இன்ஸ்டண்ட் கோதுமை ரவா இட்லி - MTR Style Instant Wheat Rava Idli Recipe - Instant Breakfast Recipes


print this page PRINT
இது எளிதில் செய்ய கூடிய சத்தான காலை நேர சிற்றுண்டி. இந்த வாரம் Friendship 5 Seriesயில் Instant Breakfast Ideas என்ற தலைப்பில் குறிப்புகளை பார்க்கலாம்...

Instant ரவா இட்லி செய்யும் பொழுது கவனிக்க வேண்டிய சில,
எப்பொழுதும் Fine Wheat Rava / Ravaவினை பயன்படுத்தவும். Coarse Ravaவினை பயன்படுத்தினால் கூடுதலாக வேக நேரம் எடுக்கும். அதே மாதிரி தண்ணீரின் அளவிலும் வித்தியசம வரும்.

எப்பொழுதும் ரவை 1 பங்கு என்றால அதில் கண்டிப்பாக 1/2 பங்குக்கு மேல் தயிர் சேர்த்தால் தான் இட்லி நன்றாக வரும்.

பேக்கிங் சோடாவினை குறைந்தது 1/2 - 3/4 தே,கரண்டி சேர்த்தால் இட்லி மிகவும் சூப்பராக இருக்கும்.

அவரவர் விருப்பம் போல, தாளிக்கும் பொருட்களை சேர்க்கலாம். விரும்பினால் தாளிக்காமலும் இட்லி செய்யலாம்.

கலந்த மாவு ரொம்பவும் கெட்டியாக இல்லாமல் , அதே மாதிரி ரொம்பவும் தன்ணீயாக இல்லாமல் இருக்க வேண்டும். 

அதே மாதிரி ரவையினை வறுத்து / வறுக்காமலும் சேர்க்கலாம்.  இதே மாதிரி , காய்கறிகள் வைத்து செய்த Instant Oats Rava Idli / Instant Rava Idliயினையும் பார்க்கவும்...

கொடுத்துள்ள அளவில் செய்தால் 8 பெரிய இட்லிகள் வரும்.
        
நீங்களூம் செய்து பார்த்து உங்கள் அன்பான கருத்தினை தெரிவிக்கவும்.

சமைக்க தேவைப்படும் நேரம் : 15 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
  .  கோதுமை ரவை (Fine Wheat Rava)- 2 கப்
  .  தயிர் - 1 கப்
  .  தண்ணீர் - 1 கப் சிறிது கூடுதலாக (அதிகம் சேர்க்க வேண்டாம்)
  .  உப்பு - தேவையான அளவு
  .  பேக்கிங் சோடா - 3/4 தே.கரண்டி

தாளித்து சேர்க்க :
  .  முந்திரி - சிறிது அலங்கரிக்க (விரும்பினால்)
  .  எண்ணெய் - 1 மேஜை கரண்டி
  .  கடுகு - தாளிக்க
  .  உளுத்தம்பருப்பு - 1/4 தே.கரண்டி
  .  கடலைப்பருப்பு - 1/4 தே.கரண்டி
  .  இஞ்சி - 1/4 தே.கரண்டி பொடியாக நறுக்கியது
  .  பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கி வைக்கவும். )
  .  கருவேப்பில்லை - 5 இலை
  .  பெருங்காயம் - 2 சிட்டிகை
  .  மஞ்சள் தூள் - 1 சிட்டிகை அளவு விரும்பினால்


செய்முறை :
  .  தாளிக்கும் பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அதில் முதலில் முந்திரியினை போட்டு வறுத்து தனியாக வைத்து கொள்ளவும்.

  .  பிறகு அதில் தாளிக்க கொடுத்துள்ள பொருட்களில், கடுகு + கடலைப்பருப்பு + உளுத்தம்பருப்பு + இஞ்சி, பச்சை மிளகாய் , கருவேப்பிலை + பெருங்காயம் என்று ஒன்றின்பின் ஒன்றாக சேர்த்து தாளிக்கவும்,


 . இதில் கோதுமை ரவையினை சேர்த்து மேலும் 1 நிமிடம் வறுத்து கொள்ளவும். (விரும்பினால் ரவையினை வறுக்காமலும் சேர்த்து  கொள்ளலாம். )

  .  ரவையினை 2 - 3 நிமிடங்களில் ஆறவைத்து கொள்ளவும். ரவை ஆறும் சமயம், இட்லி பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்தவும். 

 .  ரவையுடன் தயிர் + தண்ணீர் சேர்த்து முதலில் கலக்கவும். அத்துடன் பேக்கிங் சோடா + தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.


  .  இட்லி வேகவைக்கும் பாத்திரத்தில் முதலில் முந்திரியினை வைத்து அதன் மீது கலந்து வைத்துள்ள மாவினை ஊற்றவும்.


  .  இட்லி தட்டினை இட்லி வேகவைக்கும் பாத்திரத்தில் வைத்து தட்டு போட்டு மூடி 8 - 10 நிமிடங்கள் வேகவிடவும்.


  . சுவையான சத்தான இட்லி ரெடி. இதனை சட்னி, சாம்பாருடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.



Linking this post to "Friendship 5 series" started by Geetha Achal & Savitha...

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...