நார்த்தங்காய் சாதம் - Narthangai Sadam / Citron Rice Recipe - Lunch Box Rice Recipes
print this page PRINT
எலுமிச்சை சாதம் தாளிப்பது மாதிரி நார்த்தங்காயினை வைத்து செய்த கலந்த சாதம்.

எப்பொழுதும் எந்த வகை கலந்த சாதம் செய்தால் கண்டிப்பாக சாதம் உதிர் உதிரியாக இருந்தால் நன்றாக இருக்கும். 

அதே மாதிரி சாதம் வெந்தவுடனே கலந்த சாதம் செய்யாமல், வெந்த சாதத்தினை சிறிது நேரம் ஆறவைத்து செய்தால் சாதம் ஒட்டாமல் நன்றாக இருக்கும்.

எங்க வீட்டில் அம்மா, இதில் பெருங்காயம் சிறிது சேர்ப்பாங்க...ஆனால் நான் அதனை சேர்க்கவில்லை. விரும்பினால் தாளிக்கும் பொழுது சேர்த்து கொள்ளவும்.

நீங்களூம் செய்து பார்த்துவிட்டு உங்கள் அன்பான கருத்தினை தெரிவிக்கவும்...

சமைக்க தேவைப்படும் நேரம் : 5  நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
   .  வேகவைத்த சாதம் - 3 கப்
   .  நார்த்தங்காய் - 1
   .  மஞ்சள் தூள் - 1/4  தே.கரண்டி
   .  உப்பு - தேவையான அளவு

தாளிக்க :
   .  எண்ணெய் - 1 மேஜை கரண்டி
   .  கடுகு - தாளிக்க
   .  கடலைப்பருப்பு -  2 தே.கரண்டி
   .  காய்ந்த மிளகாய் - 2
   .  பச்சை மிளகாய் - 1 வெட்டி கொள்ளவும்
   .  இஞ்சி - 1/2 தே.கரண்டி பொடியாக நறுக்கியது
   .  கருவேப்பிலை - 10 இலை
   .  கொத்தமல்லி - சிறிதளவு


செய்முறை :
   .  கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் கடுகு தாளித்து அத்துடன் கடலைப்பருப்பு சேர்த்து வறுப்பட்டவுடன், இஞ்சி +பச்சை மிளகாய் + காய்ந்த மிளகாய் + கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

   .  நார்த்தங்காயினை இரண்டாக வெட்டி அதில் இருந்து சுமார் 2 - 3 மேஜை கரண்டி அளவு சாறு எடுத்து கொள்ளவும்.


 .  பிறகு,மஞ்சள் தூள் சேர்த்து ஒரு முறை கலந்து அடுப்பினை நிறுத்திவிடவும்.

   .  அதில் உடனே நார்த்தங்காய் சாறு + தேவையான அளவு உப்பு சேர்த்து கலக்கவும்.


   .  அத்துடன் வேகவைத்த சாதம் + கொத்தமல்லி இலை சேர்த்து நன்றாக கலந்து விடவும்.


   .  சுவையான நார்த்தங்காய் சாதம் ரெடி. இத்துடன் உருளை வறுவல், சிப்ஸ் போன்றவுடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.
Linking this post to "Friendship 5 series" started by Geetha Achal & Savitha...


2 comments:

umapathy sabesan said...

Very much useful information and thanks for posting.

umapathy sabesan said...

Very much useful information and thanks for posting.

Related Posts Plugin for WordPress, Blogger...