சிக்கன் கீமா தோசை - Chicken Keema Dosai Recipe - Non-Veg Dosai Recipe


print this page PRINT
இதில் நான் சிக்கனை அரைத்து சேர்த்து இருக்கின்றேன். விரும்பினால் கடைகளில் Grounded / Minced Chickenனே கிடைக்கும். அதனை சேர்த்தும் செய்யலாம்.

எப்பொழுது கீமாவிற்கு அரைக்கும் பொழுது எலும்பு /Bone இல்லாத துண்டுகளை தான் பயன்படுத்த வேண்டும்.

அதே மாதிரி சிக்கன் கீமா செய்தவுடன், மிகவும் சூடாக இருக்கும்பொழுதே, முட்டை சேர்க்க கூடாது. கீமாவினை சிறிது நேரம் ஆறவைத்த பிறகு தான் முட்டையில் சேர்க்க வேண்டும்.

இதில் நான் இரண்டு முட்டையின் வெள்ளை கருவினை பயன்படுத்தி இருக்கின்றேன் அதற்கு பதில் 1 முழு முட்டையினை மஞ்சள் கருவோடு சேர்த்து கொள்ளலாம்.

கண்டிப்பாக முட்டையின் அளவு, கீமா கலந்த பிறகு அதிகம் இருப்பதாக பார்த்து கொள்ளவும். அப்பொழுது தான் தோசையினை திருப்பி போட்டு வேகவைக்கும் பொழுது கீமா தோசையுடன் ஒட்டி இருக்கும். இல்லை என்றால் தோசையில் ஒட்டாமல் தோசையினை எடுக்கும் பொழுது கீழே விழுந்துவிடும்.

தோசையினை திருப்பி போடாமல், தட்டு போட்டு முடி வேகவைத்தும் செய்யலாம்.

இதே மாதிரி சிக்கனிற்கு பதில் மட்டனிலும் செய்யலாம். 

நீங்களூம் செய்து பார்த்துவிட்டு உங்கள் அன்பான கருத்தினை தெரிவிக்கலாம்....சமைக்க தேவைப்படும் நேரம் : 10 - 15 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
   .  தோசை மாவு - 2 கப்
   .  எண்ணெய் - சிறிதளவு

சிக்கன் கீமா மசாலா செய்ய :
   .  சிக்கன் - 100 கிராம்
   .  எலுமிச்சை சாறு - 1 தே.கரண்டி 
   .  முட்டை வெள்ளை கரு - 2 முட்டையில் இருந்து

அரைத்து கொள்ள :
   .  வெங்காயம் - 1/2 சிறியது
   .  பூண்டு - 4 பல்
   .  கருவேப்பிலை - 5 இலை
   .  கொத்தமல்லி - சிறிதளவு
   .  பச்சை மிளகாய் - 3

சேர்க்க வேண்டிய தூள் வகைகள் :
   .  மஞ்சள் தூள் - 1/4 தே.கரண்டி
   .  மிளகாய் தூள் - 1/2  தே.கரண்டி (காரத்திற்கு ஏற்ப)
   .  கரம் மசாலா தூள் - 1/4 தே.கரண்டி
   .  உப்பு - தேவையான அளவு

செய்முறை :
   .  வெங்காயத்தினை பெரிய துண்டுகளாக வெட்டி வைக்கவும். சிக்கனை சுத்தமாக கழுவி அதனை மிக்ஸியில் போட்டு மைய அரைத்து கொள்ளவும். 

   .  நறுக்கிய வெங்காயத்துடன், பச்சைமிளகாய் + பூண்டு + கருவேப்பிலை , கொத்தமல்லி சேர்த்து கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.


   .  கடாயில் 1 மேஜை கரண்டி அளவு எண்ணெய் ஊற்றி அரைத்த் விழுதினை சேர்த்து 1 - 2 நிமிடங்கள் நன்றாக வதக்கவும்.


   .  அத்துடன் சேர்க்க கொடுத்துள்ள தூள் வகைகள் சேர்த்து கிளறிவிடவும்.


   . அதில், அரைத்த சிக்கனை சேர்த்து நன்றாக அடிக்கடி கலந்து 3 - 4 நிமிடங்கள் நன்றாக வேகவிடவும். இது நன்றாக வெந்து முட்டை பொடிமாஸ் மாதிரி இருக்கும்.


 . இப்பொழுது சிக்கன் கீமா ரெடி. அத்துடன் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து கொள்ளவும். அதனை சிறிது நேரம் ஆறவைத்து கொள்ளவும். 

 .  முட்டையின் வெள்ளை கருவினை மட்டும் தனியாக எடுத்து வைத்து கொள்ளவும். (குறிப்பு : விரும்பினால் மஞ்சள் கருவினையும் சேர்த்து கொள்ளலாம். ஆனால் நான் எப்பொழுதுமே வெரும் வெள்ளை கருவினை மட்டுமே சேர்ப்பேன். )

   .  இப்பொழுது கீமாவினை இதில் சேர்த்து Spoon வைத்து கலந்து கொள்ளவும்.


 .  தோசை கல்லினை காயவைத்து கொள்ளவும். கல் சூடானதும், அதில் தோசை மாவினை ஊற்றி தோசையினை சூடவும்.

 . மாவு ஊற்றிய பிறகு அதில் கலந்து வைத்துள்ள முட்டை கீமா கலவையினை மேலே 2 - 3 Spoon அளவு ஊற்றி பரவி விடவும்.

   .  தோசையின் மீது சிறிது எண்ணெயினை ஊற்றி 1 நிமிடம் வேகவிடவும்.


   .  ஒரு பக்கம் நன்றாக வெந்த பிறகு, அதனை திருப்பி போட்டு வேகவிடவும். (குறிப்பு : தோசையினை திருப்பி போடாமல், தட்டு போட்டு முடி வேகவைத்தும் செய்யலாம். )

   .  இப்பொழுது சுவையான சிக்கன் கீமா தோசை ரெடி.


1 comments:

தேன்மதுரத்தமிழ் கிரேஸ் said...

உங்கள் அருமையான தளம் வலைப்பதிவர் கையேட்டில் இடம்பெற வேண்டும் .
உங்களைப் பற்றிய சில விவரங்களை உடனே அனுப்புமாறு அன்புடனும் தாழ்மையுடனும் கேட்டுக்கொள்கிறோம். இது வலைப்பதிவர் விழா! வலைப்பதிவர்களே திரண்டு வாருங்கள்!
http://thaenmaduratamil.blogspot.com/2015/09/Tamil-bloggers-list-2015-handbook.html

Related Posts Plugin for WordPress, Blogger...