கதம்ப சட்னி - Kathamba chutney - Kadamba Chutney Recipe - Sidedish for Idli / Dosai


print this page PRINT
இந்த சட்னியில் முதலில் தேங்காய் + பச்சைமிளகாயினை சேர்த்து அரைத்து கொள்ளவும்.

அத்துடன் வதக்கிய பொருட்கள் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும். 

சுவையான எளிதில் செய்ய கூடிய சட்னி ரெடி. நீங்களும் செய்து பார்த்துவிட்டு உங்கள் அன்பான கருத்தினை தெரிவிக்கவும்.

சட்னி செய்ய தேவைப்படும் நேரம் :8 - 10 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
  .   வெங்காயம் - 1
  .   தக்காளி - 1
  .   தேங்காய் - 1 பெரிய துண்டு
  .   பச்சை மிளகாய் - 3
  .   கொத்தமல்லி - சிறிதளவு
  .   இஞ்சி - சிறிய துண்டு
  .   உப்பு - தேவையான அளவு

முதலில் தாளிக்க :
  .   எண்ணெய் - 1 மேஜை கரண்டி
  .   கடுகு, உளுத்தம்பருப்பு - தாளிக்க
  .   கருவேப்பிலை - 5 இலைசெய்முறை :
.  வெங்காயம் + தக்காளியினை பெரிய துண்டுகளாக வெட்டி வைக்கவும். கடாயில் 1 தே.கரண்டி எண்ணெய் ஊற்றி வெங்காயம் + தக்காளியினை வதக்கி கொள்ளவும்.

.  மிக்ஸியில் தேங்காய் + பச்சைமிளகாய் + இஞ்சி + சிறிது தண்ணீர் சேர்த்து மைய அரைத்து கொள்ளவும். 


.  இத்துடன் வதக்கிய வெங்காயம் + தக்காளி சேர்த்து Pulse Modeயில் 2 - 3 முறை அடித்து கொள்ளவும்.

.  அத்துடன் கொத்தமல்லி சேர்த்து மேலும் Pulse Modeயில் 1 - 2 முறை அடித்து கொள்ளவும்.


.  தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளித்து சட்னியில் சேர்க்கவும். அத்துடன் தேவையான அளவு உப்பு சேர்த்து கொள்ளவும்.

.  சுவையான சத்தான சட்னி ரெடி. இதனை இட்லி, தோசையுடன் சேர்த்து சாப்பிட சூப்பராக இருக்கும்.


2 comments:

ரூபன் said...

வணக்கம்
செய்முறை விளக்கத்துடன் அசத்தல் அருமை.. பகிர்வுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Farin Ahmed said...

Arumaiyana chutney akka!!! love to have it

Related Posts Plugin for WordPress, Blogger...