பன்னீர் ரைஸ் - Paneer Rice Recipe - Healthy Lunch Box Menu


print this page PRINT

எளிதில் செய்ய கூடிய சத்தான கலந்த சாதம் இது. குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவாங்க..

இதில் காரத்திற்கு பச்சைமிளகாய் மட்டும் தான் சேர்த்து இருக்கின்றேன். அதே மாதிரி இதில் விரும்பினால் சிறிது இஞ்சி சேர்த்தால் கூடுதல் சுவையுடன் இருக்கும்.

பன்னீரை துறுவதற்கு பதிலாக சிறிய துண்டுகளாக கூட வெட்டி சேர்க்கலாம்.

நீங்களூம் செய்து பார்த்துவிட்டு உங்கள் கருத்தினை தெரிவிக்கவும்.

சமைக்க தேவைப்படும் நேரம் : 5 - 8 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
   .  வேகவைத்த சாதம் - 2 கப்
   .  பன்னீர் துறுவியது - 1 கப்
   .  வெங்காயம் - 1 சிறியது
   .  பச்சைமிளகாய் - 3
   .  கருவேப்பிலை - 5 இலை
   .  கொத்தமல்லி - கடைசியில் தூவ

   .  மஞ்சள் தூள் - 1/4 தே.கரண்டி
   .  உப்பு - தேவையான அளவு

தாளிக்க :
   .  எண்ணெய் - 1 மேஜை கரண்டி
   .  கடுகு - தாளிக்க
   .  உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு - 1/2 தே.கரண்டி
   .  சீரகம் - 1 சிட்டிகை அளவு
   .  பெருங்காயம் - சிறிதளவு

செய்முறை :
. வெங்காயத்தினை நீளமாக வெட்டி வைக்கவும். பச்சைமிளகாயினை இரண்டாக கீறி கொள்ளவும். பன்னீரை துறுவி கொள்ளவும்.  

கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் கடுகு + உளுத்தம்பருப்பு + கடலைப்பருப்பு + சீரகம் + பெருங்காயம் சேர்த்து தாளிக்கவும்.


அத்துடன் வெங்காயம் + பச்சை மிளகாய் + கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் சிறிது வதங்கிய பிறகு மஞ்சள் தூள் + தேவையான அளவு உப்பு சேர்த்து மேலும் 1 - 2 நிமிடங்கள் வதக்கவும்.


வெங்காயம் நன்றாக வதங்கிய பின் அதில் துறுவிய பன்னீர் சேர்த்து நன்றாக கலந்து மேலும் 1 - 2 நிமிடங்கள் வேகவிடவும்.


கடைசியில் வேகவைத்த சாதம் + கொத்தமல்லி சேர்த்து கிளறிவிடவும்.


சுவையான சத்தான ரைஸ் ரெடி. இதனை வறுவல், சிப்ஸ் போன்றவையுடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.


0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...