தேனும் தினையும் - Thenum Thinaiyum - Thinai Urundai - No Cook Recipe - Millet Recipe


எளிதில் செய்ய கூடிய சத்தான உருண்டை. இது No Cook Recipe. இதில் தினையினை கழுவி காயவைத்து அரைப்பதால் மிகவும் நன்றாக இருக்கும்.

கண்டிப்பாக தினையில் கல் இல்லாமல் பார்த்து கொள்ளவும். அதனால் கண்டிப்பாக கழுவி கொள்ளவும்.

இதில் வெல்லம் சேர்த்து இருக்கின்றேன். சில சமயம் வெல்லத்திலும் கல் இருக்கும். விரும்பினால் அதற்கு பதிலாக Brown Sugar / Coconut Sugar என்று பயன்படுத்தலாம்.

நீங்களும் செய்து பார்த்துவிட்டு உங்கள் அன்பான கருத்தினை தெரிவிக்கவும்..

ஊறவைத்து காய வைக்க : 15 - 20 நிமிடங்கள்
செய்ய தேவைப்படும் நேரம் : 5 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
  .  தினை - 1 கப்
  .  துறுவிய வெல்லம் - 1/2 கப்
  .  தேன் - 2 மேஜை கரண்டி
  .  நெய் - 2 மேஜை கரண்டி
  .  ஏலக்காய் - 1  (விரும்பினால் சேர்க்கவும்)


செய்முறை :
  .  தினையினை தண்ணீரில் 2 - 3 முறை கழுவி அதில் கல் எதுவும் இல்லாமல் பார்த்து ஒரு உலர்ந்த டவலில் தண்ணீர் வடித்து காய வைத்து கொள்ளவும்.


  .  தினையினை அப்படியே சுமார் 15 - 20 நிமிடங்கள் காயவைத்து கொள்ளவும். (நன்றாக காய வேண்டும் என்று அவசியம் இல்லை. அதனால் நிழலிலேயே காய வைக்கவும். )


  .  காயவத்த தினையினை மிக்ஸியில் போட்டு மைய பொடித்து கொள்ளவும். மாவு நன்றாக இருக்கும்.

  .  தனியாக மிக்ஸியில் வெல்லம் + ஏலக்காய் சேர்த்து பொடிக்கவும்.


  .  அரைத்த தினை மாவு + பொடித்த வெல்லம் + தேன் + நெய் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.


  .  இதனை சிறிய சிறிய உருண்டைகளாக பிடித்து வைக்கவும். (உருண்டை பிடிக்க முடியவில்லை என்றால் மேலும் சிறிது நெய் சேர்க்கவும். )


  .  சுவையான சத்தான தினை உருண்டை ரெடி.


Linking this post to "Friendship 5 series" started by Geetha Achal & Savitha...


2 comments:

ADHI VENKAT said...

சுவையான சத்தான் லட்டு. பார்க்கும் போதே ஆசையாக இருக்கு..

ரூபன் said...

வணக்கம்
செய்முறை விளக்கத்துடன் சமையல் அசத்தல் நிச்சயம் செய்து பார்க்கிறோம்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்--

Related Posts Plugin for WordPress, Blogger...