்சளா...

செய்ய தேவைப்படும் நேரம் : 30 நிமிடங்கள்
காய தேவைப்படும் நேரம் : 1 - 2 நாள்
தேவையான பொருட்கள் :
  .  பப்பாளி காய் - 1 (பொடியாக நறுக்கியது சுமார் 3 கப்)
  .  சக்கரை - 1 கப்
  .  Food Colors - Orange, Green, Yellow, Pink


செய்முறை :
 பப்பாளி காயின் தோல் + விதைகளை நீக்கி கொள்ளவும்.

 அதன்பிறகு அதனை மிகவும் சிறிய சிறிய துண்டுகளாக வெட்டி கொள்ளவும்.


 ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்கவிடவும். நன்றாக கொதிக்கும் தண்ணீரில் வெட்டி வைத்துள்ள சிறிய துண்டுகளை போட்டு 3 - 4 நிமிடங்கள் வேகவிடவும்.

 அடுப்பில் இருந்து பாத்திரத்தினை எடுத்து தனியாக வைக்கவும்.  தண்ணீரில் அப்படியே பப்பாளி துண்டுகள் மேலும் 3 - 4 நிமிடங்கள் இருக்கட்டும்.


 பிறகு அதில் இருக்கும் தண்ணீர் எல்லாவற்றினையும் வடிகட்டி கொள்ளவும்.

 ஒரு பாத்திரத்தில் 1 கப் சக்கரை + 1 கப் தண்ணீர் ஊற்றி சக்கரை கரையும் வரை வேகவிடவும்.

 அதன் பிறகு அதில் வடிக்கட்டி வைத்து இருக்கும் பப்பாளியினை சேர்த்து நன்றாக கெட்டியாகும் வரை வேகவிடவும். (அதாவது சக்கரை ஒரு கம்பி பதம் வரும் வரை வேகவிடவும். விரும்பினால் இந்த சமயம் Vanilla Essence கலந்து கொள்ளலாம்.)


 பிறகு 4 கப்பில் தனி தனியாக வைத்து விரும்பிய கலர் சேர்த்து கலந்து கொள்ளவும். (கவனிக்க : அவரவர் விருப்பத்திற்கு கலர் சேர்த்து கொள்ளலாம்.)

 அதனை அப்படியெ சுமார் 12 - 24 மணி நேரம் ஊறவிடவும். (இப்படி ஊறவைப்பதால் கலர் பப்பாளியுடன் நன்றாக கலந்து இருக்கும்.)


 பிறகு ஊறிய துண்டுகளை தனி தனி தட்டில் உலறவிடவும் / காயவிடவும். (குறிப்பு : Fanயிற்கு அடியில் /  Wire Rackயில் வைத்தால் சீக்கிரமாக காய்ந்துவிடும்.சுமார் 1 நாள் ஆகும் இது நன்றாக காய)

 நன்றாக காய்ந்த பிறகு ஒரு டப்பாவில் போட்டு வைத்து கொள்ளலாம். விரும்பினால் சிறிது Honeyயினை காயந்த துண்டுகளுடன் சேர்த்து கலந்து கொள்ளலாம்.

 எளிதில் வீட்டிலேயே செய்ய கூடிய Tutti Frutti ரெடி. 
க்ரிஸ்பி க்ரீன் பீன்ஸ் ப்ரை - TGI Friday's Crispy Green Beans Fry Recipe - Restaurant Style Recipe


print this page PRINT

TGI Friday's மிகவும் பிரபலமான Crispy Breans Fry மாதிரி வீட்டிலேயே செய்தது...குழந்தைகளுக்கு இப்படி செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவாங்க...

பொதுவாக இதனை French Fries மாதிரி எண்ணெயில் தான் பொரிப்பாங்க...நான் எண்ணெயில் பொரிக்காமல் அவனில் பேக் செய்தேன்...மிகவும அருமையாக இருந்தது.

இதில், நான் Bread Crumbsயிற்காக, 3 துண்டுகள் Whole grain breadயினை மிக்ஸியில் போட்டு பொடித்து கொண்டேன். அத்துடன் Parmesan cheeseயினையும் சேர்த்தேன். (விரும்பினால் Italian Seasoning / அல்லது விருப்பமான Seasoningயினை சேர்த்து கொள்ளலாம்.)

பீன்ஸியினை சூடான தண்ணீரில் போட்டு 2 - 3 நிமிடங்கள் வேகவிட்ட பிறகு Ice waterயில் போடுவதினை Blanching Process என்று குறிப்பிடுவாங்க...இதனால் பீன்ஸின் நிறம் மாறாமல் இருக்கும். அதே போல் பீன்ஸ் மேலும் வேகாமல் (Cooking Processயினை) நிறுத்துவிடும்.

பீன்ஸினை Breadcrumbயில் பிரட்டிய பிறகு Freezerயில் வைப்பதால் பீன்ஸினை எண்ணெயில் பொரிக்கும் பொழுது பிரட்க்ரம்ஸ் கீழே விழாது.

இது மாதிரி செய்து வைத்து கொண்டால் தேவைபப்டும் நேரம் எடுத்து பொரித்து கொள்ளலாம்.

நான் இதனை எண்ணெயில் பொரிக்காமல், அவனில் 400 Fயில் 12 - 15 நிமிடங்கள் வேகவிட்டேன். இதனை Ketchup, Ranch , Dip, போன்றவையுடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும். 

நீங்களூம் செய்து பார்த்துவிட்டு உங்கள் கருத்தினை தெரிவிக்கவும்....

Preparation Time : 30 நிமிடங்கள்
சமைக்க தேவைப்படும் நேரம் : 15 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
    .  பீன்ஸ் - 1/2 கிலோ
    .  மைதா மாவு - 1/2 கப்
    .   ப்ரெட் க்ரம்ஸ் - 3 கப்
    .  பார்மஜான் சீஸ் - 1/2 கப்
    .  உப்பு - தேவையான அளவு
    .  எண்ணெய் - பொரிப்பதற்கு

செய்முறை :


.  பீன்ஸை சுத்தம் செய்து கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்கவிடவும்.

.  தண்ணீர் நன்றாக கொதிக்கும் பொழுது அதில் இந்த பீன்ஸ் + 1 தே.கரண்டி உப்பு சேர்த்து 3 - 4 நிமிடங்கள் வேகவிடவும்.

.  பீன்ஸ் வேகும் சமயம்,வேறொரு பாத்திரத்தில் குளிர்ந்த தண்ணீர் ஊற்றி வைத்து கொள்ளவும். அதில் வேகவைத்த பீன்ஸினை தண்ணீர் இல்லாமல்போட்டு 5 நிமிடங்கள் வைக்கவும். 


(கவனிக்க : குளிர்ந்த தண்ணீருக்கு Ice Cubes போட்டு கொள்ளவும். ) இப்படி செய்வது Blanching முறை. இதனால் பீன்ஸ் மேலும் வேகாமல் இருக்கும். அதே மாதிரி கலரும் மாறாமல் இருக்கும்.

.  3 - 4 நிமிடங்கள் கழித்து பீன்ஸினை தண்ணீரில் இருந்து வடிக்கட்டி கொள்ளவும். மைதாவினை 1 கப் தண்ணீர் கலந்து கரைத்து கொள்ளவும். இதனை பீன்ஸ் மீது ஊற்றி பிரட்டி விடவும். (விரும்பினால் இதற்கு பதிலாக egg Whitesயினை பயன்படுத்து கொள்ளலாம்.)


.  Bread Crumbs + Parmesan Cheese  இரண்டினையும் கலந்து கொள்ளவும்.  மைதா மாவில் பிரட்டி வைத்துள்ள பீன்ஸினை எடுத்து அதனை இந்த Bread Crumbs பிரட்டி எடுத்து தனியாக வைக்கவும்.

.  இதே போல எல்லா பீன்ஸினையும் செய்து அதனை தனிதனியாக தட்டில் அடுக்கி கொள்ளவும்.


.  பிறகு அதனை அப்படியே Freezerயில் எடுத்து குறைந்தது 1 - 2 மணி நேரம் வைத்து கொள்ளவும். (குறிப்பு : இப்படி Freezerயில் வைப்பதால் எண்ணெயில் பொரிக்கும் பொழுது  Bread Crumbs பீன்ஸில் இருந்து உதிராமல் இருக்கும். )

.  அவனை 400Fயில் முற்சூடு செய்து கொள்ளவும். அவனில் வைக்கும் தட்டில் Freezerயில் இருந்து எடுத்து உடனே அடுக்கி கொள்ளவும். அதன் மீது சிறிது எண்ணெயினை Spray செய்து கொள்ளவும். (கவனிக்க : விரும்பினால் எண்ணெயினை காய வைத்து பொரித்து கொள்ளவும்.)

.  இதனை அவனில் வைத்து 400Fயில் சுமார் 15 - 20 நிமிடங்கள் வேகவைத்து கொள்ளவும்.


.  சுவையான சத்தான க்ரீன் பீன்ஸ் ப்ரை ரெடி. இதனை சாஸ் அல்லது Cucumber Raita/Sauce வைத்து பறிமாறவும்.

கவனிக்க :
பீன்ஸின் நுனி, கடைசி பகுதியினை நீக்கிவிடவும்.

தண்ணீர் நன்றாக கொதித்த பிறகு பீன்ஸினை போட்டு வேகவிடவும்.

Bread Crumbsயிற்கு பதிலாக Italian Breadcrumbsயினை பயன்படுத்தலாம். அல்லது பிரட் துண்டுகளை மிக்ஸியில் போட்டு பொடித்து கொள்ளலாம்.

இதனை Freezerயில் 2 - 3 நாட்கள் முன்னதாக செய்து வைத்து கொள்ளலாம். விருந்தினர் அல்லது குழந்தைகள் School முடிந்து வரும் சமயம் இதனை பொரித்து கொடுக்கலாம்.


Low Fat /Low Calorieயிற்காக இதனை எண்ணெயில் பொரிக்காமல் அவனில் Bake செய்து கொள்ளவும்.சேலம் மீன் குழம்பு - Salem Meen Kuzhambu Recipe / Fish Kuzhambu - Non-veg Fish Gravy - Guest Post for Savitha's Kitchen


 என்னுடைய தோழி, திருமதி. சவிதா ரமேஷ்யிற்கு Guest Postயிற்காக இந்த ரெஸிபியினை செய்தேன். மிகவும் சுவையான வித்தியசமான மீன் குழம்பு..

சவிதா, முதன்முதலாக என்னுடைய KFC Chicken குறிப்பினை பார்த்து செய்ததாக எனக்கு மெயில் செய்து இருந்தாங்க...அப்பொழுது தான் முதன்முதலாக நானும் சவிதாவும் பேசினோம்..அப்பறம் அடிக்கடி பேசுவோம்..இப்பொழுது  தினம் பேசிவிடுகிறோம்...சுமார் 3 வருடங்களுக்கு மேலாக இருவரும் மிகவும் நெருங்கிய தோழிகளாக இருக்கின்றோம்....

சவிதாவுடன் பேசும் பொழுது ரொம்ப வருடமாக பேசுவது மாதிரி இருக்கும்...Akshata இப்பொழுது எல்லாம் சவிதா Aunty பேசினாங்களா என்று கேட்கின்ற அளவிற்கு ஆகிவிட்டது....

சவிதா  Non-Veg சமையல், Baking இரண்டிலும் ரொம்ப சூப்பராக செய்வாங்க...அவங்களிடம் இதில் எந்த Doubtஆக இருந்தாலும் சொல்வாங்க...

அவங்களுடைய ப்ளாகில் நிறைய பாரம்பரிய தமிழர் சமையல் குறிப்புகள் இருக்கின்றது....அவங்க  ப்ளாகினை கண்டிப்பாக சென்று பாருங்க...

இந்த குழம்பின் Specialயே இதில்,
மிளகு,சீரகம், சின்ன வெங்காயம் எல்லாம் வறுத்து அரைத்து சேர்ப்பது தான். அதே மாதிரி இதில் தாளிக்கும் பொழுது சீரகத்தினை சேர்த்து தாளிக்க வேண்டும்.

சேலம் மீன் குழம்பினை செய்து பார்த்துவிட்டு உங்கள் கருத்தினை தெரிவிக்கவும்... Recipeயினை காண இங்கே க்ளிக் செய்யவும்...


கருணைகிழங்கு வறுவல் - Karunai Kizhangu Varuval Recipe - Senai Kizhangu Fry - Easy Varuval recipe


சமைக்க தேவைப்படும் நேரம் : 15 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
  .  கருணைக்கிழங்கு - 1/4 கிலோ
  .  புளி - சிறிய கொட்டைபாக்கு அளவு (அல்லது ) புளி பேஸ்ட் - 2 சிட்டிகை அளவு
  .  எண்ணெய் - 2 மேஜை கரண்டி அளவு
  .  கருவேப்பிலை - 5 - 6 இலை (கடைசியில் தூவ)

சேர்க்க வேண்டிய தூள் வகைகள் :
  .  மஞ்சள் தூள் - 1/4 தே.கரண்டி
  .  மிளகாய் தூள் - 3/4 தே.கரண்டி
  .  சோம்பு தூள் - 1/4 தே.கரண்டி
  .  உப்பு - தேவையான அளவு

செய்முறை :
.  கருணைகிழங்கின் தோலினை நீக்கி ஒரே அளவிலான துண்டுகளாக வெட்டி கொள்ளவும்..  வெட்டிய துண்டுகளை கழுவி கொள்ளவும். அது முழ்கும் அளவு தண்ணீரில் போட்டு Microwaveயில் 3 - 4 நிமிடங்கள் வேகவைத்து கொள்ளவும்.


(கவனிக்க : Microwaveயிற்கு பதிலாக பாத்திரத்தில் போட்டு அடுப்பிலும் வேகவைத்து கொள்ளலாம். அதிகம் வேகவைக்க வேண்டாம். )

.  பிறகு அதில் இருந்த தண்ணீர் எல்லாம் நீக்கிவிடவும். அத்துடன் புளி பேஸ்ட் அல்லது கெட்டியாக கரைத்த புளி கரைசல் + சேர்க்க கொடுத்துள்ள தூள் வகைகள் சேர்த்து கலந்து கொள்ளவும்.


.  இதனை 3 - 5 நிமிடங்கள் ஊறவைத்து கொள்ளவும். தோசை கல்லினை (அ) Non-stick Panயினை சூடுபடுத்தி கொள்ளவும்.

.  அதில் சிறிது எண்ணெய் ஊற்றி இந்த துண்டுகளை ஒன்றுடன் ஒன்று ஒட்டாமல் வைத்து வேகவிடவும்.


.  ஒரு பக்கம் நன்றாக வெந்த பிறகு அதனை திருப்பி போட்டு வேகவிடவும்.


.  கடைசியில் கருவேப்பிலை தூவி விடவும். சுவையான கருணைகிழங்கு வறுவல் ரெடி. இதனை சாம்பார், குழம்பு, கலந்த சாதம் போன்றவையுடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.


நெல்லூர் மசாலா ரைஸ் - Nellore Masala Rice - Simple Lunch Box Menu


print this page PRINT

மிகவும் எளிதில் செய்ய கூடிய வித்தியசமான ஸ்பைசியான கலந்த சாதம்.

இதன் சுவையே இதில் நாம் வறுத்து பொடிக்கும் (எள், தனியா, காய்ந்தமிளகாய்) பொருட்களில் தான் இருக்கின்றது.

எப்பொழுதும் செய்யும் தக்காளி சாதம் ஸ்டைல் தான் ...ஆனால் கடைசியில் இந்த பொடியினை தூவி சாதம் கிளறினால் வித்தியசமான சுவையுடன் நன்றாக இருக்கும். நன்றி விஜி.

சமைக்க தேவைப்படும் நேரம் : 10 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
. வேகவைத்த சாதம் - 3 கப்
மஞ்சள் தூள் - 1/4 தே.கரண்டி
உப்பு - தேவையான அளவு

தாளிக்க :
எண்ணெய் - 1 மேஜை கரண்டி
கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு - தாளிக்க
வெங்காயம் - 1 
தக்காளி - 1
கருவேப்பிலை - 5 இலை

வறுத்து பொடிக்க :
எள் - 2 மேஜை கரண்டி
தனியா - 2 மேஜை கரண்டி
காய்ந்த மிளகாய் - 4 - 6 (காரத்திற்கு ஏற்ப)

செய்முறை :
வெங்காயம் + தக்காளியினை நீளமாக நறுக்கி வைக்கவும். வறுக்க கொடுத்துள்ள பொருட்கள் அனைத்துமே ஒன்றாக சேர்த்து 1 - 2 நிமிடங்கள் வறுத்து கொள்ளவும்.

வறுத்த பொருட்களை மிக்ஸியில் போட்டு பொடித்து கொள்ளவும்.


கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு சேர்த்து தாளித்து கொள்ளவும். இத்துடன் வெங்காயம் சேர்த்து  வதக்கி கொள்ளவும்.

அத்துடன் தக்காளி + மஞ்சள் தூள் + உப்பு சேர்த்து மேலும் 2 நிமிடம் வதக்கி கொள்ளவும்.


இதில் பொடித்து வைத்துள்ள பொடியினை 1 - 2 மேஜை கரண்டி அளவு சேர்த்து கிளறவும்.


பின்னர் வேகவைத்துள்ள சாதத்தினை இதில் சேர்த்து அனைத்து சேருமாறு கிளறிவிடவும்.


ஈஸியான Lunch Box Rice ரெடி. இத்துடன் எதாவது வறுவல் அல்லது சிப்ஸுடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.


25 விதமான Non-veg பிரியாணி வகைகள் - 25 Types of Chicken Biryani - Collection of Non-veg Biryani

விதவிதமான சிக்கன் பிரியாணி வகைகள்... நீங்களும் செய்து பார்த்துவிட்டு உங்கள் கருத்தினை தெரிவிக்கவும்...


வேலூரில் மிகவும் பிரபலமான  ஹோட்டல் பிரியாணி இது. இதில் இஞ்சி விழுது,பூண்டு விழுது என்று தனிதனியாக சேர்க்க வேண்டும். அதே போல சிக்கன் வதங்கிய பிறகு வெங்காயம், தக்காளி சேர்க்க வேண்டும். தயிர் அதிகம் சேர்க்க கூடாது.


மிகவும் பிரபலமான Traditional Arab Rice . மிகவும் கரமாக இல்லாமல் Chicken Flavorயுடன் இந்த சாதம் இருக்கும். இதில் Dry Lemon பயன்படுத்துவதால் வித்தியசமாக சுவையாக இருக்கின்றது.


இந்த பிரியாணியில் சின்ன வெங்காயத்தினை கசகசாவுடன் சேர்த்து அரைத்து சேர்ப்பதால் சூப்பரான சுவையுடன் இருக்கும். அதே மாதிரி இதில் பச்சைமிளகாயினையும் சிறிது அரைத்து சேர்த்து கொள்வோம்.


இந்த பிரியாணியில் பழுத்த தக்காளியினை கண்டிப்பாக பயன்படுத்த வேண்டும். இதில் தயிர் சேர்க்க தேவையில்லை. சிக்கனுடன் அரிசி சேர்த்த பிறகு தான் புதினா,கொத்தமல்லியினை சேர்க்க வேண்டும்.


இதில் தேங்காய் எண்ணெயினை தாளிக்க பயன்படுத்த வேண்டும். தேங்காய் + கசகசாவுடன் முந்திரி, பாதாம் போன்றவையினை சேர்த்து அரைத்து சமைப்போம். 


ஐம்பெரும் காப்பியங்களில் இந்த உணவினை குறிப்பிட்டு இருக்கின்றாங்க...இதில் சின்ன வெங்காயத்துடன் மிளகு, சீரகம், பச்சை மிளகாயினை அரைத்து செய்ய வேண்டும்.

இதில் சிக்கனுடன் சேர்த்து எல்லா பொருட்களையும் ஊறவைத்து கொள்ள வேண்டும். எதையும் வதக்க தேவையில்லை. அதே மாதிரி தக்காளி சேர்க்க தேவையில்லை.

இந்த பிரியாணியில் அனைத்து பொருட்களையும் அரைத்து சேர்க்க வேண்டும். அத்துடன் தேங்காய் பால் சேர்த்து சமைப்பதால் கூடுதல் சுவையுடன் இருக்கும்.


இதில் வெள்ளை மிளகு தூளினை பயன்படுத்த வேண்டும். பூண்டினின் அளவினை விட இஞ்சியின் அளவு குறைவாக இருக்க வேண்டும்.


இதில் முள் இல்லாத மீன் துண்டுகளை பயன்படுத்து செய்து இருக்கின்றேன். இதில் முதலில் மீனை சிறிது பெரித்து கொண்டு , அதே எண்ணெயில் பிரியாணி தாளித்து தம் முறையில் செய்ய வேண்டும்.


11. பயேயா - Paella 
இது Spain நாட்டின் National Dish. இது One Pan Meal வகையினை சேர்த்தது... இதில் காய்கள் , சிக்கன் மற்றும் கடல் உணவுகள் சேர்த்து சமைப்பாங்க...இதில் குங்குமபூ (saffron ) சேர்ப்பதால் கூடுதல் சுவையுடன் இருக்கும்.


இந்த பிரியாணியில் தக்காளி சேர்க்க தேவையில்லை. இதில் வெங்காயத்தினை நறுக்கி சேர்க்காமல், அரைத்து சேர்க்க வேண்டும்.


இதில் சிக்கன் துண்டுகளிற்கு பதிலாக சிக்கன் கீமாவினை பயன்படுத்து செய்து இருக்கின்றோம்.

இதில் தயிரினை கடைசியில் தான் சேர்க்க வேண்டும். சிக்கனை Marinate செய்ய வேண்டிய அவசியம் இல்லை.


இதில் தக்காளி சேர்க்க தேவையில்லை. நாமே அரைத்து செய்யும் பிரியாணி மசாலாவின் மற்றும் தேங்காய் பாலில் சுவை தான் இதில் இருக்கின்றது.

                         
16. ப்ரான் பிரியாணி - Prawn Biryani
இராலினை முதலில் தனியாக வறுத்து கொண்டு பிறகு பிரியாணி மசாலா செய்து அதில் சேர்த்து சாதத்துடன் சேர்த்து கிளறி தம் போட்டு வேகவிடவேண்டும்.17. அலிகார் பிரியாணி - Aligarh Biryani
இதில் புதினா, கொத்தமல்லி அல்லது எந்த வித தூள் வகைகளும் சேர்க்க தேவையில்லை. இதில் நாமே செய்யும் Chicken Stock  சேர்த்து கொண்டு சமைக்க வேண்டும். இந்த பிரியாணி வெள்ளை நிறத்தில் இருக்கும்.18. கோவை ஹோட்டல் அங்கணன் பிரியாணி - Hotel Anganan Biryani

இந்த பிரியாணியில் பூண்டினை முழு பல்லாக தான் சேர்க்க வேண்டும். காரத்திற்கு பச்சைமிளகாய் மட்டுமே சேர்க்க வேண்டும். தக்காளி சேர்க்க தேவையில்லை.19. முட்டை பிரியாணி - Egg Biryani
இதில் முட்டையினை வேகவைத்து , பிறகு அதனை பிரியாணி மசாலாவுடன் சேர்த்து சாதத்தினை வேகவைத்து செய்யும் முறை...


20. நீலகிரி சிக்கன் பிரியாணி - Nilgiri Chicken Biryani
இதில் வெங்காயத்தினை சிறிது தண்ணீரில் வேகவைத்து அத்துடன் புதினா,கொத்தமல்லி, பச்சைமிளகாயினை சேர்த்து அரைத்து மசாலாவில் சேர்க்க வேண்டும். இதில் தக்காளி சேர்க்க தேவையில்லை.21. சிக்கன் ஸ்டாக் பிரியாணி - Chicken Stock Biryani
சிக்கன் பிரியாணி செய்யும் பொழுது வெரும் தண்ணீர் மட்டும் சேர்த்து செய்வதற்கு பதிலாக சிக்கன் ஸ்டாக் சேர்த்து செய்தால் கூடுதல் சுவையுடன் இருக்கும்.22. தலப்பாகட்டி பிரியாணி - Thalapakatti Biryani
இந்த பிரியாணியில் வெங்காயம், தக்காளி, புதினா+ கொத்தமல்லி என்று அனைத்துமே தனி தனியாக அரைத்து கொள்ள வேண்டும். அதே போல ஒரு பொருள் வதங்கிய பிறகு தான் அடுத்ததினை சேர்த்து வதக்க வேண்டும். மிகவும் சுவையான பிரியாணி..23. ஸ்பெஷல் மீன் பிரியாணி - Special Fish Biryani
இதில் மீன் துண்டுகளை இரண்டு முறை கடாயில் போட்டு Shallow Fry முறையில் வறுத்து கொண்டு, பிரியாணி மசாலாவுடன் சாதத்தினை சேர்த்து கிளறி மீன் துண்டுகளை சேர்த்து தம் போட்டு செய்ய வேண்டும். மிகவும் Richஆன சுவையுடன் இருக்கும்.24. சிக்கன் தம் பிரியாணி -  Chicken Dum Biryani
இது மிகவும் சிம்பிளாக ஈஸியான சிக்கன் தம் பிரியாணி முறை. அனைவரும் எளிதில் செய்ய கூடிய முறை.25. பகாறா கானா - Hyderabad Bagara Khana
இதனை சிக்கன் க்ரேவி அல்லது எதாவது குழம்புடன் சேர்த்து சாப்பட மிகவும் சுவையாக இருக்கும். இது சிம்பிள் ஸ்பெஷல் நெய் சோறு மாதிரி இருக்கும். குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவாங்க...Related Posts Plugin for WordPress, Blogger...