Heart shaped Colored Pancakes - Kids Heart Shaped Food Ideas


print this page PRINT
இது எளிதில் செய்ய கூடிய Heart shaped Colored Pancakes. குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவாங்க..

இதில் நான் Heart shapeயில் செய்து இருக்கின்றேன். விரும்பினால் குழந்தைகளுக்கு விரும்பிய வடிவத்தில், அதே மாதிரி கலரிலும் செய்து கொடுக்கலாம்.

அதே மாதிரி கலர் மிக்ஸியினை பயன்படுத்தாமல் Carrot, Beets, Spinach என்று தனிதனியாக அரைத்து சேர்த்தால் Orange, pink, Green என்று கலர் சேர்த்து கொள்ளலாம். 

நீங்களும் செய்து பார்த்துவிட்டு உங்கள் அன்பான கருத்தினை தெரிவிக்கவும்...

Pancake செய்ய தேவைப்படும் நேரம் : 5 - 8 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
  .  Pancake Mix - 2 cups
  .  Food Colors - Red, Pink (any color of your Choice)
  .  எண்ணெய் - சிறிதளவு



செய்முறை :
.   இரண்டு பாத்திரத்தில் தலா 1 கப் Pancake Mix எடுத்து வைக்கவும். 

.   ஒரு பவுலில் மட்டும் கலர் சேர்த்து  Pancake Mixயில் கொடுத்துள்ள முறைபடி கலந்து கொள்ளவும். (நான் எப்பொழுதும் பால் மட்டும் தான் சேர்த்து  Pancake Mixயினை கலக்குவேன். விரும்பினால் பாதி முட்டை சேர்த்து கொள்ளலாம். )


.   தோசை கல்லினை மிதமான சூட்டில் சூடுபடுத்து வைகக்வும். (அதிகம் சூடாக இருந்தால் சீக்கிரமாக கருகிவிடும். உள்ளேயும் வெந்து இருக்காது. )

.   கல் சூடானதும், அதில்  Pancakeயினை ஊற்றி வேகவிடவும். ஒரு பக்கம் நன்றாக வெந்த பிறகு அதனை திருப்பி போட்டு வேகவிடவும். 

 (1 குட்டி கரண்டி கலந்து வைத்த Pancake கலவையினை தோசை பனில் ஊற்றிய பிறகு அதுவே பரவி கொள்ளவும். தோசையினை தேய்பது போல தேய்க்க கூடாது. )



.   அதே மாதிரி கலர் Pancakeயினை ஊற்றி வேகவிடவும். ஒரு பக்கம் நன்றாக வெந்த பிறகு அதனை திருப்பி போட்டு வேகவிடவும். 
(நான் முதலில் Pink கலரினை சேர்த்து கலந்தேன். ஆனால் அதனை விட ஆரஞ்ச் ரெட் கலர் மிகவும் colorfulஆக இருந்தது. )

.   இப்பொழுது Pancake எல்லாம் ரெடியாகவிட்டது. இப்பொழுது Heart Shaped Cookie Cutterயினை வைத்து Pancakeயினை வெட்டி கொண்டு அப்படியே பறிமாறலாம்.

.   விரும்பினால் இரண்டு வேற கலரில் படத்தில் இருப்பது போல Heart Shaped Pancakeயினை குழந்தைகளுக்கு கொடுக்கலாம். 


.   குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவாங்க...எளிதில் செய்ய கூடிய  Heart shaped Colored Pancakes ரெடி...



Linking this post to "Friendship 5 series" started by Geetha Achal & Savitha...


0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...